பேச்சு:அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
==பார்க்கவும்==
கட்டுரையில் '''அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள்.''' என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதாவது '''அபிமான சிந்தாமணி''' எனும் நூலில் கூறப்பட்டுள்ள '''ஆண்டுகளின் பெயர்கள்'''. அவை தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்நூலில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதைத் தான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவுத் தளம். ஒன்றில் "இவ்வாறு எழுதப்பட்டுள்ளது" என்பதை மேற்கோள்கள் மற்றும் சான்றுகளோடு தொகுத்து வைப்பதற்கான இடம்.
 
==மேலும் சில விளக்கங்கள்==
தவிர அவை தமிழா, அல்லது வேற்று மொழியா என்பதை ஆய்வுசெய்வதல் வரலாற்றாய்வாளர்களின் பணி. அப்பெயர்கள் தமிழ் அல்லாமலே இருந்தாலும் அவை ஒரு காலக்கட்டத்தில் '''தமிழ் ஆண்டுகளாக''' குறிக்கப்பட்டிருந்தால், அல்லது தமிழர்கள் அவற்றை '''தமிழ் ஆண்டுகளாக''' வகைப்படுத்தியிருந்தால் அதுவும் அவ்வாறே இடம் பெறவேண்டும். '''மதனாஹரன்''' எனும் பெயர் தமிழ் இல்லையென்பதால் நாளை மதனாஹரன் தமிழ் இல்லையென்றாகிவிடுமா என்ன?
 
தமிழில் காணப்படும் ஒரு சொல் சமசுகிரதத்திலும் காணப்பட்டால் '''சரியான ஆய்வு எதுவும் இன்றி''' உடனே அது சமசுகிரதச் சொல் என்ற விட்டுவிடும் குணமே பெரும்பான்மை தமிழார்வளர்களிடம் காணப்படுகின்றன. உண்மையில் இன்று சமுசுகிரதம் என பலர் கருதும் எண்ணற்றச் சொற்கள் ஆய்வுகளின் பின்னர் தமிழாக இருப்பதும் அறியக்கிடைக்கிறது. இங்கே '''யுகம்''' எனும் சொல் தமிழ் '''உகம்''' சொல்லில் இருந்து உகம்> உக > யுகம் > யுகா என வடமொழியில் மருவியுள்ளதை நான் மதிக்கும் இராம.கி ஐயா எடுத்துக்காட்டுவார். இப்படி எண்ணற்றவை உண்டு.
 
கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் தமிழரின் நிலங்களை ஆட்சி செய்த ஆங்கிலேயரின் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கும் போது, பார்க்க: [http://articles.timesofindia.indiatimes.com/2011-01-21/chennai/28371883_1_dictionaries-words-english-language] ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உறவும் பகையும் ஆக ஒரே நிலப்பரப்புக்குள் இருந்த சமகிருதத்தில் '''எத்தனை தமிழ் சொற்கள் கலந்திருக்கும்''' என்று சிந்திக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அறுபது ஆண்டுகள்" page.