தோள் சீலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==சாதிய கோட்பாடுகள்==
திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும். தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும். “நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும். நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான். இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”. <ref>(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter) </ref> வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலை தென் தாலுகாக்களான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை.
<ref>“Before the introduction of Protestant Christianity in Travancore, the Women, excluding women of the Brahmins, were prohibited from covering their bosoms”.
(R.N. Yesudhas – A people’s revolt in Travancore – 1975 – Page – 71) </ref>
வரிசை 21:
முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார். இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார். எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார். இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர். 1851 ஆம் ஆண்டு தனது 43 வயதில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது.
 
இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது. அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது. எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள். அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை. இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத் தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை.
{{cquote‘பூமகள்cquote‘| பூமகள் நிதமுடன் போட்ட
தோள்சீலை தன்னைப் போடாதே
என்றடித்தானே சிவனே அய்யா” }}
"https://ta.wikipedia.org/wiki/தோள்_சீலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது