லான்சு ஆம்ஸ்டிராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதவி பறிப்பு: *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 30:
}}
 
'''லான்சு ஆம்ஸ்டிராங்''' (பிறப்பு: [[செப்டம்பர் 18]], [[1971 - ]]), ஒரு ''ஊதியம் பெறும்''- மிதிவண்டி வீரர். இவர் "டூவ ட பிரான்ஸ்" (''Tour de France'') என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை ஏழு முறை, அதாவது [[1999]] - [[2005]], தொடர்ந்து வென்று அரிய சாதனை புரிந்துள்ளார். சூலை 2005-இல் ஓய்வு பெறுவதாக அறிவித்த ஆம்ஸ்டிராங், சனவரி 2009-இலிருந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கியுள்ளார்.
 
இவர் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் எண்ணிக்கையில் மட்டுமல்ல; 1996இல் இவருக்கு வந்த [[விறைப் புற்றுநோய்]] தீவிரமடைந்து மூளை, நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு பரவிற்று. மிதிவண்டி ஓட்டுதல் என்பதே சிரமம் என்ற நிலையிலிருந்த லான்சு, தீவிர [[கீமோ சிகிச்சை]] எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். இவ்வளவுக்குப் பிறகும் உலகத்திலேயே மிகவும் கடினமான போட்டியான [[டூவ ட பிரான்ஸ்|டூவ ட பிரான்சில்]] கலந்து கொள்வதே ஒரு சாதனை - அதை ஏழு முறை தொடர்ந்து வென்ற லான்சை ஒரு அரிய வீரர் என்று கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/லான்சு_ஆம்ஸ்டிராங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது