பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: oc:PVC)
 
== தொங்கல் பலபடியாக்க முறையில் பிவிசி ==
உலகப் பிவிசி உற்பத்தியில் 75 விழுக்காடு தொங்கல் பலபடியாக்கல் முறையிலே தான் தொகுதிச் செயலாக்கமாக (batch process) உற்பத்தியாகிறது. இம்முறையில் தயாராகும் பாலிவைனைல் குளோரைடில் உப்பு, பால்மம் முதலான மாசுக்கள் குறைவாக இருக்கும். இது ஒரு மிகவும் பலக்கிய வழிமுறை ஆகும். நீரினுள் கலந்த வைனைல் குளோரைடு சேர்மத்தை நன்கு துருவிக் கலப்பதன் மூலம், மிக நுண்ணிய நீர்மத் துளிகளாக்கி நீரின் இடையே தொங்க விட முடியும். காப்புக்கூழ்மம் ஒன்று உருவாகி மீண்டும் இந்த வைனைல் துளிகளை ஒன்று சேர விடாமல் தடுத்துவிடும். வைனைலில் கரையக் கூடிய சில வினை முடுக்கிகள் (activators) மூலம் பலபடியாக்கம் தொடங்கப்படும். 0.06 முதல் 0.25 மி.மீ வரை விட்டமுடைய திண்மப் பலபடித் துகள்கள் தொங்கும் வைனைல் துளிகளுள் உருவாகும். பிறகு இந்தத் திண்மத் துகள்கள் நீர்ப்பகுதியில் இருந்து சிலுப்பிப் பிரிக்கப்படும். பிறகு நீரினில் கழுவிக் காய வைத்து அனுப்பப்படும். துகள் அளவும் மூலக்கூறு எடையும் முக்கியமான பண்புகள்.
 
 
== மேற்கோள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1196098" இருந்து மீள்விக்கப்பட்டது