தன்வந்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
 
தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். [[விஷ்ணு]]வின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், [[தசாவதாரம்|தசாவதாரத்திற்குள்]] சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்..
 
==தன்வந்திரி அவதாரம்==
 
=== அவதார தோற்றம் ===
தேவர்கள் அசுரர்களுடன் போராடி பலம் இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் பூரண ஆயுளைப் பெற்றார்கள். <ref>[http://www.chennailivenews.com/Religion/Temples/20113316093327/------10.aspx ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் - 10] </ref>
 
===மருத்துவம்===
தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரிய பகவானும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.
 
சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு ஆகாயம் என்று பொருள். தன்வன் என்றால் ஆகாய லோகத்தில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். ஸூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரிய பகவானையே குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்திய ராஜா, ஆதர்ச மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=1604 அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில்]</ref>
 
==தன்வந்திரி பகவான் சரணம்==
 
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.siththarkal.com/2012/05/blog-post_29.html தன்வந்திரி தங்க பஸ்பம் செய்யும் முறை ]
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/தன்வந்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது