விண்மீன்கள் உருவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ru:Формирование звезды
வரிசை 4:
 
== விண்மீனிடை முகில்கள் ==
சுருள் [[விண்மீன் திரள்]] (spiral galaxy) போன்ற [[பால் வழி]]யில் (Milky Way) விண்மீன்கள், விண்மீன் துகள்கள், கூறுகள் போன்றவை காணப்படுகின்றன. இவைகளுக்கு இடையே உள்ள முகில்கள் தம்மகத்தே [[ஐதரசன்]] (71%), [[ஈலியம்]] (27%) மற்றும் வேறு வளிமங்களைக் கொண்டுள்ளன, மிகவும் [[அடர்த்தி]]யாக உள்ள இத்தகைய நிலை நெபுலம் அல்லது [[நெபுலா|வான்புகையுரு]] (''nebula'') என அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே விண்மீன்கள் உருவாகுகின்றன. இங்கு பெரும்பான்மையான ஐதரசன் மூலக்கூற்றுவடிவில் காணப்படுவதால் மூலக்கூற்று முகில்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சுழன்று கொண்டிருக்கும். எல்லா விண்மீன்களும் மூலக்கூற்று முகில்களில் இருந்தே தோன்றுகின்றன.
 
பெரியதாக உள்ள இத்தகைய அமைப்புகள் பெருமூலக்கூற்று முகில்கள் எனப்படுகின்றன. இவற்றின் அடர்த்தி ஒரு கன சென்டிமீட்டருக்கு 100 துகள்கள் ஆகும், விட்டம் 100 [[ஒளியாண்டு]]கள் (9.5×1014 கிலோமீட்டர்), [[திணிவு]] 6 மில்லியன் சூரியத் திணிவு. இவை மிகவும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாகக் காணப்படுபவை. இவற்றின் சராசரி உள் வெப்பநிலை 10 K ([[கெல்வின்]]) (-263 செல்சியஸ்). இவை அடர்த்தியாகக் காணப்படுவதால் ஒளிபுகவிடாத் தன்மையுடையனவாக உள்ளன, இதனால் இவற்றை இருள் வான்புகையுரு (Dark nebula) என அழைப்பர். இதனால் சாதாரண ஒளி தொலைநோக்கியால் இவற்றைக் காணமுடியாது; அகச்சிவப்பு [[தொலைநோக்கி]]களால் இவற்றை நோக்க முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்கள்_உருவாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது