கோளவுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''கோளவுரு'''(''spheroid'') அல்லது '''நீள்வட்ட சுழற்சிவடிவம்'''(''ellipsoid of revolution'') என்பது ஒரு [[நீள்வட்டம்|நீள்வட்டத்தை]] அதன் பேரச்சு அல்லது சிற்றச்சைப் பொறுத்து சுழற்றுவதால் கிடைக்கும் இருபடிப் பரப்பாகும். இரு சமமான அரை[[விட்டம்|விட்டங்கள்]] கொண்ட [[நீளுருண்டை|நீள்வட்டத்திண்மமாகவும்]] கோளவுருவைக் கருதலாம்.
 
நீள்வட்டமானது அதன் பேரச்சைப் பொறுத்து சுழலும்போது கிடைக்கும் கோளவுரு '''நெட்டையான கோளவுரு'''(prolate spheroid) எனப்படும். இது ரக்பி கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்தைப் போன்று இருக்கும். சிற்றச்சைப் பொறுத்துச் சுழலும் போது கிடைக்கும் கோளவுரு '''தட்டையான கோளவுரு'''(oblate spheroid) என்றும் அழைக்கப்படுகிறது. நீள்வட்டத்திற்குப் பதில் [[வட்டம்|வட்டத்தைச்]] சுழற்றும்போது [[கோளம்]] கிடைக்கும்.
 
பூமியின் சுழற்சி மற்றும் அதன் ஈர்ப்பு சக்தியால் அதன் வடிவம் கிட்டத்தட்ட கோளவுருவாக (அச்சுகளில் சிறிதளவு தட்டையாக்கப்பட்ட) இருக்கிறது. இதனால்தான் நிலப்பட வரைவியலில் பூமியின் வடிவமானது கோளமாக இல்லாமல், தட்டையான கோளவுருவாக தோராயமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தற்போதைய ''உலக புவிக்கோளுரு முறை''யில்(World Geodetic System) பூமியானது, நிலநடுக்கோட்டில் 6,378.137 கிமீ மற்றும் துருவங்களில் 6,356.752 கிமீ ஆரங்களுடைய (தோராயமாக) கோளவுருவாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கோளவுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது