யோகான்னசு கெப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கெப்லரின் விதிகள்: அறுபட்ட கோப்பு
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
== வாழ்க்கை ==
[[Image:Kepler-Geburtshaus.jpg|thumb|right|வெய்ல் டெர் ஸ்டட்டிலுள்ள யோகான்னசு கெப்லரின் பிறப்பிடம்]]
[[Image:Great Comet of 1577.gif|thumb|left|250px|1577ன் பெரும் வால்வெள்ளி, சிறுவயதில் கெப்லர் கண்ட வால்வெள்ளியும், ஐரோப்பாவிலுள்ள பல வானியலாளர்களின் அவதானத்தை பெற்றதும்.]]
 
யோகான்னசு கெப்லர் டிசெம்பர் 27, 1571ல், வெய்ல் டெர் ஸ்டட்டிலுள்ள ஃப்ரே இம்பீரியல் சிற்றியில் (இப்போது இது ஜெர்மனிய மாநிலமான பாடென் வுட்டம்பெர்க்கின் ஸ்டட்கார்ட் பகுதியில் அமைந்துள்ளது) பிறந்தார். கெப்லரின் பாட்டனாரான செபால்ட் கெப்லர் அந்நகர மேயராக இருந்தார். எனினும் கெப்லருடன் பிறந்த இரு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோரால் அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது. கெப்லரின் தந்தையாரான ஹெய்ன்ரிச் கெப்லர் ஒரு வணிகராவார். யோகான்னசு கெப்லருக்கு ஐந்து வயதானபோது அவரது தந்தையார் குடும்பத்தைப் பிரிந்து சென்றார். இவர் நெதர்லாந்தில் நடந்த எண்பதாண்டுப் போரில் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது. யோகான்னசு கெப்லர் பிறந்தபோது அவர் ஒரு பல்வீனமான குழந்தையாக இருந்தார்.<ref>Caspar. ''Kepler'', pp. 29–36; Connor. ''Kepler's Witch'', pp. 23–46.</ref>
 
சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.<ref name = Koestler234/> ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580தின் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<ref name=Koestler234>Koestler. ''The Sleepwalkers'', p. 234 (translated from Kepler's family horoscope).</ref> எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், பலவீனமான கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்.<ref>Caspar. ''Kepler'', pp. 36–38; Connor. ''Kepler's Witch'', pp. 25–27.</ref>
 
1589ல், இலக்கணப் பாடசாலை, லத்தீன் பாடசாலை மற்றும் மல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற பின்பு, துபிங்கென் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, விட்டஸ் முல்லரின்<ref>Connor, James A. ''Kepler's Witch'' (2004), p. 58.</ref> கீழ் தத்துவமும், யாக்கோபு ஹீபிரான்டின் கீழ் இறையியலையும் கற்றார்.<ref name="Kepler's Astronomy Author 2001 p. 96">Barker, Peter; Goldstein, Bernard R. "Theological Foundations of Kepler's Astronomy", Osiris, 2nd Series, Vol. 16, Science'' in Theistic Contexts: Cognitive Dimensions'' (2001), p. 96.</ref> இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராயும், திறமையான வானியலாளராயும் தம்மை நிரூபித்தார். மிக்கல் மீஸ்ட்லின் என்பவரின் வழிகாட்டலின் கீழ், 1583இலிருந்து 1631வரை<ref name="Kepler's Astronomy Author 2001 p. 96"/> கோள்களின் இயக்கங்களுக்கான தொலமியின் முறைமையையும், கொப்பர்நிகசின் முறைமையையும் கற்றார். மாணவப் பருவத்தில், சூரிய மையக் கொள்கையை எதிர்த்தார். எனினும், சூரியனே அகிலத்தின் முதன்மைச் சக்தி முதலென அவர் ஏற்றுக்கொண்டார்.<ref>Westman, Robert S. "Kepler's Early Physico-Astrological Problematic," ''[[Journal for the History of Astronomy]]'', '''32''' (2001): 227–36.</ref> ஒரு அமைச்சராக வரவேண்டுமென அவர் விரும்பினாலும், அவரது கற்கைகளின் நிறைவில், கணிதம் மற்றும் வானியலைக் கற்பிக்கும் ஆசிரியராக, கிராசிலுள்ள (பின்னர் கிராஸ் பல்கலைக்கழகம்) புரட்டஸ்தாந்து பாடசாலையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது 23ம் வயதில், ஏப்ரல் 1594ல் அவ்வேலையில் சேர்ந்தார்.<ref>Caspar. ''Kepler'', pp. 38–52; Connor. ''Kepler's Witch'', pp. 49–69.</ref>
 
== வேலை ==
=== அறிவியற் பணி ===
"https://ta.wikipedia.org/wiki/யோகான்னசு_கெப்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது