உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Marche sel.jpg|thumb|right|250px|உப்பு நடைப்பயணம் பற்றி காந்தி]]
 
'''உப்பு சத்தியாகிரகம்'''(Salt March) அல்லது '''உப்புதண்டி அறப்போர்யாத்திரை''' என்பது காலனிய இந்தியாவில் பிரித்தானியர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச் 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி '''உப்பெடுக்கும் நடைப்பயணமாகத்''' துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த ''முழு விடுதலை'' என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாக செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். [[ காந்தி]] தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.<ref>"Mass civil disobedience throughout India followed as millions broke the salt laws", from Dalton's introduction to Gandhi's ''Civil Disobedience''. Gandhi & Dalton, 1996, p. 72.</ref>
 
காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார். தண்டி நடைப்பயணம் மற்றும் பின்னர் நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது. விரிவான செய்தித் தாள்கள் மற்றும் செய்திச் சுருள் சேகரிப்புக்களில் இவை இடம் பெற்றன. உப்பு வரிக்கு எதிரான அறப்போர் ஓராண்டிற்குத் தொடர்ந்தது, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வைஸ்ராய் லார்ட் இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உப்புச் சத்தியாகிரகம் விலக்கிக் கொள்ளப்பட்டது.<ref>Dalton, p. 92.</ref> 80,000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உப்பு சத்யாக்கிரகத்தின் விளைவாக சிறையிலடைக்கப்பட்டனர்.<ref>Dalton, p. 92.</ref> இந்நடவடிக்கையானது இந்திய விடுதலை குறித்த உலகின் மற்றும் பிரித்தானியரின் கொள்கைகள் மீது கணிசமான விளைவினை ஏற்படுத்தியது.<ref>ஜான்சன், ப. 37.</ref><ref>ஆக்கெர்மேன் &amp; துவால், ப. 109.</ref> மேலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களை சுறுசுறுப்புடன் இணைந்து முதல் முறையாக போராட வழிவகுத்தது, ஆனால் பிரிட்டிஷாரிடமிருந்து பெரியளவிலான சலுகைகளை வெல்லத் தவறியது.<ref>Ackerman & DuVall, pp. 106.</ref>
"https://ta.wikipedia.org/wiki/உப்புச்_சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது