மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
ஓர் [[உயிரணு]] (ஒரு கல) [[உயிரினம்|உயிரினங்களில்]] [[வளிமப் பரிமாற்றம்|வளிமப் பரிமாற்றத்துக்கு]] எளிமையான [[பரவல்|பரவலே]] போதுமானது. இங்கே ஒவ்வொரு உயிரணுவும் வெளிக் [[காற்று]] மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் [[வளிமம்|வளிமங்கள்]] குறைவான தொலைவே செல்லவேண்டியுள்ளது. இதற்கு மாறாக [[மனிதர்|மனிதரைப்]] போன்ற பல உயிரணுக்களையுடைய விலங்குகளில் வெளியில் இருந்து அவற்றின் உட்பகுதிகளில் உள்ள உயிரணுக்களுக்கு வளிமங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம். இதனால் வளிமங்களைச் செயல் திறனுடன் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு [[மூச்சுத் தொகுதி]] தேவை. மூச்சுத் தொகுதி, வளிமங்களைக் கொண்டு செல்வதற்கு குருதிச் [[சுற்றோட்டத் தொகுதி|சுற்றோட்டத் தொகுதி]]யுடன் இணைந்து செயற்படுகின்றது.
 
வளியைப்[[மூச்சுத் பயன்படுத்திதொகுதி]]யைக் மூச்சுவிடும்கொண்டிருக்கும் [[மனிதன்|மனிதனைப்]] போன்ற [[முதுகெலும்பி]]களில்களின் மூச்சுவிடுதலில்மூச்சியக்கத்தில் நான்கு நிலைகள் காணப்படுகின்றன.
 
* '''மூச்சுவிடல்''': வெளியில் இருந்து [[ஆக்சிசன்]] செறிவு கூடிய [[காற்று|வளி]]யை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக [[நுரையீரல்|நுரையீரலில்]] உள்ள [[காற்றுச் சிற்றறை]]களுக்கு எடுத்துச் செல்லலும், பின்னர் நுரையீரலில் இருந்து [[காபனீரொட்சைட்டு]] செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதலும். இவை மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) எனப்படும். [[நெஞ்சறை|மார்பறையில்]] ஏற்படும் அழுத்த மாற்றங்களால் இந்த மூச்சிழுத்தலும், மூச்செறிதலும் நடைபெறும். மார்பறையின் முன்புறம் [[மார்பெலும்பு]], பின்புறம் [[முள்ளந்தண்டு வடம்|முதுகெலும்புத் தொடர்]], பக்கங்களில் [[விலா எலும்பு]]கள் கீழ்ப்புறமாக [[பிரிமென்றகடு|பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்]] (diaphragm) என அமைக்கப்பட்டுள்ளது. விலா எலும்புகளிடையே வெளிப்புற, உட்புற விலா எலும்பிடைத் [[தசை]]கள் உள்ளன. இத்தசைகளின் இயக்கத்தால் மார்பறையின் கொள்ளளவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும். மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது. மூச்சுவிடல் நிகழ்ச்சி மார்பறையை விரிவடையச் செய்வதாலும் குறுக்குவதாலும் நடைபெறும்.
* '''நுரையீரலில் வளிமப் பரிமாற்றம்''': நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளுக்கும், அங்கே காணப்படும் குருதி [[நுண்துளைமயிர்த்துளைக் குழாய்]]களுக்கும் (capillary) இடையில் நடைபெறும் வளிமப் பரிமாற்றமாகும்.
* '''வளிமம் கொண்டு செல்லல்''': நுரையீரலுக்கு குருதி வழங்கும் குருதி நுண்துளைகளில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய [[குருதி]]யானது, [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யினூடாக, உறுப்புக்களிலுள்ள [[மயிர்த்துளைக் குழாய்]]களுக்கு கடத்தப்படுதலும், பின்னர் அங்கிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய குருதி நுரையீரலுக்கு கடத்தப்படுவதுமாகும்.
* '''அக வளிமப் பரிமாற்றம்''': உறுப்புக்களுக்கு குருதியை வழங்கும் குருதி மயிர்த்துளைக் குழாய்களுக்கும், உறுப்பிலுள்ள [[இழையம்|இழையங்கள்]] அல்லது [[உயிரணு]]க்களுக்கும் இடையின் நிகழும் வளிமப் பரிமாற்றமாகும். உயிரணுக்களிலுள்ள [[இழைமணி]]களிலேயே, இறுதியில் குருதியிலிருந்து ஆக்சிசனைப் பெற்று, [[குளுக்கோசு|குளுக்கோசை]] வளர்சிதை மாற்றத்திற்குட்படுத்தி உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதுடன், காபனீரொட்சைட்டை வெளியேற்றும் [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்|உயிரணு ஆற்றல் பரிமாற்றமும்]] (Cellular respiration) நிகழ்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது