அணில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: அணில்(Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு சிறியவகைப் பிராணியாகும். [[படிமம்:Lightmat...
(வேறுபாடு ஏதுமில்லை)

16:31, 2 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

அணில்(Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு சிறியவகைப் பிராணியாகும்.

கொறிக்கும் அணில்

உடல் அமைப்பு

இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவத்ற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும்.

வசிப்பிடம்

அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும்.

உணவுப்பழக்கம்

அணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும்.

வாழ்க்கைமுறை

அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தை திசைதிருப்பும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணில்&oldid=120438" இலிருந்து மீள்விக்கப்பட்டது