குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
===இராஜாஜியின் உதவி===
இந்த அசாதாரண நிலையில் குழம்பியிருந்த நேசமணி யாரையும் நம்பிப்பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில்சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”. <ref>எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref> ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர்திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார்<ref>எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref>
 
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஐயர், கணபதி ஐயர் ஆகியோர் தி.த.நா. காங்கிரஸ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை 27-01-1955 – க்கு நாள் குறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.சி சாட்டர்ஜி அவர்களையும் நேசமணி அமர்த்தியிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் கனல்பறக்கும் முiயில் அங்கே நடந்தது. நேசமணியும், அப்துல் ரசாக்கும் (இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு செல்லவில்லை) உச்ச நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். வாதத்தினூடே தலைமை நீதிபதி பி.கே. முக்கர்ஜி (B.K. Mukerjee), “அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சுருக்கத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். ஆகவே மனுதாரர் வழக்கறிஞர் சொன்னார்…”
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது