உருத்திராட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 245:
 
சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன் (Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன.
 
== உருத்திராக்க மணிகள் குறித்த சில கேள்விகளும் பதில்களும் ==
 
* உருத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?
ஆசியர்கள் மரபு வழியாக உருத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின் யோகிகளும் துறவிகளும் உருத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும், அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக அளவு சாந்தியும், குறிப்பிடத்தக்க மன அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும் ஏற்பட்டதைக் கண்டனர்.
 
* உருத்திராக்கம் அணிய விதிமுறைகள் / நியமம் ஏதும் உள்ளதா?
உருத்திராக்கம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உருத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும் பெறுவது சிறப்பாகும். நல்ல உருத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூஜை செய்து அணிவதனால், ஒருவருக்கு சாந்தி, மன அமைதி, கூர்ந்த நோக்கு, ஒருமுகக் குவிவு ஆகியன கிட்டுகின்றன. இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும், இன்றைய உலகில் மனம் தொடர்பான செயல்பாடுகளுடன் கூடிய தொழில் புரிபவர்களுக்கும் உகந்ததாக அமைகிறது. ஒரு முகக் குவியும், கூர்ந்த நோக்குமே எந்தத் துறையிலும் வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.
 
ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை உருத்திராக்க மணிகள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இந்த உருத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு. இந்தப் பல்வேறு முகப்புடைய மணிகள் மனிதனுடைய ஆளுமையையும், மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.
 
உருத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்காகவே உள்ளன. இந்த உருத்திராக்க மணிகள் நமது மனம், உடல், ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச் செய்யும். இம்மணிகள் இயற்கைக்குகந்த ஆற்றலுடன், தெய்வீகமானவையும் கூட. இதனால் உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும். மதுவை ஒழித்தல் வேண்டும். உரையாடுவதில், பேச்சில் இனிமை வேண்டும்.
 
* வேறுப்பட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?
 
பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறு சேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர முடியும். ஒருவர், குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளையுடைய மணிகளினால் செய்யப்பட்டதை கூட அணியலாம்.
 
* எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாமா?
 
அணியலாம். பால், வயது, பண்பாடு, இனம், நிலம், சமயப் பின்னணி குறித்த எந்தவிதப்பாகு பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம். எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.
 
* உருத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?
 
ஒருவர் தனது உள்ளங்கையில் உருத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே அதனுடைய குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது ஆற்றலோடு இலேசாக அதிரும் சக்தியுடையது. இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப் பொறுத்தது.
 
* இந்த உருத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?
 
நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவை. நீரில் மிதக்கும் மணிகள் போலியானவை என்ற அடிப்படையில் நிகழ்த்தும் சோதனைகள் சரியானவை அல்ல. மரத்தினால் செய்யப்பட்டு உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை நம்பகமான இடத்தில் நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.
 
* ஒரு நல்ல உருத்திராக்கத்தினை நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?
 
உருத்திராக்கத்தின் உருவம், அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது. இவை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட முகங்கள், சிறு மணி போன்ற அமைப்புகள், மேடுபள்ளக் கோடுகள் இவையெல்லாம் இயல்பானதாக அமைந்துள்ளனவா என்று பார்க்க வேண்டும். அத்துடன் நடுவிலுள்ள துளைக்கு அருகில் வெடிப்புகள் இல்லாது இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். சிறிய அளவிலுள்ள மணிகள் கூட மங்களகரமானவைகள்.
 
* உருத்திராக்கத்தை அணிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
 
உருத்திராக்க அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உருத்திராக்கத்தை எப்போதும் அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய வேண்டும். இந்துக்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்றில்லை. எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாம்.
 
* உருத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
 
எத்தனை ஆண்டுகளுக்கும் இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக் கூட வைத்துக் கொள்ளலாம்.
 
* ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள், ஜபமாலைகள் உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?
இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால், இவற்றை ஒருவரின் வாழ்விறுதிக்குப் பின்பு மற்றவர் பயன்படுத்தலாம்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/உருத்திராட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது