மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
ஒட்சிசனே எல்லா மூச்சுவிடல் வளிமங்களினதும் இன்றியமையாத கூறு. மனிதர் மூச்சுவிடும்போது உள்ளிழுக்கும் வளியில் கனவளவுப்படி 78% [[நைதரசன்|நைதரசனும்]], 21% ஒட்சிசனும், 0.96% [[ஆர்கன்|ஆர்கனும்]], 0.04% காபனீரொட்சைடு, [[ஈலியம்]], நீர், பிற வளிமங்கள் என்பனவும் அடங்கியுள்ளன. நீரடி மூழ்காளர்கள் ஒட்சிசன் அல்லது ஈலியச் செறிவு கொண்ட வளிமக் கலவைகளைப் பயன்படுத்துவது உண்டு. மருத்துவக் கவனிப்பில் உள்ள நோயாளருக்கு ஒட்சிசனும், வலிநீக்கி வளிமங்களும் கலந்த கலவைகளைக் கொடுப்பது உண்டு. விண்வெளி உடைகளில் உள்ள சூழல் தூய ஒட்சிசன் ஆகும். பொதுவாகக் குறைந்த அளவு ஒட்சிசன் சூழலில் தங்கியிருக்கும் மனிதர், தூய ஒட்சிசனைக் கொண்ட அல்லது ஒட்சிசன் செறிவு மிக்க சூழல்களில் பதற்ற நிலைக்கு அல்லது [[மகிழுணர்வு நோய்]]க்கு ஆளாகக்கூடும்.
 
மூச்சுவிடலின்போது வெளியேறும் வளியில் உள்ளிழுக்கும் வளியில் இருப்பதிலும் 4-5% கூடுதலான காபனீரொட்சைடும், 4-5% குறைவான ஒட்சிசனும் இருக்கும். அத்துடன் ஆவிகளும், குறைந்த அளவிலான பிற வளிமங்களும் இருப்பதுண்டு. இவற்றுள் 5% நீராவி, மில்லியன்களில் பல பகுதிகள் [[ஐதரசன்|ஐதரசனும்]] காபனோரொட்சைடும், மில்லியனில் ஒரு பகுதி [[அமோனியா]], மில்லியனில் ஒரு பகுதிக்கும் குறைவான [[அசெட்டோன்அசிட்டோன்]], [[மெந்தோல்]], [[எத்தனோல்எதனோல்]] என்பனவும், வேறுபல [[உறுதியற்ற கரிமச் சேர்வை]]களும் அடங்கியிருக்கும். வெளிவிடும் வளியில் இருக்கக்கூடிய ஒட்சிசன், காபனீரொட்சைடு, பிற வளிமங்கள் என்பவற்றின் சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, உடற்தகைமை என்பவற்றில் தங்கியுள்ளது.
 
===வளியமுக்கம்===
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது