கணியர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''கணியர்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மற்றும் [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டங்களில் வசிக்கும் ஒரு சாதியினர். [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] தாழ்த்தப்பட்ட சாதியினராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் [[திருநெல்வேலி]], [[ஸ்ரீவைகுண்டம்]], [[நாங்குநேரி]], [[குரும்பூர்]], [[வடக்கன்குளம்]], [[பணகுடி]], [[மூன்றடைப்பு]], [[தென்காசி]], [[கல்லிடைக்குறிச்சி]] உட்பட 27 ஊர்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
 
==சாதிக் கிளைகள்==
 
தமிழ்நாட்டில் வசிக்கும் கணியர் சாதியினரிடம் எட்டுக் கிளைப் பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவுகளை “அம்மா வழிக் கிளை”, “சம்பந்த வழிக் கிளை” எனும் இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அம்மா வழிக் கிளையில் வெதமக்குடி, குரந்தகுடி, மக்கட்குடி, பன்றிகுடி எனும் நான்கு பிரிவுகளும், சம்பந்த வழிக் கிளையில் கலமனகுடி, அதனிகுடி, புலியகுடி என்பது போன்ற நான்கு பிரிவுகளும் உள்ளன. இதில் அம்மா வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். இது போல் சம்பந்த வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். அம்மா வழிக் கிளையிலிருப்பவர்கள் சம்பந்த வழிக் கிளையிருப்பவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால், இந்நிலை தற்போது வழக்கத்தில் மாற்றமடைந்திருக்கிறது.
 
==தொழில்==
 
திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் [[சுடலை மாடன்]], [[இசக்கியம்மன்]] போன்ற பல சிறுதெய்வக் கோயில் வழிபாடுகளில் முக்கியச் சடங்காக நிகழ்த்தப் பெறும் [[கணியன் கூத்து]] எனும் நாட்டுப்புறக் கலைத் தொழிலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கணியர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது