தொல்லுலகச் சிட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: குருவிகள்(Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:56, 2 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

குருவிகள்(Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள் அல்லது சிட்டுக்குருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.

சிட்டுக்குருவி

உடல் அமைப்பு

குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறிய அலகுடன், சிறிய கால்களுடன் காணப்படும்.

வசிப்பிடம்

வீட்டுக்குருவிகள் அல்லது சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசிக்கின்றன. ஆனாலும் இவை மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளில் மறைவான இடங்களில் வைக்கோல் அல்லது மெல்லிய பொருட்களைக் கொண்டு கூடுகட்டி வசிக்கின்றன.

உணவுப்பழக்கம்

குருவிகள் தானியங்களையும்,புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

வாழ்க்கைமுறை

குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. குஞ்சுகள் வளரும் வரை கூட்டில் வைத்து வளர்க்கப்படுகின்றன. பின் பறக்கத்தொடங்கியவுடன் தனியே பிரிந்துவிடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்லுலகச்_சிட்டுகள்&oldid=120457" இலிருந்து மீள்விக்கப்பட்டது