"உருத்திராட்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,995 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''உருத்திராக்கம்''' (''Elacocarpus Ganitrus Roxb'', Rudraksha) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன. இவை [[தென்கிழக்காசியா]]வில் குறிப்பிட்ட சில இடங்களில், [[ஜாவா]], [[கொரியா]], [[மலேசியா]]வின் சில பகுதிகள், [[தைவான்]], [[சீனா]], [[தெற்காசியா]]விலும் வளர்கின்றன. [[நேப்பாளம்|நேபாளத்தில்]] அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன.
 
== உருத்திராக்கம் சமய நம்பிக்கை ==
உருத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை. இவை ஆற்றல் வாய்ந்த மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள் (Stress Levels) [[இரத்த அழுத்தம்]] மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hyper tension) ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன. இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concentration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.
 
இந்த உருத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய [[சீனர்]]கள், [[பௌத்தம்|பௌத்தர்கள்]], தாவோ, ஜப்பானியர்கள், சென் மதத்தோர், கொரியர்கள், இந்தியர்கள் ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை, இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெற முடிகின்றது எனக் கண்டு கொள்ளப்பட்டது.
 
== உருத்திராக்கம் சமய நம்பிக்கை ==
[[படிமம்:groupofrudraksha.jpg|thumb|૩૦૦px|[[உருத்திராட்சம்]]]]
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் [[சிவன்|சிவனின்]] ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என [[சிவபுராணம்]] கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன. இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரிஷிகளும் உருத்திராக்கங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழந்துள்ளார்கள்.
 
"அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown) என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டு வருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்த பின் உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) எனப் பெயர் மாறியதுமான காய்மணி இது. (Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customarily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times)
 
== உருத்திராக்கம் குறித்த சில பாடல் கருத்துக்கள் ==
 
== உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் ==
சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும் போது "நெற்றியில் பட்டை", "காவிச் சட்டை", "கழுத்தில் கொட்டை" என்று வேடிக்கையாகவும், சில சமயங்களில் வினையாகவும் சொல்வதுண்டு. இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உருத்திராக்கம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.
எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.
 
உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.
34,244

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1216097" இருந்து மீள்விக்கப்பட்டது