சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சொழ அரசர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:சோழ அரசர்கள் சேர்க்கப்பட்டது
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
'''சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி''' சங்ககாலச் [[சோழர்|சோழ]] மன்னர்களில் ஒருவன். [[தித்தன்]] என்னும் மன்னன் [[உறையூர்|உறையூரைத்]] தலைநகராகக் கொண்டு நாடாண்டபோது [[போர்வை (ஊர்தமிழ்நாடு)|போர்வை]] என்னும் ஊரில்]] இருந்துகொண்டு ஆட்சி புரிந்தவன்.

தித்தன் மகள் [[ஐயை]]. தித்தன் இவளை இந்தக் கிள்ளிக்கு மணம் செய்து தர ஒப்பவில்லை எனத் தெரிகிறது. இந்தக் கிள்ளி [[ஆமூர் மல்லன்]] என்பனோடு மற்போர் புரிந்து வென்றதைத் தித்தன் காணவும் மறுத்திருக்கிறான். ‘பெருங்கோழி’ (கோழியூர்) என்பது [[உறையூர்|உறையூருக்கு]] வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். மாநாய்கன் மகள் சிலப்பதிகாலக்சிலப்பதிகாரக் காலக் [[கண்ணகி]]. உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக விளங்கியவன் ‘பெருங்கோழி நாய்கன்’. இவன் மகள் நக்கண்ணையார். சாத்தன் என்னும் சொல் நில வணிகனைக் குறிக்கும். மாசாத்துவான் மகன் சிலப்பதிகாரக் [[கோவலன்]]. உறையூரில் வாழ்ந்த சாத்தனின் தந்தை ‘[[சாத்தந்தையார்]]’. இந்தச் சாத்தந்தையாரும், நக்கண்ணையாரும் இந்தக் கிள்ளியைப் பாடியுள்ளனர்.
 
*சாத்தந்தையார் [[போர்வை (தமிழ்நாடு)|போர்வை என்னுமிடத்தில்]] ஆமூர் மல்லன் தாக்கியபோது நடந்த போரைப் பாடுகிறார்.
#இந்தக் கிள்ளி ஒருகாலை மண்டியிட்டுக்கொண்டு ஆமூர் மல்லனோடு போரிடுவதைத் தித்தன் காணவேண்டும். <ref>புறநானூறு 80</ref>
#கிள்ளியின் போர்யானைக்கு இன்று பலியாகப்போகும் அளியர் (இரங்கத்தக்கவர்) யார் யாரோ! <ref>புறநானூறு 81</ref>
#போர் நடந்த இடம் [[போர்வை (தமிழ்நாடு)|போர்வை]]. ஊரில் திருவிழா. மனைவிக்கு மகப்பேறு. மழை பொழிகிறது. இந்தக் கால நெருக்கடியில் மனைவிக்குக் கட்டில் பின்னுபவன் கை போல, கிள்ளியின் கைகள் விரைந்து சுழன்று போரிட்டன. புறநானூறு 82 பாடல் ஆமூர் மல்லனை “”ஊர் கொள வந்த பொருநன்” எனக் குறிப்பிடுகிறது.
 
*பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், கிள்ளி, ஆமூர் மல்லன் ஊருக்கே துறத்திச் சென்று போரிட்டதைப் பாடுகிறார்.
# இந்தப் பெண்புலவரின் காதலன் இந்தக் கிள்ளி. இவன் பிரிவை எண்ணியதால் இவளது வளையல்கள் கழன்றன. <ref>புறநானூறு 83,</ref>
#உமணர் ஆற்றுத்துறையைக் கடக்க நேரும்போது அஞ்சுவது போல, பகைவர் கிள்ளியோடு போரிட அஞ்சுவர். <ref>புறநானூறு 84, </ref>
# என் கிள்ளிக்கு நாடு இது அன்று. ஊர் இது அன்று. எனவே அங்குள்ள மக்களில் சிலர் கிள்ளி பெற்றது வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி அன்று என்கின்றனர். ஆனால் எனக்குத் தெரியும், கிள்ளி வெற்றி பெற்றான் என்று. <ref>புறநானூறு 85</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோழன்_போர்வைக்கோப்பெருநற்கிள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது