ஜேம்ஸ் சாட்விக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
==செயற்பாடுகள்==
===கேம்பிரிட்ஜில் ஆய்வு===
1932ல் சட்விக், அணுக்கருவில் அதுவரை அறியப்பட்டிராத துணிக்கையொன்றைக் கண்டுபிடித்தார்.<ref>{{cite doi|10.1038/129312a0}}</ref> தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவான விளக்கங்களை வெளியிட்டார்.<ref>{{cite doi|10.1098/rspa.1932.0112}}</ref><ref>{{cite doi|10.1098/rspa.1933.0152}}</ref> இத் துணிக்கை முதன்முதலில் எட்டோர் மஜோரனாவால் எதிர்வுகூரப்பட்டிருந்ததுஎதிர்வுகூறப்பட்டிருந்தது. இதன் மின் நடுநிலை காரணமாக இது நியூத்திரன் எனப் பெயர் பெற்றது. சட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பு யுரேனியம் - 235ன் கருப்பிளவைப் புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தது. அல்பாத் துணிக்கைகள் நேரேற்றம் கொண்டவையாதலால் அவை அணுக்கருவிலுள்ள நேரேற்றத்தால் தள்ளப்பட்டன. ஆனால் நியூத்திரன்கள் ஏற்றமற்றவையாதலால் அவற்றுக்கு கூலோமின் தடையைத் தாண்டவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் அவற்றால் பாரமான அணுக்கருக்களான யுரேனியம் - 235 மற்றும் புளூட்டோனியம் கருக்களினுள்ளும் ஊடுருவக்கூடியதாயிருந்தது.
 
1932ல் நியூத்திரன் பற்றுய சட்விக்கின் கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1932ல் ரோயல் சங்கத்தின் ஹக்ஸ் பதக்கமும், 1935ல் பௌதிகவியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.<ref>[http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1935/chadwick-bio.html James Chadwick - Biography]</ref>
 
சட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பினால் ஆய்வுகூடங்களில், யுரேனியத்திலும் பாரமான மூலகங்களை உருவாக்கக்கூடியதாயிருந்தது. பீற்றா சிதைவினால் உருவாகும் நியூத்திரன்களை மோதச்செய்வதன் மூலம் இது சாத்தியமானது. இவரது கண்டுபிடிப்பு இத்தாலிய பௌதிகவியலாளரும் நோபல் பரிசாளருமான என்ரிகோ ஃபெர்மியைக் கவர்ந்தது. இதனால் அவர் நியூத்திரன்களை அணுக்கருக்களுடன் மோதச் செய்வதன்மூலம் ஏற்படும் இரசாயனத் தாக்கங்களை ஆராயத் தொடங்கினார். ஃபெர்மியால் வெளியிடப்பட்ட ஆய்வுகளும், ஒட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் ஆகிய ஜெர்மன் கதிரியக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் காரணமாக முதல் வகை அணுக்கருப் பிளவு கண்டுபிடிக்கப்பட்டது.
 
===லிவர்பூலில்===
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_சாட்விக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது