மீயொளிர் விண்மீன் வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: war:Supernova
No edit summary
வரிசை 5:
'''மீயொளிர் விண்மீன் வெடிப்பு''' (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு [[நாள்மீன்பேரடை]] முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், [[சூரியன்]] தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் [[ஒளியின் வேகம்|ஒளியின் வேகத்தில்]] பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை.
 
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் [[நியூட்ரான்நொதுமி விண்மீன்|நியூட்ரான்நொதுமி விண்மீனாகவோ]] அல்லது [[கருங்குழி]]யாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.
 
[[பகுப்பு:வானியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மீயொளிர்_விண்மீன்_வெடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது