மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 17:
related-c = [[திராவிடர்]], [[கன்னடர்]], [[தெலுங்கர்]], [[குஜராத்தியர்]], [[தமிழர்]]
}}
 
==சமயம்==
மராத்தி மொழி பேசும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள் ஆவர். விட்டலன் என்ற பெயரில் வணங்கப்படும் கண்ணனே பிரபலமான கடவுள் என்றாலும் சிவன், பார்வதி, வினாயகரையும் வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் வழிபடுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லோகமானிய திலகரால் துவங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பிரபலமான பண்டிகையாகும்.
மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.
சிறுபான்மையினர் இசுலாமிய, கிறித்தவ, ஜைன, பௌத்த சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பௌத்த மராத்திகள் அம்பேத்கரின் வழிநடந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள் கிறித்தவர்கள் மூன்று சதவீதத்தினர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில், போர்த்துகேய யேசு சபையின் மூலம், மகாராட்டிரத்தில் கிறித்தவம் நுழைந்தது. கிறித்தவர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மராத்தி இசுலாமியர்கள் சூபி வழியைப் பின்பற்றுபவர்கள் ஆவர். சூபி ஞானிகளின் கல்லறைகளுக்கு செல்வது இவர்களின் மார்க்கக் கடமையாகக் கொண்டுள்ளனர். இந்துக்களும் அதிக அளவில் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
ஏறத்தாழ 3,000 பேர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பலர் இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
குடிபெயர்வதற்குமுன் 90,000 பேர் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா நாட்டிலேயே மகாராட்டிரா மாநிலத்தில் தான் அதிக ஜைனர்கள் வசிக்கின்றனர்.
ஜைன மதத்தின் பழைய கல்வெட்டு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது புனேவிற்கு அருகிலுள்ள
Pale கிராமத்தின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது. நவகார் மந்திரத்தை உள்ளடக்கிய இது, ஜைன பிராகிருதத்தில் எழுதப்பட்டது
மராத்தியில் எழுதப்பட்டதாக அறியப்படும் பழைய கல்வெட்டு, கருநாடக மாநிலத்தின் சிரவணபெலகொலாவில் கண்டெடுக்கப்பட்டது. பகுபாலி சிலையின் இடது காலுக்கு கீழே உள்ள இது 981 CE காலத்தைச் சேர்ந்தது.
மகாராட்டிரத்தை, இராஷ்டிரகுடர்கள், சிலகரர்கள் போன்ற பல ஜைன ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கின்றர். இவர்களால் பல கோயில்கள், கோட்டைகள், கட்டப்பட்டிருக்கின்றன. பழங்காலத்தில் அதிக அளவிலான மராத்தியர்கள் ஜைனர்களாக வாழ்ந்தனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது