உலோக நாணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
இரண்டாயிரம் ஆண்களுக்கு முன்பே ரோமானியர் தமிழ் மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக தமிழ் இலக்கியம் கூறுகின்றது. ரோமானியர்களுடைய பொன் வெள்ளி நாணயங்கள் அதிக அளவில் தென்னிந்திய மாவட்டங்களில் கிடைத்த போதிலும் ரோமானியர் நாணயச் சாலைகளை எங்கு அமைந்தனர் என்பது புதிராகவே உள்ளது.
 
=== போர்த்துகீசியர்கள் ===
பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை சென்றடையும் வழியைக் கண்டுபிடிக்க ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு முயற்சித்தன. இறுதியில் போர்த்துக்கல் நாட்டினரான வாஸ்கோடாகாமா இம்முயற்சியில் வெற்றி கண்டார்.இதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக பாரதத்திற்கு வரத் தொங்கினர். முதன் முதலில் ஐரோப்பியர் பாரதத்தைத்தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் வந்ததாகத் தெரியவில்லை. கீழை நாடுகளுடன் முக்கியமாக இந்தியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்வதே அவர்களது பிரதான நோக்கமாக இருந்திருக்கலாம்.
இதன் அடிப்படையில் பல நிறுவனங்கள் நிறுவப்பெற்றன.இவை இந்தியாவில் பல தொழிற்சாலைகளை நிறுவி நாளடைவில் அவற்றை நிர்வகிக்கவும் தொடங்கின. இந்திய முறையைப் பின்பற்றியே நாணயங்கள் வெளியிட வேண்டியதாயிற்று. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஐரோப்பியர்கள் இவ்விதம் வெளியிட்ட பொன் அல்லது வெள்ளி பகோடாக்கள் பல கடவுள்களின் உருவங்களையும் பிறமதத்தவர்களின் சின்னங்களையும் கொண்டிருந்தன.
வரிசை 39:
பொன், வெள்ளி, செப்பு நாணயங்களின் மேல் சின்னத்தை ஒருபுறமும் சிலுவையை மறுபுறத்திலும் காணக்கூடியதாகவுமிருந்தது. பிற்காலத்தில் வெள்ளி நாணயத்தின் மேல் ஒருபக்கத்தில் மன்னனின் தலைகள் பொறித்துள்ளனர். வெள்ளி, செம்பு தவிர துத்தநாகம் போன்ற உலோகங்களிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. எனவே போர்ச்சுக்கேசிய நாணயங்களின் மேல் பாரத தேசத்தின் மொழியையோ, சின்னத்தையோ காண்பது அரிது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பொன் வராகங்களின் மேல் மன்னனின் பெயரையும் மறுபுறம் கடவுளின் உருவத்தையும் காணலாம்.
 
=== டச்சுக்காரர்கள் ===
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வந்து சேர்ந்த டச்சுக்காரர் நாகப் பட்டினம், பழவேற்காடு முதலிய இடங்களிலிருந்து பொன், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவற்றால் செய்த நாணயங்களை வெளியிட்டனர். பொன் வராகன்களின் மேல் இரைவன் உருவத்தையும் பொறித்தனர்.
 
=== பிரெஞ்சுக்காரர்கள் ===
பாரதத்திற்கு இறுதியில் வந்து சேர்ந்த பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் பாரிய தொழில் கிறுவகத்தையும் நாணய சாலையையும் நிர்மாணித்த பின் நாணயங்களை புழக்கத்திற்கு விட்டனர். சிலவற்றில் பிறைச்சந்திரன் வடிவத்தைக் கொண்ட பகோடாக்களையும் உலாவிட்டனர். வெள்ளி நாணயங்கள் பலவற்றின் மேல் ஒரு பூவிதழ் காணப்படுகின்றது. பாண்டிச்சேரிக்கு விருது வழங்கப்பட்ட ஆண்டு ஒருபுறத்திலும் காணலாம். செப்புக் காசுகளின் மேல் ஒருபுறம் புதுச்சேரி என்ற தமிழ் விருதையும் மறுபுறம் பிரெஞ்சு பூவிதழ் உருவத்தையும் அல்லது சேவல் சின்னத்தையும் காணலாம்.
 
=== பிரித்தானியர்கள் ===
பிரித்தானியரின் செப்புக்காசுகள் மிக எளிதில் கிடைத்தன. பதினேழாம் நூற்றாண்டில் நாணயங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை என்றும் பிற்காலத்தில் தான் அதிகமாக வெளிவந்தன என்றும் தெரிய வருகின்றது. தென்னிந்திய நாணயங்கள் சிறப்பன மரபுகளைக் கொண்டவை. அரச பரம்பரையினரின் சின்னங்களை வைத்து இவர்களைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். வராகனைப் பகோடா என்று மேற்கு நாட்டவர் கூறுவர். இது போர்ச்சுத்கேசிய பதத்திலிருந்து மருவியதாகவும் தெரிய வருகின்றது.
 
== நாணய சேகரிப்பு ==
பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட கால், அரை, ஒன்று, ஐந்து, பத்து மதிப்பான நாணயங்கள் மதிப்பிழந்துள்ளன. இந்நாணயங்களைப் பார்வையிட விரும்பியவர்கள் பழைய நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உடையவர் களிடம் அல்லது அருங்காட்சியகத் தில் பார்வையிடலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/உலோக_நாணயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது