ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: af:Hertzsprung-Russell-diagram
No edit summary
வரிசை 1:
[[படிமம்:HRDiagram.png|thumb|400px|right]]
 
'''ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்''' (''Hertzsprung–Russell diagram'') என்பது விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்கப்படம் ஆகும். இதை எச்.ஆர் விளக்கப்படம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.
 
== விளக்கப்பட விவரம் ==
 
ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது அவை அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் இடவரைபடமோ அல்ல. இவ்விளக்க வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் அவற்றின் ஒளிரும் தன்மையை, நிறத்தை, வெப்பத்தைப் பொறுத்து தமக்குரிய இடத்தைக் கொண்டுள்ளன. எண்ணற்ற விண்மீன்கள் இருந்தாலும் மனிதர்களால் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான விண்மீன்கள் இங்கே காட்டப்படுகின்றது. ஒரு புள்ளியின் அமைவிடம் இரண்டு காரணிகளை உணர்த்துகின்றன: விண்மீனின் ஒளிர்வளவு (அல்லது தனியப் பருமன்), வெப்பநிலை
 
வரி 10 ⟶ 8:
 
இவ்விளக்க வரைபடத்தின் கிடை அச்சு விண்மீனின் மேற்பரப்பு வெப்பத்தின் அளவு (கெல்வின்களில்) ஆகும். வரைபடத்தில் வெப்பநிலை கூடிய விண்மீன்கள் இடதுபக்கத்திலும் குளிர்வான விண்மீன்கள் வலது புறத்திலும் உள்ளன. விண்மீன்கள் வெப்பநிலையைப் பொறுத்து வெவ்வேறு நிறங்களை ஒளிர்வனவாக உள்ளன. ஒரு விண்மீனின் நிறமாலை வகுப்பு அதன் நிறமண்டலத்தின் வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடுகின்றது. சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. இவ்வகைப்பாடு O, B, A, F, G, K, M ஆகிய இலத்தீன் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இங்கு “O “ வெப்பம் மிகவும் கூடியது, “M” வெப்பம் குறைந்தது. “O” விலிருந்து “M” இற்குச் செல்கையில் வெப்பம் குறைந்து கொண்டு செல்கின்றது. இவற்றை வைத்தே [[விண்மீன் வகைப்பாடு|விண்மீன்கள் வகைப்படுத்தப்படுகின்றன]].
{{Star nav}}
[[படிமம்:HR-diag-ta-text-2.png|thumb|right|400px]]
விண்மீன் மோர்கன்-கீனன் வகைப்பாட்டில் ஒளிர்வளவை, விண்மீனின் ஆரையைப் பொறுத்து உரோமன் இலக்கத்தில் வகைப் படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் தமக்குரிய சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன. மிகப்பெரியனவற்றை பூதம் (giant) என்றும் சிறியனவற்றைக் குள்ளன் அல்லது குறுமீன் (dwarf) என்றும் குறிப்பிடுவதுண்டு.
 
 
ஒளிர்வளவைப் பொறுத்து பின்வருமாறு விண்மீன்கள் அழைக்கப்படுகின்றன:
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ட்சுபிரங்_–_ரசல்_விளக்கப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது