மெய்யறம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கி நூல்களில் இருக்க வேண்டிய பகுதிகள்--- நீக்கப்பட்டன.
No edit summary
வரிசை 1:
=மெய்யறம்=
{{துப்புரவு}}
==முன்னுரை==
வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே "மெய்யறம்" ஆகும். அவர் விடுதலை பெற்ற பின்னர் அந்த நூல் வெளியிடப்பட்டது. வ.உ.சி. அந்த நூலைத் தஞ்சாவூரைச் சேர்ந்த இராவ் பகதூர் திரு. சீனிவாச பிள்ளை என்பவருக்கு சமர்ப்பித்துள்ளார். இவர் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் ஆவார்.
வ.உ.சி. காலத்திலேயே இந்நூல் மூன்று பதிப்புகள் கண்டுள்ளது. முதல் பதிப்பு சென்னையில் ப்ரோக்ரஸிவ் அச்சகத்தில் 1914- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு சென்னையில் கலாரத்னாகரா அச்சகத்தில் 1917- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. மூன்றாவது பதிப்பு அம்பாசமுத்திரத்தில் சண்முகவிலாஸ் அச்சகத்தில் 1930- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
வரி 23 ⟶ 24:
முப்பத்து மூன்றாவது அதிகாரத்தில் அவர் மறுமணம் குறித்துப் பேசுகிறார். அது உண்மையில் மிகவும் புரட்சிகரமான கருத்துதான். ஒரு விதவைப் பெண் எவ்வளவு இளம் வயதினளாக இருந்த போதும் தனிமையில்தான் வாழ வேண்டும் என்று சமூகம் எண்ணியிருந்த காலகட்டத்தில் துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று எழுதியுள்ளார். முப்பத்து நான்காவது அதிகாரத்தில் முதல் வரி: "இருவரு ளறிவிற் பெரியவ ராள்க". இரண்டாவது வரி: "ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க". வ.உ.சி. அவர் கருத்துகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஆண்களைப் போலவே பெண்களும் அறிவுடையவர்களாக இருக்க முடியும் என்று அவர் கருதுகிறார். அதனால் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் கலந்தாலோசித்து எல்லா விஷயங்களையும் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வது விரும்பத் தகுந்தது என்று கூறுகிறார்.
 
வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு செல்வம் மட்டும் போதுமானதல்ல, மன நிம்மதியும் அவசியம் என்று வ.உ.சி. எண்ணுகிறார்.அதை அவர் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார். செல்வத்தால் கட்டிலை வாங்க இயலும். ஆனால் மன நிம்மதியே நல்ல உறக்கத்தைத் தரும் என்று புரிய வைக்கிறார். நிம்மதியாக வாழ்வதற்கு நாம் எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். நம் உடல் நலத்தை நாம் பேண வேண்டும். ஏனெனில் உடல் நாம் நினைத்ததைச் செய்யும் ஓர் ஒப்பற்ற கருவி ஆகும். நாம் நம் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் நம் மனம் ஆக்க, காக்க, அழிக்க வல்லது ஆகும். நம் பெற்றோரையும் குழந்தைச் செல்வங்களையும் பேணிக் காக்க வேண்டும். இவ்வாறு நமக்கு அவர் வாழும் வழிகளைக் கற்றுக் கொடுக்கிறார். நாம் அவற்றைப் பின்பற்றினால் மன நிம்மதியுடன் வாழ இயலும்.
 
==பாடல்கள்==
 
===மாணவரியல்===
 
==== 1. மாணவர் கடமை====
*
* 1. மாண்பெற முயல்பவர் மாணவ ராவர்.
* மாணவர் என்பவர் பல்வேறு சிறப்புக்ளைப் பெறமுயற்சி செய்பவர் ஆவார்.
* 2. ஆணும் பெண்ணு மதுசெய வுரியர்.
* ஆண்களும் பெண்களும் கல்வி கற்கும் உரிமையை உடையவர்கள் ஆவார்.
* 3. இளமைப் பருவ மியைந்த ததற்கே.
* கல்வி கற்பதற்கு இளமைப் பருவம் பொருத்தமானது ஆகும்.
* 4. மற்றைய பருவமும் வரைநிலை யிலவே.
* ஒருவன் எந்தப் பருவத்திலும் கல்வி கற்கலாம்.
* 5. அவர்கடன் விதியிய லறிந்துநன் றாற்றல்.
* அவருடைய கடமை நல்லொழுக்க விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது ஆகும்.
* 6. அன்னைதந் தையரை யாதியைத் தொழுதல்.
* அவர் தாய், தந்தை, கடவுளைத் தொழுதல் வேண்டும்.
* 7. தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்.
* தீயவர்களின் நட்பைத் தவிர்த்து நல்லவர்களுடன் சேரவேண்டும்.
* 8. தக்கவா சிரியராற் ற்ன்னிய லறிதல்.
* தகுந்த ஆசிரியரின் மூலம் தன்னுடைய இயல்பினை அறிதல் வேண்டும்.
* 9. ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல்.
* ஒரே சமயத்தில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்துக் கல்வியும் கற்க வேண்டும்.
* 10. இறைவ னிலையினை யெய்திட முயறல்.
* (விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) இறைவனின் நிலையினை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
*
==== 2. விதியியல் அறிதல்====
*
* 11. வினையின் விளைவே விதியென வந்துறும்.
* நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும்.
* 12. விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே.
* ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும்.
* 13. மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும்.
* இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம்.
* 14. தீவினை விளைவிற் சேருவ துன்பம்.
* தீவினைகளால் துன்பமே வந்து சேரும்.
* 15. நல்வினை விளைவி னணுகுவ வின்பம்.
* நல்ல செயல்களினால் இன்பமே வந்து சேரும்.
* 16. தீவிதி வரவைச் செப்பு மடன்மடி.
* நாம் அறிவின்மையும் சோம்பலும் உடையவர்களாக இருந்தால் தீயவிதியை அடைவோம்.
* 17. நல்விதி வரவை நவிலுமறி வூக்கம்.
* நாம் அறிவும் ஊக்கமும் உடையவர்களாக இருந்தால் நல்ல விதியை அடைவோம்.
* 18. விதியை மாற்றிட வினையை மாற்றுக.
* விதியை மாற்ற வேண்டும் எனில் செயல்களை மாற்றவேண்டும்.
* 19. தீவிதி வேண்டிற் றீவினை புரிக.
* தீயவிதி வேண்டும் எனில் தீய செயல்களைச் செய்ய வேண்டும்.
* 20. நல்விதி வேண்டி னல்வினை புரிக.
* நல்லவிதி வேண்டும் எனில் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
*
==== 3.தாய்தந்தையரைத் தொழுதல் ====
*
* 21. தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம்.
* நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர்.
* 22. அவரிற் பெரியர் யாருமிங் கிலரே.
* அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை.
* 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக.
* நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும்.
* 24. அவர்பணி யெல்லா மன்பொடு செய்க.
* அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும்.
* 25. அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க.
* அவர்களின் அறிவுரைகளை அறிந்து கடைப்பிடித்தல் வேண்டும்.
* 26. அவர்பொருள் செய்தற் காந்துணை புரிக.
* அவர்கள் பொருள் ஈட்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தல் வேண்டும்.
* 27. அவர்நட் பெல்லா மவர்போற் கொள்ளுக.
* பெற்றோர்களின் நண்பர்களை அவர்களைப் போன்றே மதிக்க வேண்டும்.
* 28. அவர்பகை யெல்லா மவர்போற் றள்ளுக.
* அவர்தம் பகைவர்களை அவரைப்போல் தவிர்க்க வேண்டும்.
* 29. அவர்பெயர் விளங்கிட வறிவமைந் தொழுகுக.
* அவர்கள் புகழ் விளங்குமாறு விவேகத்துடன் நடத்தல் வேண்டும்.
* 30. இல்வாழ் வரசிற் கியைந்தவ ராகுக.
* இல்வாழ்க்கைக்கு ஏற்ற தகுதிகளை உடையவராதல் வேண்டும்.
*
==== 4.மெய்யைத் தொழுதல்====
*
* 31. மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள்
* உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும்.
* 32. உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது.
* உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும்.
* 33. அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது.
* உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது.
* 34. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது.
* உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது.
* 35. உலகந் தனதரு ணலனுற வாள்வது.
* உண்மை, தனது அருளினால் பல நலன்களை உலகத்திற்கு அளித்து ஆள்கிறது.
* 36. தொழுமுறை யதனைமுப் பொழுது முள்ளல்.
* எப்பொழுதும் மெய்ப்பொருளை நினைப்பதே அதனைத் தொழும் முறையாகும்.
* 37. உள்ளியாங் குறங்கி யுள்ளியாங் கெழுதல்.
* உண்மை, தான் நினைக்கும் வண்ணம் தன்னை மறைக்கும் மற்றும் தன்னை வெளிப்படுத்தும் இயல்புடையது.
* 38. எம்மதக் கடவுளுந் தம்ம தெனக்கொளல்.
* எல்லா மதக்கடவுளும் நம்முடைய கடவுள் என்று ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
* 39. உலகி லதனடு வோர்ந்து நிற்றல்.
* உலகத்தில் உண்மையின் நடுநிலைமையை அறிந்து கொள்ளவேண்டும்.
* 40. அந்தண ராகி யதனிலை யடைதல். உண்மையின் நிலையை(விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) அடைய வேண்டும்
*
==== 5.தீயினம் விலக்கல்====
*
* 41. தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே.
* தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும்.
* 42. தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர்.
* தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள்.
* 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள்.
* பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள்.
* 44. துணைவரல் லாரை யணையுமா வினத்தர்.
* தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர்.
* 45. அறிவினை மயக்குவ வருந்து மூடர்.
* அறிவினை மயக்கக்கூடிய பொருட்களை உட்கொள்ளும் மூடர்கள். 46. புரைவளர் பொய்ம்மை புகலுந் தீயர்.
* குற்றத்தை வளர்க்கும் இயல்புடையதாகிய பொய்யினைப் பேசும் தீயவர்கள்.
* 47. அறனோ பொருளோ வழிக்குங் கயவர்.
* அறத்தையும் பொருளையும் அழிக்கும் கீழ்மக்கள்.
* 48. பசுவின் செயலைப் பதியின தென்பர்.
* மனிதரின் செயல்களுக்கு இறைவனே காரணம் என்பவர்கள்.
* 49. இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
* இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
* 50. தீயின மெல்லா நோயென விலக்குக.தீயவர்களை நோயைப் போல் விலக்க வேண்டும்.
*
==== 6. நல்லினஞ் சேர்தல்====
*
* 51. நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே.
* நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும்.
* 52. நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர்.
* நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள்.
* 53. அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர்.
* உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள்.
* 54. தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர்.
* தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து கள்.
* 55. நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர்.
* நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார்.
* 56. உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர்.
* உலகத்தின் இயல்பை உணர்ந்து நிற்பவர்கள்.
* 57.அறனோ பொருளோ வாக்கி நிற்போர்.
* அறத்தையும் பொருளையும் படைப்பவர்கள்.
* 58. பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர்.
* நமது செயல்களின் பயனை நமக்கு அளிப்பது இறைவன் என்று கூறுபவர்கள்.
* 59. இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர். இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
* 60. தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக.
* நல்லவர்களைத் தேர்ந்து எடுத்து எப்பொழுதும் அவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.
*
==== 7.ஆசிரியரை யடைதல்====
*
* 61. அறிவினைத் தருபவ ராமா சிரியர்.
* அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார்.
* 62. இருபா லாருந் தருவதற் குரியவர்.
* ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
* 63. அறிவு வகையா னாசிரி யர்பலர்.
* பல வகையான அறிவனை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர்.
* 64. எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது.
* ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது.
* 65. அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல்.
* மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை ஆகும்.
* 66. நல்வினை விரும்பு நல்லவர்க் கோடல்.
* ஆசிரியர் என்பவர் நல்ல செயல்களைச் செய்பவராகவும் நல்ல நல்லவர்களின் நட்பை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
* 67. மாணவர் தமைதம் மகாரெனப் பேணல்.
* ஆசிரியர் தமது மாணவர்களை தனது மக்களைப் போல் காக்க வேண்டும்.
* 68. அறிந்தவை யெல்லாஞ் செறிந்திடச் சொல்லல்.
* தாம் அறிந்தவற்றை எல்லாம் மாணவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லுதல் வேண்டும்.
* 69. சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல்.
* ஆசிரியர் மாணவர்களை, அவர்கள் அறிந்தவற்றைச் செயல்படுத்தும் வல்லவர்களாகச் செய்தல் வேண்டும்.
* 70. அறிந்தா சிரியரை யடைந்தெலா மறிக.
* எல்லாவற்றையும் அறிந்த, சிறந்த ஆசிரியரை அடைந்து எல்லாவற்றையும் கற்றல் வேண்டும்.
*
==== 8. தன்னை யறிதல் ====
*
* 71. தன்னை யறித றலைப்படுங் கல்வி.
* தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும்.
* 72. மனிதரி லுடம்பு மனமான் மாவுள.
* மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன.
* 73. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு.
* காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும்.
* 74. உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம்.
* உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும்.
* 75. உடம்பு மனமுமா ளுயரறி வான்மா.
* உடலையும் மனத்தையும் ஆளுகின்ற உயர் அறிவு ஆன்மா ஆகும்.
* 76. ஆன்மா மனமுட றான்றன் வலிதனு.
* நமது வலிமை என்பது நம் ஆன்மா, மனம், உடல் ஆகியவை ஆகும்.
* 77. மெய்ம்முத லியமனன் வெளிச்செலும் வாயில்.
* மனம் தன்னை மெய் முதலிய ஐம்பொறிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது.
* 78. உடன்மனத் தின்பி னோடு மியலது.
* உடல் மனத்தைப் பின்பற்றும் இயல்பு உடையது.
* 79. மனமற வறநெறி மருவு மியலது.
* மனம் நல்வழி, தீயவழி இரண்டையும் சார்ந்திருக்கும் இயல்பு உடையது.
* 80. ஆன்மா மனத்தை யறநெறி யுய்ப்பது. ஆன்மா மனத்தை நல்வழியில் செலுத்துகிறது.
*
==== 9.மனத்தை யாளுதல் ====
*
* 81. மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி.
* ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும்.
* 82. நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது.
* மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது.
* 83. அறனு மறனு மறிதிற னிலாதது.
* மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது.
* 84. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும்.
* மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும்.
* 85. அதனெறி விடாஅ தாளுத றங்கடன்.
* மனத்தை அதன் வழியில் செல்லவிடாமல் அதனை ஆளுதல் நம் கடமை ஆகும்.
* 86. தானதிற் பிரிந்து சந்தத நிற்க.
* ஒருவன் தன் மனத்திலிருந்து, தான் எப்பொழுதும் பிரிந்து நிற்றல் வேண்டும்.
* 87. எதையது நினைத்ததோ வதையுடன் காண்க.
* மனம் எதை நினைக்கிறது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
* 88. மறமெனில் விலக்குக வறமெனிற் செலுத்துக.
* மனம் நினைப்பது தீயது என்றால் மனத்தை உடனடியாக அதிலிருந்து விலக்க வேண்டும்.மனம் நினைப்பது நல்லது என்றால் அதில் மனத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
* 89. பயனில வெண்ணிற் பயனதிற் றிருப்புக.
* மனம் நினைப்பது பயனற்றது என்றால் உடனடியாக பயனுள்ளவற்றில் மனத்தைத் திருப்ப வேண்டும்.
* 90. ஒன்றெணும் பொழுதுமற் றொன்றெண விடற்க.
* ஒன்றை நினைக்கும் பொழுது மனம் மற்றொன்றை நினைக்க விடுதல் கூடாது.
*
==== 10. உடம்பை வளர்த்தல் ====
*
* 91. உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி.
* உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும்.
* 92. உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல்.
* உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும்.
* 93. உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும்.
* உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும்.
* 94. உரனிலா வுடம்பு வரனிலா மங்கை.
* வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது.
* 95. உளந்தொழில் செயற்கு முடலுரம் வேண்டும்.
* நாம் எண்ணும் செயலைச் செய்வதற்கு உடல் வலிமை வேண்டும்.
* 96. வளியன னீரதி லளவி னுறச்செயல்.
* காற்று, அனல், நீர் ஆகியவை உடலில் சரியான அளவுடன் இருக்குமாறு செய்தல் வேண்டும்.
* 97. மாறுபா டிலாவூண் மறுத்துமுப் பொழுதுணல்.
* உடலுக்குப் பொருந்துகின்ற உணவை அளவுடன் மூன்று முறையாக உண்ண வேண்டும்.
* 98. சிலம்பமெய்ப் பயிற்சிக டினந்தொறுஞ் செய்க.
* சிலம்பாட்டம் போன்ற உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தல் வேண்டும்.
* 99. பிணியுறி னுடன்பல தீர்த்தான் மருந்துணல்.
* நோயுற்றால் உடனடியாக (பல நோய்களைக் குணமாக்கிய) அநுபவமுள்ள மருத்துவரிடம் வைத்தியம் செய்தல் வேண்டும்.
* 100. நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க.
* நாம் எண்ணியதைச் செய்யும்படி உடலை வளர்த்தல் வேண்டும்.
*
==== 11. கொலை விலக்கல் ====
*
* 101. கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல்.
* கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும்.
* 102. வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல்.
* வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும்.
* 103. அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல்.
* கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும்.
* 104. இயலு மிடத்தச் செயலைத் தடாமை.
* நம்மால் முடியும் போதும் ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே.
* 105. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம்.
* கொலை செய்யப்படும் உயிரின் அறிவு நிலைக்கேற்ப அதன் கொடுமை வேறுபடும்.
* 106. கொலைபா தகங்களுட்டலையாய தென்ப.
* கொலை, பாவங்களில் மிகக் கொடியது ஆகும்.
* 107. அதுபல பிறப்பினு மருந்துயர் விளைக்கும்.
* அது பல பிறவிகளிலும் கொடிய துன்பத்தை விளைவிக்கும்.
* 108. தொழுநோய் வறுமையோ டழுநோய் பெருக்கும்.
* தொழுநோய், வறுமை இவற்றோடு கண்ணீரைப் பெருக்கக் கூடிய துன்பங்களையும் ஏற்படுத்தும்.
* 109. கொலைபுரி வார்க்கிங் கிலைபதி யருளே.
* கொலை செய்பவர்களுக்கு இறைவன் அருள் கிட்டாது.
* 110. கொலையினை விலக்கினார்க் கூற்றமும் விலக்கும். கொலையை விலக்கியவர்களிடம் இருந்து எமனும் விலகி நிற்பான்.
*
==== 12. புலால் விலக்கல்====
*
* 111. புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ?
* புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும்.
* 112. புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்?
* புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்?
* 113. அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ?
* அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை.
* 114. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ?
* சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை.
* 115. அன்றியும் வலியோ வறிவோ சிறந்தது?
* அது மட்டுமில்லாமல் வலிமை, அறிவு இவற்றில் எது சிறந்தது?அறிவுதான் சிறந்தது.
* 116. வலியோ டறிவினை மக்களூன் ற்ராதுகொல்?
* புலால் வலிமையும் தராது. அறிவையும் தராது.
* 117. மக்களூ னுணாது மறிமுத லுண்பதென்?
* மனித மாமிசம் உண்ணாது ஆடு முதலியவற்றை ஏன் உண்கிறார்கள்?
* 118. பொறியறி விலார்க்கு மறிமுதற் றாழ்ந்தவோ?
* ஐம்பொறிகளின் மூலம் பெறக்கூடிய அறிவு அற்றவர்களைவிட ஆடு முதலியவை தாழ்ந்தவை அல்ல.
* 119. அவைகொன் றுண்பார்க் கருளுண் டாமோ?
* அவற்றக் கொன்று உண்பவர்களுக்கு இறையருள் கிட்டாது.
* 120. அருளிலா ரருண்மயப் பொருணிலை யடைவரோ?
* பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தாதவர், அன்பு மயமான இறைநிலையை அடைய மாட்டார்.
*
==== 13. களவு விலக்கல்====
(களவு- திருட்டு)
*
* 121. களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல்.
* களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும்.
* 122. வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை.
* ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும்.
* 123. களவினை யேவுதல் களவிற் குதவுதல்.
* களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும்.
* 124. தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை.
* தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில் அதுவும் களவு ஆகும்.
* 125. உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம்.
* இந்த செயலுக்கான தண்டனை பொருளை இழந்தவர்களின் நிலைமையைப் பொறுத்து மாறுபடும்.
* 126. களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன்.
* களவு செய்பவர்களும் மற்றவர்களிடம் களவுத் தொழில் இழிவானது என்றே கூறுவர்.
* 127. கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர்.
* களவு செய்பவர்கள், தங்களுடைய களவினைத் தடுப்பவர்களைக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.
* 128. கள்ளுந ருடையராற் கொல்லவும் படுவர்.
* பொருளுக்கு உரிமையாளர்களால் களவு செய்பவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் ஏற்படலாம்.
* 129. களவினாற் பலபிறப் பளவிலா வறுமையாம்.
* களவு பல பிறப்புகளுக்கு மிகுந்த வறுமையைக் கொடுக்கும்.
* 130. களவினை விலக்கினார்க் களவிலாச் செல்வமாம். களவு செய்யாமல் இருந்தால் அளவற்ற செல்வம் கிட்டும்.
*
==== 14. சூது விலக்கல் ====
*
* 131. சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி.
* சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும்.
* 132. பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல்.
* சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும்.
* 133. அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும்.
* சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும்.
* 134. உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும்.
* சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான நிலைமையை ஏற்படுத்தும்.
* 135. பொறையு மறிவும் புகழுங் கெடுக்கும்.
* சூதாட்டம், ஒருவனின் பொறுமை, அறிவு, புகழ் இவற்றை அழிக்கும் தன்மை உடையது.
* 136. சூதர்தஞ் சேர்க்கையாற் சூதுகைப் புக்கிடும்.
* சூதாடுபவர்களின் நட்பு சூதாடும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
* 137. சூதரா தியரைத் தூர நிறுத்துக.
* அதனால் சூதாடுபவர்களிடம் இருந்து நாம் விலகியே இருக்க வேண்டும்.
* 138. காலங் கழித்திடக் கவறுகை யெடுப்பர்.
* பொழுதுபோக்கு என்று எண்ணி சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவர்.
* 139. அதனினு மாலமுண் டழிதனன் றென்க.
* சூதாட்டத்தில் ஈடுபடுவதைவிட கொடிய விஷத்தை உண்டு அழிதல் நல்லது ஆகும்.
* 140. கவறுருள் களத்தைக் கனவினுங் கருதேல்.
* சூதாடும் இடத்தைக் கனவினில் கூட நினைத்தல் கூடாது.
*
==== 15. இரவு விலக்கல்====
(இரவு-யாசித்தல்)
*
* 141. இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல்.
* இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.
* 142. இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப.
* இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம்.
* 143. இரவினிற் களவு மேற்றமா மென்ப.
* இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம்.
* 144. இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப.
* உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக.
* 145. இரந்துயிர் வாழ்தலி னிறத்தனன் றென்ப.
* இரந்து உயிர்வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.
* 146. அவருரை யெல்லா மழியா வுண்மை.
* இவை எல்லாம் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய(அழியாத) உண்மை ஆகும்.
* 147. இரந்துயிர் வாழ்தலிங் கிழிவினு ளிழிவே.
* இரந்து உயிர் வாழ்வது இழிவான செயல்களுக்குள் இழிவானது ஆகும்.
* 148. தமக்குவாழ் வாரதிற் சாதலு நன்றாம்.
* தமக்காக இரந்து வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.
* 149. பிறர்க்குவாழ் வாரதாற் பிழைத்தலு நன்றாம்.
* பிறருக்காக இரந்து வாழ்பவர்கள் உயிர் வாழ்வது சிறந்தது ஆகும்.
* 150. அவரு மதைவிடி னரும்பெருஞ் சிறப்பாம்.
* பிறருக்காக இரப்பவர்களும் இரத்தல் தொழிலை விட்டுவிட்டால் அது மிகவும் மதிப்பிற்குரிய சிறந்த செயலாகும்.
*
==== 16. மயக்குவ விலக்கல்====
(மயக்குவ-போதைப்பொருட்கள்)
*
* 151. மயக்குவ வறிவனை மயக்கும் பொருள்கள்.
* மயக்குவ என்பவை அறிவனை மயக்கும் பொருட்கள் ஆகும்.
* 152. அவைகள் கஞ்சா வபின்முத லாயின.
* அவை கஞ்சா, அபின் போன்றவை.
* 153. அறிவுதம் முயிரே யாதியே யுலகே.
* நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது.
* 154. அறிவனை மயக்குத லவற்றை யழித்தலே.
* அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும்.
* 155. அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர்.
* அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச் செய்வார்.
* 156. மயக்குவ சிலபிணி மாய்க்குமென் றுண்பர்.
* இவ்வகைப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்கும் என்று அதனை உண்பார்கள்.
* 157. மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமம்.
* இவற்றை உண்ணாமல் அந்த நோய்களைக் குணமாக்குவதே மிகச் சிறந்தது ஆகும்.
* 158. மயக்குவ வலியினை வழங்குமென் றுண்பர்.
* இவை வலிமையைக் கொடுக்கும் என்று சிலர் உண்ணுவர்.
* 159. வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும்.
* இவை வலிமையைக் கொடுப்பது போல் வலிமையை எல்லாம் அழிக்கும்.
* 160. ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல்.
* ஆதலால் அறிவினை மயக்கும் பொருட்களை சிறிதளவு கூட உண்ணுதல் கூடாது.
*
==== 17. பொய்ம்மை விலக்கல் ====
*
* 161. நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை.
* நடக்காததைச் சொல்வது பொய் ஆகும்.
* 162. நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை.
* நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும்.
* 163. தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம்.
* தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும்.
* 164. புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம்.
* குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும்.
* 165. வாய்மையைத் தருவதே வாயென வறிக.
* வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே "வாய்" என்ற உறுப்பு "வாய்" என்று அறியப்படும்.
* 166. மற்றவை யெலாம்வெறும் வாயிலென் றறிக.
* வாய்மை(உண்மை)யைப் பேசாதபோது "வாய்", உணவு உண்ணுவதற்கான ஒரு வழி மட்டுமே ஆகும்.
* 167. வாய்மை யகத்தது தூய்மையை வளர்க்கும்.
* உண்மை மனத் தூய்மையை வளர்க்கும்.
* 168. பொய்ம்மை யகத்தது புரையினை வளர்க்கும்.
* பொய்ம்மை, மனத்தில் குற்றத்தினை வளர்க்கும்.
* 169. பொய்ம்மையை யாள்பவர் புன்னர காழ்வர்.
* பொய் பேசுபவர்கள் நரகத்தில் விழுந்து துன்பம் அடைவார்கள்.
* 170.பொய்ம்மை யொரீஇயவர் புகழ்வீ டடைவர்.
* பொய்யினை நீக்கியவர்கள் புகழுக்கு உரிய இடமான சொர்க்கத்தை அடைந்து இன்பம் அடைவார்கள்.
*
==== 18. புறஞ்சொல்லல் விலக்கல் ====
*
* 171. புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல்.
* புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும்.
* 172. அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது.
* புறஞ்சொல்லல், அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும்.
* 173. புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும்.
* புறஞ்சொல்லல், பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது.
* 174. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும்.
* புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும்.
* 175. புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று.
* புறஞ்சொல்லல் கீழ்மக்களின் குணங்களுல் ஒன்று ஆகும்.
* 176. புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம்.
* புறஞ்சொல்லுபவர்கள் அறத்தினைப் பேசுவது ஏமாற்று வேலை ஆகும்.
* 177. புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை.
* புறஞ்சொல்லும் இயல்பு உடையவர்களுக்கு அறத்தினைப்பற்றி எடுத்துக்கூறுவது அறிவற்ற செயல் ஆகும்.
* 178. புறஞ்சொலல் கேட்டலும் புன்மையென் றறிக.
* புறஞ்சொல்லலைக் காதால் கேட்பதும் இழிவான செயல் ஆகும்.
* 179. புறஞ்சொலி வாழ்தலிற் பொன்றனன் றென்ப.
* புறம் பேசி உயிர் வாழ்வதைவிட இறத்தல் சிறந்தது ஆகும்.
* 180. ஆதலாற் புறஞ்சொல லடியொடு விடுக.
* புறஞ்சொல்லலை முற்றிலுமாக விட்டுவிடுதல் வேண்டும்.
*
==== 19. பயனில் சொல் விலக்கல் ====
*
* 181. பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே.
* பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும்.
* 182. அறியா மையினின் றச்சொல் பிறக்கும்.
* பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது.
* 183. அறியா மையினை யச்சொல் வளர்க்கும்.
* பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது.
* 184. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும்.
* அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது.
* 185. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும்.
* பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின் நட்பை அதிகரிக்கும் இயல்பு உடையது.
* 186. பயனுள சொல்லினைச் சொலவிடா தச்சொல்.
* பயனற்ற பேச்சு பயனுள்ள பேச்சினை தடுக்கும் இயல்பு உடையது.
* 187. பயனுள செயலினைச் செயவிடா தச்சொல்.
* பயனற்ற பேச்சினால் பயனுள்ள செயல்களைச் செய்ய இயலாத நிலை ஏற்படும்.
* 188. பயனில சொல்லுவர் நயனுறா ரென்றும்.
* பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள் ஒரு நாளும் இன்பம் அநுபவிக்க மாட்டார்கள்.
* 189. பயனில சொல்பவர் பதடியென் றறைப.
* பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள், மனிதர்களில் பதர் போன்றவர்கள்.(அவர்களால் ஒரு பயனும் ஏற்படாது)(பதர்-நெல்லில் உமி மட்டும் இருக்கும். உள்ளே அரிசி இருக்காது)
* 190. பயனில விலக்கிப் பயனுள சொல்லுக.
* அதனால் பயனற்றவற்றை நீக்கிப் ப்பயனுள்ளவற்றை மட்டும் பேச வேண்டும்.
*
==== 20. அழுக்கா றொழித்தல்====
(அழுக்காறு- பொறாமை)
*
* 191. அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல்.
* அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும்.
* 192. அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே.
* அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை.
* 193. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே.
* பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை.
* 194. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே.
* பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது.
* 195. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும்.
* அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம் இல்லாத நிலைமை ஏற்படும்.(வறுமை ஏற்படும்)
* 196. வறுமையும் பசியுஞ் சிறுமையு முளவாம்.
* அழுக்காறு கொண்டவனுக்கு ஏழ்மை, பசி, துன்பம் ஆகியவை ஏற்படும்.
* 197. அழுக்கா றுடைமைகீழ் வழுக்கா றென்ப.
* அழுக்காறு கொள்வதைப் போல் இழிவான செயல் ஏதும் இல்லை.
* 198. விலங்குகளு மழுக்கா றிலங்குத லில்லை.
* விலங்குகளுக்கு இடையே பொறாமை நிலவுவதில்லை.
* 199. அறிவுடை மக்க ளதுகொளல் புதுமை.
* அப்படி இருக்க, சிந்திக்கத் தெரிந்த மனிதர் பொறாமை கொள்ளுதல் வியப்புக்கு உரியது ஆகும்.
* 200. அழுக்கா றுளத்துறா தநுதின மொம்புக.
* ஆதலால் அழுக்காறு உள்ளத்தினுள் ஏற்படாதவாறு அநுதினமும் மனத்தினைக் காத்தல் வேண்டும்.
*
==== 21. எண்ணெழுத் தறிதல் ====
*
* 201.எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம்.
* எண் என்பது கணிதம் ஆகும்.
* 202.எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம்.
* எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும்.
* 203.எண்ணு மெழுத்துங் கண்ணென மொழுப.
* எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள் போன்று மிக இன்றியமையாதது என்று கூறலாம்.
* 204.எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது.
* எண் அறியாதவர்கள் பொருள் ஈட்டுவது அரிதான செயல் ஆகும்.
* 205.எழுத்தரி யார்பிற வெய்துத லரிது.
* எழுத்து அறியாதவர்கள் மற்றவற்றை அடைதல் அரிதான செயல் ஆகும்.(மற்றவை- அறம், இன்பம், வீடுபேறு)
* 206.எண்ணெழுத் தறிந்தா ரெய்துவர் நான்கும்.
* எண்ணும் எழுத்தும் அறிந்தவர்கள் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கையும் அடைவார்கள்.
* 207.எண்ணு மெழுத்து மிடைவிடா தாள்க.
* எண்ணையும் எழுத்தையும் இடைவிடாது பயில வேண்டும்.
* 208.அவைதாய் மொழிகொளி னதைமுன் பறிக.
* தாய்மொழியில் உள்ளவற்றை முதலில் கற்க வேண்டும்.
* 209.பின்பவை மிக்குள பிறமொழி யறிக.
* பின்பு இவை அதிகம் உள்ள பிறமொழியினைக் கற்றல் வேண்டும்.
* 210.அறிவதைக் கசடற வறிந்துகொண் டொழுகுக.
* கற்றுக் கொள்வதை முழுமையாகக் கற்றுக்கொண்டு அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
*
====22. தொழில் அறிதல் ====
*
* 211. மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே.
* தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும்.
* 212. தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது.
* உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது.
* 213. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம்.
* தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும்.
* 214. தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர்.
* தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர்.
* 215. அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன்.
* உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை ஆகும்.
* 216. படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க.
* படைக்கலன்களை இயக்குவதைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
* 217. படைவகுத் தமர்செயு நடையெலா மறிக.
* போர் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
* 218. புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக.
* பூமி, கடல், வானம் இவற்றில் பயணம் செய்யக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
* 219. எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக.
* தம் உருவத்தை மறைத்து வேறு உருவத்தில் தோன்றிடப் பழகுதல் வேண்டும்.
* 220. உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.
* உழவுத்தொழில், வாணிகம், கைத்தொழில் முதலியவற்றைக் கற்றல் வேண்டும்.
*
==== 23. திருந்தச் செய்தல் ====
*
* 221.திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல்.
* திருந்தச் செய்தல் என்பது சிறப்பான முறையில் ஒரு செயலைச் செய்வது ஆகும்.
* 222. அழகு நிறைவு மமைவுறச் செய்தல்.
* திருந்தச் செய்தல் என்பது பொருத்தமான முறையில் முழுமையாகச் செய்வது ஆகும்.
* 223.திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம்.
* ஒரு செயலைச் செய்யும் முறையானது திருந்தமாகச் செய்வதே ஆகும்.
* 224.திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும்.
* திருந்தமாகச் செய்வது பல பெருமைகளை ஏற்படுத்தும்.
* 225. திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும்.
* திருத்தமில்லாத செயல்களால் சிறுமைகள் ஏற்படும்.
* 226. சிறுதொழி லெனினுந் திருந்தவே செய்க.
* சிறிய தொழிலாக இருந்தாலும் திருந்தமாகச் செய்தல் வேண்டும்.
* 227. சிறுதொழிற் றொகுதியே பெருந்தொழி லாவது.
* சிறு தொழில்களின் தொகுப்பே பெருந்தொழில் ஆகும்.
* 228. செய்யும் தொழிலிலே சிந்தயைச் செலுத்துக.
* நாம் செய்யும் தொழிலில் நம் சிந்தனையை முழுமையாகச் செலுத்துதல் வேண்டும்.
* 229. தொழிலினைக் கியமாய்த் துரிதமாகச் செய்க.
* தொழிலை முறையாக விரைவாகச் செய்தல் வேண்டும்.
* 230.பிறர்செய் தொழிற்குப் பின்னிடா வகைசெயல்.
* செய்யும் தொழிலை மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செய்தல் வேண்டும்.
*
====24. நன்றி யறிதல் ====
*
* 231. நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி.
* மற்றவர்கள் நமக்குச் செய்த யை நினைவு கூர்தலே நன்றி ஆகும்.
* 232. உறவினர் முதலியோ ருதவுதல் கடனே.
* உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும்.
* 233. பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே.
* பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை.
* 234. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல்.
* துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும்.
* 235. உயர்ந்தது கைம்மா றுகவா துதவல்.
* உதவியில் உயர்ந்தது பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவி ஆகும்.
* 236. அறிதலெஞ் ஞான்று மதைநினைந் தொழுகல்.
* நன்றி அறிதல் என்பது செய்த உதவியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வது ஆகும்.
* 237. உதவியோர் குடியெலா முயர்வுற வுள்ளல்.
* நமக்கு உதவி செய்தவர் குடும்பத்துடன் உயர்வு பெற எண்ணுதல் நன்றி அறிதல் ஆகும்.
* 238. உதவியோ ரறவுரை யுடனிறை வேற்றல்.
* உதவி செய்தவர்களின் அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
* 239. உதவியோர் மிகைசெயி னுடனதை மறத்தல்.
* உதவி செய்தவர்கள் ஏதேனும் குற்றங்களைச் செய்தால் உடனடியாக அதை மறந்துவிடுதல் வேண்டும்.
* 240.அறிதற் களவுண் டுதவி சொலக்கெடும்.
* உதவி பெற்றவர் உதவியைப் பற்றிப் பாராட்டிப் பேசலாம். ஆனால் உதவி செய்தவர் உதவியைப்பற்றிப் பேசுதல் கூடாது.
*
====25. நடுவு நிலைமை ====
*
* 241. நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல்.
* நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும்.
* 242. பிறவுயிர் நடுவள விறனடு வின்மை.
* பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும்.
* 243. நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள்.
* அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும்.
* 244. அறனெலா நிற்பதற் கஃதா தாரம்.
* எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும்.
* 245. அதுசிறி தசையி னறனெலா மழியும்.
* நடுவு நிலைமையில் இருந்து சிறிதளவேனும் மாறுவது அறத்தை எல்லாம் அழித்துவிடும்.
* 246. நடுவினு ணிற்பவர் நலனெலாம் பெறுவர்.
* நடுவு நிலைமையில் நிற்பவர் எல்லா நலங்களையும் பெறுவார்கள்.
* 247. நடுவினை விடாரை நானிலம் விடாது.
* நடுவு நிலைமையில் நிற்பவரை இந்த உலகம் ஒரு நாளும் கைவிடாது.
* 248. நடுவிகந் தாருடன் கெடுவது திண்ணம்.
* நடுவு நிலைமை நீங்கியவர் அழிந்து போவது உறுதி.
* 249. நடுவிகந் தாரை நரகமும் விடாது.
* நடுவு நிலைமை நீங்கியவர் நரகத்தில் வீழ்வார்கள்.
* 250. ஆதலா னடுவி லசையாது நிற்க.
* ஆதலால் நடுவு நிலைமையில் உறுதியாக நிற்றல் வேண்டும்.
*
====26. அடக்க முடைமை ====
*
* 251. அடக்க மனம்புலத் தணுகா தடக்கல்.
* அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும்.
* 252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல்.
* அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும்.
* 253. அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும்.
* அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும்.
* 254. அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும்.
* அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும்.
* 255. அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே.
* அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும்.
* 256. அடக்க மிலாமை யழிவெலாந் தருமே.
* அடங்காமை எல்லாவற்றையும் அழித்துவிடும்.
* 257. அடக்கமெய் வீட்டிற் கடிப்படி யாகும்.
* அடக்கம் மெய்யாகிய வீட்டின் முதற்படியாகும்.
* 258.அப்படி யேறினா ரடைவரவ் வீடு.
* அடக்கம் உடையவர் வீடுபேற்றை அடைவார்.
* 259. அப்படி யேறா ராழ்வர்வெந் நரகு.
* அடக்கம் இல்லாதவர் நரகத்தில் வீழ்வார்.
* 260. ஆதலா லடக்க மநுதின மொம்புக.
* ஆதலால் எப்பொழுதும் அடக்கத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்.
*
====27 ஒழுக்க முடைமை ====
*
* 261. ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே.
* ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும்.
* 262. அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர்.
* அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர்.
* 263. அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல்.
* பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும்.
* 264. இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல்.
* பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும்.
* 265. நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்.
* அவர்களது எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக விளங்கும்.
* 266. மறநெறி விலக்கி யறநெறி செல்லல்.
* அவர்கள் தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள்.
* 267. தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல்.
* அவர்கள் தான் பெறவேண்டும் என்று எண்ணுவதை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
* 268. தன்னுயிர் போல மன்னுயிர்ப் பேணல்.
* அவர்கள் தன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பார்கள்.
* 269.பகைசெய் தவரொடு நகைசெய் தளாவல்.
* அவர்கள் பகைவர்களோடும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து பழகுவார்கள்.
* 270. உயிரெலா மெய்யென வோர்ந்தவை யோம்பல்.
* எல்லா உயிர்களும் இறைவனே என்று உணர்ந்து எல்லா உயிர்களுக்கும் மதிப்பு அளிப்பார்கள்.
*
====28. அறிவுடைமை ====
*
* 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது.
* அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது.
* 272. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது.
* அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது.
* 273. அறிவு பகைவரா லழிக்கப் படாதது.
* அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது.
* 274. அறிவினை யுடையா ரனைத்து முடையர்.
* அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர்.
* 275. அறிவில் லாதார் யாதுமில் லாதார்.
* அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர்.
* 276. அறிவிற் கறிகுறி யாவன செய்தல்.
* அறிவுடைமை என்பது நன்மை பயக்கும் செயல்களைச் செய்தல் ஆகும்.
* 277. எளியவாச் செலவுரைத் தரியவை யுணர்தல்.
* அறிவு என்பது கேட்போர் உள்ளத்தில் பதியும்படி எளிமையாகச் சொல்லுவதும் மற்றவர்கள் கூறும் எளிதில் அறியமுடியாத பொருளைப் புரிந்து கொள்ளுதலும் ஆகும்.
* 278. பாவம் பழிக்குப் பயந்திவ ணொழுகல்.
* பாவம், பழி இவற்றிற்கு அஞ்சி நடத்தல் அறிவுடைமை ஆகும்.
* 279. உலகினோ டென்று மொத்து நடத்தல்.
* அறிவுடைமை என்பது உலகில் உயர்ந்தவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதுபோல அவர்களைப் பின்பற்றி வாழ்வது ஆகும்.
* 280. எதிரதாக் காத்தெவ் வின்பமு மடைதல்.
* பின் வரப்போவதை முன்பே அறிந்து தன்னைக் காத்து எல்லா விதமான இன்பமும் அநுபவித்தல் அறிவுடைமை ஆகும்.
*
==== 29. ஊக்க முடைமை ====
*
* 281. ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி.
* உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும்.
* 282. ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும்.
* ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது.
* 283. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும்.
* ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது.
* 284. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர்.
* ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
* 285. ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள்.
* ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற உயிரற்ற உடல்கள் ஆவர். அதாவது எதற்கும் பயனற்றவர்கள் ஆவர்.
* 286.உயர்ந்தவை யெவையோ வவையெலா முள்ளுக.
* உயர்ந்தவை அனைத்தையும் அடைய எண்ண வேண்டும்.
* 287. அவற்றினு ளொன்றை யடைந்திட விரும்புக.
* அவற்றினுள் ஒன்றை அடைய விரும்புதல் வேண்டும்.
* 288. அதனை யடையு மாறெலா மெண்ணுக.
* அதனை அடையும் வழிகளை எல்லாம் ஆராய வேண்டும்.
* 289. ஒவ்வொன் றினுமுறு மூறெலா மெண்ணுக.
* ஒவ்வொரு வழியிலும் உள்ள இடையூறுகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.
* 290. ஊறொழித் ததையுறு முபாயமுங் கருதுக. அத்தகைய இடையூறுகளை நீக்கி நம் குறிக்கோளை அடைய உதவும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.
*
====30. முயற்சி யுடைமை ====
*
* 291. உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி.
* உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும்.
* 292. முயற்சி பலவகை யுயற்சி நல்கும்.
* முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது.
* 293. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும்.
* முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும்.
* 294. முயற்சி யுடையார் மூவுல காள்வார்.
* விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள்.
* 295. முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர்.
* முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர் பழிக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
* 296. ஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக.
* நம் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு குறிகோளை உடனே அடைய தீர்மானித்தல் வேண்டும்.
* 297.அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க.
* அதை அடைய அதிக இடையூறில்லாத (சிரமமில்லாத) நல்ல வழியில் முயற்சி செய்தல் வேண்டும்.
* 298. உறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க.
* அந்த முயற்சியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி அறிவு மற்றும் ஆற்றலுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
* 299. தவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க.
* முயற்சியில் தோல்வியுற்றாலும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும் நம் மன உறுதியை இழத்தல் கூடாது.
* 300. முயற்சியின் விரிமுத னூலினு ளறிக.
* முயற்சியினைப்பற்றி விரிவாக முதல் நூலில் இருந்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.(முதல் நூல்- திருக்குறள்)
*
 
===இல்வாழ்வியல்===
*
==== 31. இல்வாழ் வுயர்வு ====
*
* 301. இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல்.
* இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும்.
* 302. எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம்.
* எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும்.
* 303. இல்வாழ் வார்கட னில்லற மியற்றல்.
* இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும்.
* 304. என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம்.
* எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும்.
* 305. இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே.
* இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில் இவரே எல்லோர்க்கும் உணவளிப்பவர்)
* 306. இன்னிலை யெவற்றினு நன்னிலை யென்ப.
* மக்கள் நான்கு நிலைகளில் வாழ்ந்தனர்.
* பிரம்மச்சர்யம் -திருமணத்துக்கு முந்திய கல்வி கற்கும் பருவம்.
* இல்வாழ்வான் -திருமணம் செய்து வாழும் பருவம்.
* வானப்பிரஸ்தம் -திருமணம் செய்து இல்வாழ்க்கையில் தமது கடமைகளை முடித்து துறவறம் எய்தும் பருவம்.
* சந்நியாசம் - துறவு வாழ்க்கை.
* இல்வாழ்க்கை நிலை என்பது மற்ற மூன்று நிலைகளைவிட சிறந்த நிலை ஆகும்.
* 307. எந்நிலை யவர்க்கு மில்வாழ் வார்துணை.
* எல்லா நிலையில் வாழ்பவர்களும் இல்வாழ்வாரைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
* 308. அந்நிலைப் பெருக்கே யரசென வறிக.
* குடும்ப அமைப்பின் மிகப் பெரிய வடிவமே அரசாட்சி ஆகும்.
* 309. அதற்கா நன்முத லன்பெனும் பொருளே.
* குடும்ப அமைப்பின் மூலதனம் அன்பே ஆகும்.
* 310. அதிலாம் பயன்க ளறமுத னான்கே.
* இல்வாழ்வான் அறம், பொருள், இன்பம், வீடுபேறு இவற்றை அடைவான்.
*
==== 32. இல்லமைத்தல்====
*
* 311. அகல நீள மரைக்கான் மைல்கொளல்.
* வீடு கட்டுவதற்கான மனை 20 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் உடையதாக இருக்க வேண்டும்.
* 312. ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல்.
* வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும்.
* 313. மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல்.
* மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும்.
* 314. இல்லிற் கீரா யிரமடி சதுரமாம்.
* வீடு இரண்டாயிரம் சதுரடி அளவில் இருத்தல் வேண்டும்.
* 315. நிலமேன் மதிற்கு நேர்கால் கீழ்செயல்.
*
* 316. வளியன னீர்மா வழியா வகைசெயல்.
* காற்று, நெருப்பு, வெள்ளம், விலங்குகள் இவற்றால் பாதிக்கப்படாத வகையில் வீடு கட்டப்பட வேண்டும்.
* 317. வளியொளி யளவினுள் வரச்செல வழிசெயல்.
* வீட்டினுள் காற்றும் வெளிச்சமும் போதுமான அளவு வந்து செல்லும்படி வீடு கட்டப்பட வேண்டும்.
* 318. பொருட்குஞ் செயற்கும் பொருத்தமாப் பகுத்திடல்.
* நம்முடைய பொருளாதார நிலைமைக்கும் செயல் திறமைக்கும் ஏற்றவாறு வீடு கட்டப்பட வேண்டும்.
* 319. நிலவறை தான்செய னிதிமிகின் மேற்செயல்.
* இவை மிகுதியாக இருந்தால் நிலவறை, மேல் வீடு கட்டலாம்.
* 320.நற்றரு செடிகொடி யிற்புறத் தமைத்திடல்.
* நன்மை தரக்கூடிய மரங்கள், செடி கொடிகள் இவற்றை வீட்டிற்கு வெளியே நட்டு வளர்க்கலாம்.
*
====33. உயிர்த்துணை கொள்ளல் ====
*
* 321. உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை.
* உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும்.
* 322. அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே.
* வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை.
* 323. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம்.
* ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது.
* 324. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல்.
* ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல் வேண்டும்.
* 325. கொளுமுன் கொண்டிடிற் குற்றம் பலவாம்.
* ஆராயாமல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது பலவகைப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
* 326. துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்.
* வாழ்க்கைத் துணையை இழந்தவரைத் திருமணம் செய்வது மிகச் சிறந்த செயலாகும்.
* 327. விரும்பா தவரை விரும்புதல் பாவம்.
* தம்மை விரும்பாதவரை விரும்புதல் கொடிய செயல் ஆகும்.
* 328. துணைநலங் குடிமையே தூய்மையே யொழுக்கமே;
* வாழ்க்கைத் துணையின் பண்புகள் நற்குடிப்பிறப்பு, (எண்ணத்திலும், சொல்லிலும், உடலிலும்)தூய்மை, ஒழுக்கம்;
* 329. பருவமே யெழிலே பண்பே யின்சொலே;
* மற்றும் இளமை, அழகு, நற்பண்புகள், இனிமையான சொல்;
* 330. வரவினுள் வாழ்தலே மடிதுயி லிலாமையே.
* மற்றும் வாழ்க்கைத் துணையின் வருமானத்திற்குள் வாழும் திறமை, சோம்பலின்மை, அதிகமாகத் தூங்காத தன்மை ஆகியவை ஆகும்.
*
====34. உயிர்த்துணை யாளுதல் ====
*
* 331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க.
* கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும்.
* 332. ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க.
* ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும்.
* 333. துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர்.
* வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்)
* 334. தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன.
* ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம் அவரது உயிர்த்துணைக்குச் சொந்தம் ஆகும்.
* 335. தன்றுணை யுயிர்முத றனக்காங் குரியன.
* அதுபோல் அவரது வாழ்க்கைத்துணையின் உயிர் முதலியவை அவருக்குச் சொந்தம் ஆகும்.
* 336. இருவராத் தோன்றினு மொருவரே யுள்ளின்.
* கணவன், மனைவி இவர்கள் தோற்றத்தில் இருவராக இருந்தாலும் உண்மையில் ஒருவரே ஆவர்.
* 337. தானறிந் தவையெலாந் தன்றுணைக் குணர்த்துக.
* ஒருவர் தான் அறிந்தவற்றை எல்லாம் தன் வாழ்க்கைத்துணைக்குக் கற்றுத் தர வேண்டும்.
* 338. தனதுநன் னெறிதுணை சார்ந்திடச் செய்க.
* அவரது நேர்மையான வழியில் வாழ்க்கைத்துணையையும் செல்லுமாறு செய்தல் வேண்டும்.
* 339. இயற்றுவ துணையுட னெண்ணி யியற்றுக.
* எந்தச் செயலைச் செய்தாலும் வாழ்க்கைத்துணையுடன் ஆலோசித்துப் பின் செய்தல் வேண்டும்.
* 340. உண்பன துணையோ டுடனிருந் துண்ணுக.
* உண்ணுவதை வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்தே உண்ணுதல் வேண்டும்.
*
*
==== 35. இன்பந் துய்த்தல்====
*
* 341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம்.
* வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும்.
* 342. துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும்.
* இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
* 343. முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல்.
* இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும்.
* 344. தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம்.
* தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு இன்பம் கிடைக்கும்
* 345. தானின் புறவெணிற் றனக்கதெய் தாதே.
* தான் மட்டும் இன்புற நினைத்தால் தனக்கு இன்பம் கிடைக்காது.
* 346. ஊட லுணர்தல் புணர்த லதன்வகை.
* ஊடலும் அதனை உணர்ந்து நீக்குதலும் புணர்தலும் இன்பங்களாகும்.
* 347. ஊட னிமித்த முடனுட னாக்குக.
* ஊடலின் காரணத்தை அறிந்து அதனை உடனுக்குடன் நீக்குதல் வேண்டும்.
* 348. இரந்தும் புணர்ந்து முணர்ந்திடச் செய்க.
* வாழ்க்கைத்துணையை வேண்டியும் புணர்ந்தும் இன்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும்.
* 349. இருந்திரங் கத்துணை பிரிந்திடல் நீக்குக.
* வாழ்க்கைத்துணை மனம் வருந்துமாறு பிரிந்து செல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.
* 350. துணையழத் துறந்துமெய் யிணைதலன் பிலாவறம்.
* வாழ்க்கைத்துணை மனம் வருந்தத் துறவறம் மேற்கொள்வது அன்பிலாத செயலாகும்.
*
====36. காமம் விலக்கல்====
*
* 351. காம மகத்தெழு மாமத வெறியே.
* காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும்.
* 352. இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே.
* இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும்.
* 353. இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம்.
* சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும்.
* 354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம்.
* நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும்.
* 355. காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்.
* காமம் அறிவையும் மனத்தையும் கெடுத்திடும்.
* 356. காம மெழுங்காற் கடவுளை யுள்ளுக.
* காம எண்ணம் தோன்றும் போது கடவுளை நினைக்க வேண்டும்.
* 357. அறிவெனுந் தோட்டியா னதனைக் காக்க.
* அறிவெனுங் காவலினால் காமத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.
* 358. அதைவளர்ப் பவைதமை யகத்தைவிட் டோட்டுக.
* காமத்தைத் தூண்டுபவற்றை நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும்.
* 359. அதையடு மொன்றை யகத்தினுட் கொள்ளுக.
* காமத்தை வெல்லக் கூடிய ஒன்றை மனதில் நினைக்க வேண்டும்.
* 360. அதைநன் குள்ளி மதவெறி களைக.
* அதை நன்றாக மனதில் நினைத்து வெறியினை நீக்க வேண்டும்.
*
====37. பரத்தையை விலக்கல்====
*
* 361. பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள்.
* பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள்.
* 362. மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள்.
* எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள்.
* 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்;
* அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள்.
* 364. இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்;
* இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள்.
* 365. உடைமுதற் பொருளெலா முயிரொடு கவர்வள்.
* அவள் நமது செல்வமனைத்தையும் கவர்வதோடு உயிரையும் கவர்ந்துவிடுவாள்.
* 366. அவளினும் வஞ்சக ரவனியி லில்லை.
* அவளை விடத் தீயவர் இந்த உலகத்தில் இல்லை.
* 367. அவளினுங் கள்வ ரருளின ரெனலாம்.
* அவளை விடத் திருடர் கருணை நிறைந்தவர்.
* 368. அவளுள நினைந்தாற் றவசியுங் கெடுவான்.
* அவளை நினைத்தால் தவம் செய்பவர்களும் அழிந்துவிடுவர்.
* 369. அவளா லந்தோ வழிந்தவ ரநேகர்.
* அவளால் முற்றிலுமாக அழிந்தவர் பலர்.
* 370.அவளிலா நாடே யழிவுறா நாடு.
* அவள் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.
*
====38. பரத்தனை விலக்கல்====
*
* 371. தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன்.
* தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன்.
* 372. பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்
* அவன் பரத்தையை விடத் தீயவன்.
* 373. பொதுமக ளாதலம் முழுமக னாலே.
* அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள்.
* 374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே.
* அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான்.
* 375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே.
* அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன.
* 376. அவனைக் காண்டலா லழியும் புகழே.
* அவனைப் பார்ப்பவர்களின் புகழ் அழியும்.
* 377. அவனொடு பேசலா லழியு நிறையே.
* அவனோடு பேசுபவர்களின் கற்பு அழியும்.
* 378.அவனொடு சேர்தலா லழியு மனைத்தும்.
* அவனோடு சேர்பவர்கள் அனைத்தையும் இழப்பர்.
* 379. அவனிலா நாடே யாகுநன் னாடு.
* அவன் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.
* 380. அறனு மளியு மமைவுறு நாடு;
* அறமும் அன்பும் நிறைந்த நாடாக விளங்கும்.
*
====39. சிற்றினம் விலக்கல் ====
*
* 381. சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்;
* சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்;
* 382. பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்;
* தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்;
* 383. அற்பத் தன்மை யளாவிய மாக்கள்;
* சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்;
* 384. பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்;
* ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்;
* 385. சுயநயங் கருதும் பயனிலா மாக்கள்.
* தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர்.
* 386. சிற்றினம் பொருளையுஞ் சீரையு மழிக்கும்;
* சிற்றினம் ஒருவன் அடைந்த செல்வத்தையும் பெருமையையும் அழிக்கும்;
* 387. அற்றமுங் குற்றமு முற்றிடச் செய்யும்;
* மேலும் அச்சத்தையும் குற்றத்தையும் ஏற்படுத்தும்;
* 388. முற்றவ நலத்தொடு கற்றவுஞ் சிதைக்கும்;
* மேலும் ஒருவர் தனது மேன்மையான நடத்தையினால் அடைந்த பெருமைகளையும் அவர் கற்றதனால் அடைந்த அறிவினையும் அழிக்கும்;
* 389. நரகும் பழியு நண்ணிடச் செய்யும்.
* மேலும் மற்றவர் நம்மை இகழுமாறு செய்து நரகத்தில் விழவைக்கும்.
* 390. சிற்றினப் பற்றினைச் சிறிதும் வேண்டேல். ஆதலால் சிற்றினத்தின் மீதான விருப்பத்தை அறவே நீக்குதல் வேண்டும்.
*
==== 40. பெரியாரைத் துணைக்கொளல் ====
*
* 391. பெரியா ரரியன பெரியன செய்பவர்;
* பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்;
* 392. பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்;
* மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்;
* 393. இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்;
* மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்;
* 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்;
* மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்;
* 395. பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர்.
* மேலும் பின்னால் வரப்போகும் தீமைகளை முன்னரே அறிந்து அதை நீக்குபவர் ஆவார்.
* 396. அவரது துணைகொள லரும்பெருங் காப்பு.
* பெரியவர்களின் துணையைப் பெறுவது மிக அரிய உயர்ந்த பாதுகாப்பு ஆகும்.
* 397. அவரை யறிந்துகொண் டநுதின மோம்புக.
* அவரது பெருமைகளை அறிந்து அவரை எப்பொழுதும் போற்றி வாழுதல் வேண்டும்.
* 398. அவர்க்குரி யனவெலா மன்பொடு வழங்குக.
* அவருக்குத் தேவையானவற்றை அன்போடு வழங்குதல் வேண்டும்.
* 399. அவரோ டெண்ணியே யனைத்துஞ் செய்க.
* அவருடன் ஆலோசனை செய்தே அனைத்துச் செயல்களையும் செய்தல் வேண்டும்.
* 400. அவருரை பிழையா தியாங்கணு மொழுகுக.
* அவருடைய அறிவுரைகளின் வழியே எப்பொழுதும் நடத்தல் வேண்டும்.
*
====41. பேதைமை யொழித்தல் ====
*
* 401. பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்;
* பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்;
* 402. கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்;
* மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்;
* 403. நாணன் பருள்புகழ் பேணுத லின்மை;
* மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை;
* 404. அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்;
* அரிய நூல்களைக் கற்று உணர்ந்து உரைத்தும் அடங்காது வாழ்தல்;
* 405. அறத்தை விடுத்து மறத்தைப் புரிதல்.
* மேலும் நல்ல செயல்களைச் செய்யாமல் தீய செயல்களைச் செய்தல் ஆகியவை ஆகும்.
* 406. வினைசெயின் பொய்படும் புணைகொளும் பேதை.
* பேதை ஒரு செயலைச் செய்ய முற்பட்டால் அச்செயல் முடிவுபெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகிக் கைவிலங்கு பூணுவான்.
* 407. தமர்பசித் துழலப் பிறர்க்கிடும் பேதை.
* பேதையின் உறவினர் பசியால் துன்புறும் போது பேதையால் மற்றவர் நன்மை அடைவர்.
* 408. பேதையோர் காசுறிற் பித்தன் களித்தற்று.
* பேதை செல்வம் அடைந்தால் பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்துத் தடுமாறுவதுபோல தன்னிலை மறந்து நடப்பான்.
* 409. அவைபுகிற் பேதை யதனலங் குன்றும்.
* சான்றோர்கள் நிறைந்த சபையில் பேதை நுழைவதால் சபையின் பெருமை குறையும்.
* 410. பெரியார் நூல்கொடு பேதைமை களைக.
* அறிவிற் சிறந்த பெரியவர்களின் நூல்களைக் கற்று பேதைமையை நீக்க வேண்டும்.
*
====42. வெண்மை யொழித்தல் ====
*
* 411. வெண்மை யறிவினை விடுத்த தன்மை;
* வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை;
* 412. ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்;
* மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்;
* 413. ஈயவேண் டியவிடத் தீயா திவறல்;
* மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்;
* 414. குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்;
* மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்;
* 415. கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்;
* மேலும் தாம் படிக்காத நூல்களைப் படித்தவர் போலக் காட்டுதல்;
* 416. அருமறை விடுத்துப் பெருமிறை கொள்ளல்;
* மேலும் மனத்தில் வைத்துக் காக்க வேண்டிய இரகசியத்தை வெளியிட்டுத் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்ளுதல்;
* 417. செய்வன சொல்லியுஞ் செய்யா திழுக்கல்;
* மேலும் ஒருவனுக்கு நன்மை தருவனவற்றைப் பிறர் எடுத்துக் கூறினாலும் செய்யத் தவறுதல்;
* 418. உலகின ருளதென்ப திலதென மறுத்தல்.
* மேலும் உலகில் 'அருள்' (இறைவன்) என்று ஒன்று இல்லை என்று மறுத்தல் ஆகியவை ஆகும்.
* 419. இன்மையு ளின்மை வெண்மை யொன்றே.
* இழிவானவற்றுள் இழிவானது அறிவில்லாமையே ஆகும்.
* 420. ஒண்மைசா னூல்கொடு வெண்மையைக் களைக.
* மேன்மை பொருந்திய நூல்களின் துணையுடன் அறிவின்மையை நீக்க வேண்டும்.
*
====43. நெடுநீ ரொழித்தல் ====
*
* 421.நெடுநீர் கால நீள விடுதல்;
* நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்;
* 422. ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல்.
* மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும்.
* 423. நெடுநீர் குறைபல தருமியல் புடையது.
* கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது.
* 424. நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி.
* கால தாமதம் நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும்.
* 425. நெடுநீ ரறவிடிற் படுபொரு ளாகும்.
* மிகுந்த கால தாமதம் அந்தச் செயலையே பயனற்றதாகச் செய்யும்.
* 426. நெடுநீர் விடற்கந் நினைவையுட் கொள்ளுக;
* கால தாமதம் என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று ஆழமாக எண்ணுதல்;
* 427. நெடுநீ ரால்வருங் கெடுதியை யுள்ளுக;
* மேலும் கால தாமதத்தால் வரும் தீமைகளை எண்ணிப்பார்த்தல்;
* 428. எக்கணத் தெஃதுறு மக்கணத் ததைச்செயல்.
* மேலும் ஒரு செயலை எந்த சமயத்தில் செய்து முடிக்க வேண்டுமோ அந்த சமயத்தில் செய்து முடித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
* 429. உறுவ பெரிதென வுற்றதை வைத்திடேல்.
* வரும் வேலை சிறந்தது என்று ஏற்கனவே வந்த வேலையைச் செய்யாமல் இருக்கக் கூடாது.
* 430. உற்றதைச் செய்துபி னுறுவதை யெண்ணுக.
* ஏற்கனவே வந்த வேலையைச் செய்து முடித்தபின் வரப்போகும் வேலை குறித்து எண்ணுதல் வேண்டும்.
*
==== 44. மறவி யொழித்தல் ====
*
* 431. மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை.
* மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும்.
* 432. மறவியூக் கத்தின் மறுதலை யாகும்.
* மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும்.
* 433. மறவி பலவகை யிறவையு நல்கும்.
* மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும்.
* 434. மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர்.
* மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது சிறப்புகளை எல்லாம் இழந்துவிடுவார்கள்.
* 435. மறவியை விடுத்தவர் மாநிலத் துயர்வர்.
* மறவி என்ற குறையை நீக்கியவர்கள் மக்களிடையே உயர்ந்த நிலையை அடைவார்கள்.
* 436. மறவியை விடற்கு மனத்தினன் குள்ளுக;
* மறவி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;
* 437. காலையு மாலையுங் கடவுளைத் தொழுக;
* மேலும் காலையும் மாலையும் கடவுளை வணங்குதல்;
* 438. மாணுயர் நூல்சில மனனஞ் செய்க;
* மேலும் மிகச் சிறந்த நூல்களை மனப்பாடம் செய்தல்;
* 439. விடிந்தபின் செய்பவை விடியுமு னுள்ளுக;
* மேலும் ஒரு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து அன்று காலையிலேயே எண்ணுதல்;
* 440. பகலிற் செய்தவை யிரவினன் காய்க.
* மேலும் ஒரு நாளில் செய்த செயல்கள் குறித்து அன்று இரவில் நன்றக ஆராய்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
*
====45. மடி யொழித்தல் ====
*
* 441. மடிதஞ் செயல்களின் மந்த முறுதல்.
* மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும்.
* 442. மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும்.
* மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும்.
* 443. மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும்.
* மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது.
* 444. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர்.
* மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்.
* 445. மடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர்.
* மடியினை நீக்கியவர்கள் உலகை வெல்லுவர்.
* 446. மடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக;
* மடி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;
* 447. காலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்;
* மேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்தல், பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தல்;
* 448. இளம்பக லுணவரை யிராவுண வரைகொளல்;
* மேலும் காலை உணவும் இரவு உணவும் பாதி வயிறு நிரம்பும்படி உண்ணுதல்;
* 449. இரவினல் யாமத் தென்று முறங்குக;
* மேலும் நள்ளிரவில் நான்கு மணி நேரம் கண்டிப்பாக உறங்குதல்;
* 450. பயனுள சிலசொற் பார்த்துப் பேசுக. மேலும் பயனுள்ள சொற்களைக் கவனத்துடன் பேசுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
*
==== 46. துயி லொழித்தல் ====
*
* 451. உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம்.
* உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும்.
* 452. அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில்.
* அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும்.
* 453. சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும்.
* கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.
* 454. கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும்.
* கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும்
* 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம்.
* அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்.
* 456. அயர்விற் கமையு மைம்மூன்று நாழிகை.
* களைப்பினை நீக்க ஆறுமணி நேரத்தூக்கம் போதுமானது ஆகும்.
* 457. மற்றைய பொழுதெலா மாண்டொழில் புரிக.
* விழித்திருக்கும் நேரத்தில் சிறப்பான தொழில் செய்திடல் வேண்டும்.
* 458. தொழில்செயும் பொழுது துயில்வரி னுலாவுக;
* தொழில் செய்யும் பொழுது துயில் வந்தால் உலாவுதல்;
* 459. கைத்தொழின் முதலிய மெய்த்தொழில் செய்க;
* மேலும் கைத்தொழில் போன்ற உடலைப் பயன்படுத்திச் செய்யும் தொழில்களைச் செய்தல்;
* 460. அவசிய மெனினுண வரையினுஞ் சுருக்குக.
* மேலும் அதிக உறக்கம் வந்தால் உணவின் அளவைக் குறைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
*
==== 47. செருக் கொழித்தல் ====
*
* 461. செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல்.
* செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும்.
* 462. அஃதறி யாமையி னங்குர மென்ப.
* அஃது அறியாமையின் அடிப்படை ஆகும்.
* 463. ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு.
* ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும்.
* 464. அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு.
* செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும்.
* 465. அழியு முடம்பை யளிப்பது மஃதே.
* செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும்.
* 466. செருக்கினர் தம்மெய்த் திறத்தினைக் காணார்;
* செருக்கு உடையவர்கள் தங்களது உண்மையான தகுதியை உணராமல் மிகுதியான தகுதி உடையவராக எண்ணுவர்;
* 467. தம்பகைத் திறத்தைத் தாழ்த்தியே யெண்ணுவர்;
* மேலும் பகைவர்களின் உண்மையான தகுதியை உணராமல் குறைவான தகுதி உடையவராக எண்ணுவர்;
* 468. இன்பினு மடியினு மிறந்து படுவர்;
* மேலும் மிகுந்த சோம்பல் உடையவர்களாகவும் மிகுதியாக இன்பம் அநுபவிப்பவர்களாகவும் இருப்பர்;
* 469. துயிலு மறவியுந் தொடர்ந்து கொள்வர்;
* மேலும் மிகுதியாக உறங்குபவர்களாகவும் தமது கடமைகளை மறந்தவர்களாகவும் இருப்பர்;
* 470. புகழெலாம் போக்கி யிகழெலா மீட்டுவர்.
* மேலும் புகழ் அழிந்து மற்றவர்களால் இகழப்படும் நிலை ஏற்படும்.
*
==== 48. அச்ச மொழித்தல் ====
*
* 471. அச்ச மனமுட லழிவுற நடுங்கல்.
* அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும்.
* 472. அஃதறி யாமையி னந்தமென் றுணர்க.
* அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும்.
* 473. அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம்.
* அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும்.
* 474. மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம்.
* பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்.
* 475. அறம்புகழ் செய்வதற் கஞ்சுதன் மறனே.
* அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் தீய செயல் ஆகும்.
* 476. மறம்பழி செய்வதற் மாண்புடை யறனே.
* பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் நல்ல செயல் ஆகும்.
* 477. அறநெறி மறந்தரின் மறநெறி யாகும்.
* ஒரு நல்ல செயலைச் செய்வதால் தீமை ஏற்படின் அது தீய செயல் ஆகும்.
* 478. மறநெறி யறந்தரி னறநெறி யாகும்.
* ஒரு தீய செயலைச் செய்வதால் நன்மை ஏற்படின் அது நல்ல செயல் ஆகும்.
* 479. அச்ச முடையார்க் கெச்சமிங் கில்லை.
* நல்ல செயல்களைச் செய்வதற்கு அஞ்சுபவர்களுக்கு ஒரு நாளும் இவ்வுலகில் புகழ் ஏற்படாது.
* 480. அச்ச மிலார்க்கு நிச்சலு மெச்சமாம்.
* நல்ல செயல்களை அச்சமில்லாமல் செய்பவர்களுக்கு எப்பொழுதும் புகழ் ஏற்படும்.
*
==== 49. இடுக்க ணழியாமை ====
*
* 481. இடுக்கண் டுயரினைக் கொடுக்குமிடை யூறு.
* இடுக்கண் என்பது துன்பத்தைக் கொடுக்ககூடிய இடையூறு ஆகும்.
* 482. இடுக்க ணுற்றுழி நகினது தான்கெடும்.
* இடுக்கண் ஏற்படும்பொழுது கலங்காமல் அதைக்கண்டு சிரித்தால் இடுக்கண் தானே நீங்கிவிடும்.
* 483. இடுக்க ணுக்குள நெகினது பெருகும்.
* இடுக்கண் ஏற்பட்ட உடன் உள்ளம் தளர்ச்சி அடையுமானால் இடுக்கண் அதிகரிக்கும்.
* 484. இடுக்கண் புறத்துள தென்பது பொய்ம்மை.
* இடுக்கண் நமக்கு வெளியில் இருந்து வருகிறது என்பது உண்மை அற்றது ஆகும்.
* 485. இடுக்க ணகத்துள தென்பது மெய்ம்மை.
* இடுக்கண் நமது உள்ளத்தில் இருந்து வருகிறது என்பதே உண்மை ஆகும்.
* 486. இடுக்க ணகத்ததென் றெண்ணவஃ தழியும்.
* இடுக்கண் நமது உள்ளத்தில் உள்ளது என்பதை நாம் உணர்ந்த உடன் அது மறைந்துவிடும்.
* 487. இடுக்கணி லழியா ரிடுக்க ணழியும்.
* இடுக்கண் ஏற்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சாதவர்களின் இடுக்கண் நீங்கிவிடும்.
* 488. இடுக்கண் வலியினைக் கொடுக்குந் திறத்தது.
* இடுக்கண் வலிமையைக் கொடுக்கும் இயல்பு உடையது.
* 489. இடுக்க ணறிவினை யீயு மியலது.
* இடுக்கண் அறிவினைக் கொடுக்கும் இயல்பு உடையது.
* 490. இடுக்கணிற் றளரா ரெண்ணிய முடிப்பர்.
* இடுக்கண் ஏற்பட்டால் அதனைக் கண்டு அஞ்சாதவர்கள் அவர்கள் எண்ணியதை நிறைவேற்றுவார்கள்.
*
==== 50. பற்றுளம் விடுதல் ====
*
* 491. பற்றுளம் பொருளினிற் பற்றுள நெஞ்சம்;
* பற்றுளம் என்பது பொருட்களின் மீது ப்ற்றுக் கொண்ட உள்ளம் ஆகும்;
* 492. ஈயா துண்ணா தெண்ணிவைத் திவறல்.
* மேலும் அது தேவைப்படுபவர்களுக்கு எதையும் கொடுக்காமல் தானும் அநுபவிக்காமல் கருமித்தனம் செய்யும்.
* 493. பற்றுள மரில்பல வற்றுளும் பெரிது.
* பற்றுளம் குற்றங்களில் மிகப்பெரிய குற்றமாகும்.
* 494. பற்றுளம் பல்வகைக் குற்றமு நல்கும்.
* பற்றுளம் பல பாவங்கள் ஏற்படக் காரணமாக அமையும்.
* 495. பற்றுளத் தாலருஞ் சுற்றமு நீங்கும்.
* பற்றுளத்தால் சிறந்த உறவினர்களும் அவனை விட்டு விலகுவர்.
* 496. பற்றுளத் தார்பொருண் முற்று மிழப்பர்;
* பற்றுளத்தால் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் இழப்பர்;
* 497. அறம்புக ழின்பமெய் யறிவுவீ டிழப்பர்.
* மேலும் அறம், புகழ், இன்பம், வீடுபேறு இவற்றையும் இழப்பர்.
* 498. பற்றுளம் விடுத்தவர் பாரெலாங் கொள்வர்;
* பொருட்கள் மீதான பற்றினை நீக்கியவர் உலகம் முழுவதையும் வெற்றி கொள்வர்;
* 499. அறம்புக ழின்பமெய் யறிவுவீ டடைவர்.
* மேலும் அறம், புகழ், இன்பம், வீடுபேறு இவற்றையும் அடைவர்.
* 500. பற்றுளப் பேயினைச் செற்றுடன் றுரத்துக.
* பலவிதத்திலும் தீமை தரக்கூடிய பற்றுளத்தைக் கோபித்துத் துரத்துதல் வேண்டும்.
*
==== 51. தன்னைப் பேணல் ====
*
* 501. தன்னைப் பேணுத றன்முதற் கடமை.
* நம்மைப் பாதுகாப்பதே நமது முதல் கடமை ஆகும்.
* 502. தன்னைப் பேணார் தாழ்வே யடைவர்.
* ஒருவன் தன்னைப் பேணி பாதுகாக்காவிடில் அவன் துன்பம் அடைவான்.
* 503. தன்னைப் பேணுவோர் தலைமை யெய்துவர்.
* தன்னைப் பாதுகாக்கும் இயல்பு உடையவர் உயர்ந்த நிலையை அடைவர்.
* 504. பேணல் பெருமை யெலாமுற முயறல்;
* தன்னைப் பேணுதல் என்பது எல்லாப் பெருமைகளையும் அடைய முயலுதல்;
* 505. உடல்பொருள் வினைபொழு திடனறிந் தின்புறல்;
* மேலும் தமது உடலின் மூலமும் பொருளின் மூலமும் செயல்களின் மூலமும் காலமும் இடமும் ஏற்றதாக இருக்கும்பொழுது இன்பம் அநுபவித்தல்;
* 506. பொருளு மொழுக்கமும் புகழும் பெருக்கல்;
* மேலும் பொருள், நல்லொழுக்கம், புகழ் இவற்றை ஈட்டி அதிகரித்தல்;
* 507. உடம்போர் யானையி னுரமுற வளர்த்தல்;
* மேலும் நமது உடலை மிகுந்த வலிமை உடையதாக வளர்த்தல்;
* 508. மனமுயர்ந் தவையெலாந் தினமுனப் பயிற்றல்;
* மேலும் மனம் உயர்ந்த எண்ணங்களைத் தினமும் எண்ணுமாறு பயிற்றுவித்தல்;
* 509. அறிவன் மலனொழித் தழுக்குறா தமைதல்;
* மேலும் மனத்தில் இருந்து பொறாமையை நீக்கி மனத்தைத் தூய்மையாக அமைத்தல்;
* 510. தன்னுயிர்த் துணையைத் தனைப்போ லாக்கல்.
* மேலும் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தன்னைப் போல் பேணுதல் ஆகியவை ஆகும்.
*
==== 52. உற்றாரைப் பேணல் ====
*
* 511. உற்றார் பெற்றா ருறவினர் பலருமே.
* உற்றார் என்பவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலரும் ஆவர்.
* 512. தன்னுற வினரெலாந் தன்றுணைக் கன்னர்.
* தன்னுடைய உறவினர் எல்லாம் தன்னுடைய வாழ்க்கைத் துணையின் நெருங்கிய உறவினர் ஆவர்.
* 513. தன்றுணை யுறவினர் தனக்காங் கன்னர்.
* வாழ்க்கைத் துணையின் உறவினர் எல்லாம் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஆவர்.
* 514. தாயுந் தந்தையுந் தான்றொழுந் தகையர்.
* நமது தாயும் தந்தையும் நாம் வணங்குவதற்கு உரிய உறவினர் ஆவர்.
* 515. அவரைப் பேணுத லரும்பெருங் கடனே.
* அவரைப் பாதுகாப்பது மிகச் சிறந்த உயர்ந்த கடமை ஆகும்.
* 516. சோதர ருற்றுழி யாதர வாவர்.
* சகோதரர் துன்பம் உற்ற நேரத்தில் ஆதரித்து உதவி செய்பவர் ஆவர்.
* 517. அவரைப் பேணுத லாக்கம் பேணலே.
* சகோதரரைப் பாதுகாப்பது நமது செல்வத்தைப் பாதுகாப்பது போன்று சிறந்தது ஆகும்.
* 518. மற்றுளா ருந்தமைச் சுற்றுறப் பேணுக.
* மற்றும் உள்ள உறவினர்களையும் பெற்றோர், சகோதரர் போல பேணிக் காக்க வேண்டும்.
* 519. உற்றவர் பேணிற் பற்றல ரொழிவர்.
* உறவினர்களைப் பேணிப்பாதுகாத்தால் எதிரிகளே இல்லாத நிலை ஏற்படும்.
* 520. உற்றார் பெருகி னுரமிகப் பெருகும்.
* உறவினர்கள் அதிகரித்தால் வலிமையும் அதிகரிக்கும்.
*
==== 53. விருந்தினரைப் பேணல் ====
*
* 521. விருந்தினர் முன்னர் தெரிந்திலாப் புதியர்.
* விருந்தினர் என்பவர் முன்பு அறிமுகம் இல்லாத புதியவர் ஆவர்.
* 522. விருந்தினர்ப் பேணுவார் பெரிந்தகை யோரே.
* விருந்தினரைப் பாதுகாப்பவர்கள் பெருமை மிக்க குணங்களை உடையவர் ஆவர்.
* 523. விருந்தின ருண்ணலம் பொருந்தினர்க் கொள்க.
* விருந்தினரின் நலத்தை மிக கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
* 524. விருந்தினர்க் குணவுநன் மருந்தென வழங்குக.
* அமிழ்து போன்ற உணவினை விருந்தினருக்கு வழங்குதல் வேண்டும்.
* 525. உடையிடம் படுக்கை குடைகாப் புதவுக.
* விருந்தினர்களுக்குத் தேவையான உடைகள், தங்குவதற்கு இடம், படுக்கை, குடை மற்றும் காலணிகள் இவற்றை அளித்தல் வேண்டும்.
* 526. உளமறிந் தேனைய வளவறிந் தீக.
* விருந்தினரின் உள்ளத்தை உணர்ந்து அவர்களுக்குத் தேவையானவற்றை தேவையான அளவு அளித்தல் வேண்டும்.
* 527. இன்ப மவருற வின்சொல் வழங்குக.
* விருந்தினரின் மனம் மகிழுமாறு இனிய சொற்களைப் பேசுதல் வேண்டும்.
* 528. அவரறிந் தவையெலா மறிந்துளங் கொள்க.
* அவர் கற்று அறிந்தவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
* 529. அவருய ரொழுக்கெலா மறிந்துகைக் கொள்க.
* அவருடைய உயர்ந்த குணங்களை எல்லாம் அறிந்து பின்பற்றுதல் வேண்டும்.
* 530. செல்வுழி யுடன்சென் றுள்ளிடப் பிரிக.
* அவர் செல்ல வேண்டிய பாதையில் அவருடன் சென்று எப்பொழுதும் அவர் நினைவுகள் இருக்குமாறு அவரை வழியனுப்புதல் வேண்டும்.
*
==== 54. முன்னோரைப் பேணல் ====
*
* 531. முன்னோர் துஞ்சிய தன்னுற வினரே.
* முன்னோர் என்பவர் இறந்த நம் உறவினர் ஆவர்.
* 532. அவரைப் பேணலா லாம்பல நலமே.
* முன்னோர்களைப் பேணுவதால் நாம் பல நலன்களைப் பெறலாம்.
* 533. அவரைப் பேணுமா றடிக்கடி யுள்ளல்;
* முன்னோர்களைப் பேணுதல் என்பது அவர்களை அடிக்கடி நினைத்தல்;
* 534. அவர்தொடங் கியவறந் தவறுறா தாற்றல்;
* மேலும் அவர்கள் தொடங்கிய நற்செயல்களைச் சிறந்த முறையில் செயல்படுத்துதல்;
* 535. அவர்செய வெண்ணிய வறங்களு மியற்றல்;
* மேலும் அவர்கள் தாம் செய்ய நினைத்த நற்செயல்களையும் செய்தல்;
* 536. அவர்நற் குணனெலா மறிந்துகைக் கொளல்;
* மேலும் அவர்கள் நல்ல குணங்களை எல்லாம் அறிந்து பின்பற்றுதல்;
* 537. அவர்நற் செயலெலா மழியாது நிறுத்தல்;
* மேலும் அவர்கள் தொடங்கிய நற்செயல்கள் அழிந்து போகாதவாறு பாதுகாத்தல்;
* 538. அவர்நற் பெயர்தம தருமகார்க் களித்தல்;
* மேலும் அவர்கள் பெயர்களைத் தமது மக்களுக்கு இடுதல்;
* 539. அவர்பெயர் விளங்கிட வறம்பல புரிதல்;
* மேலும் அவர்களுக்குப் பெருமை ஏற்படும்படி நற்செயல்கள் பல செய்தல்;
* 540. அவர்க்குறும் பிறவு மன்பொடு செய்தல்.
* மேலும் அவர்கள் தொடர்புடைய மற்ற செயல்களையும் அன்போடு செய்தல் ஆகியவை ஆகும்.
*
==== 55. புதல்வரைப் பேணல் ====
*
* 541. புதல்வரே தம்மரும் பொருளென மொழிப.
* ஒருவர் பெற்ற குழந்தைகளே அவரின் விலைமதிப்பற்ற செல்வம் ஆகும்.
* 542. நன்றுசெய் புதல்வரா னரகறு மென்ப.
* நல்ல அறங்களைச் செய்யும் குழந்தைகளால் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.
* 543. பொருளுங் குடியும் புகழுமா மவரால்.
* செல்வம், குடிப்பெருமை, புகழ் இவை நல்ல குழந்தைகளால் ஒருவனுக்குக் கிடைக்கிறது.
* 544. துணைதரும் புதல்வர்க் கிணைபிற ராகார்.
* தமக்கு நல் ஆதரவைத் தரும் புதல்வர்களுக்கு ஈடானவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை.
* 545. பிறரைப் புதல்வராப் பெறுதலும் வழக்கே.
* குழந்தையைத் தத்து எடுப்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கது ஆகும்.
* 546. மிகமிக வருந்தியும் புதல்வரை வளர்க்க.
* மிகமிகக் கவனமாகக் குழந்தைகளை வளர்த்தல் வேண்டும்.
* 547. இளமையி னவர்நல் லினமுறச் செய்க;
* புதல்வர்கள் இளமைக் காலத்தில் நற்பண்புகள் உடையவர்களுடன் சேர்ந்து பழகுமாறு செய்தல் வேண்டும்;
* 548. தக்கவா சிரியரைச் சார்ந்திடச் செய்க;
* மேலும் பல சிறப்புகள் உடைய ஆசிரியர்களிடம் கல்வி கற்குமாறு செய்தல் வேண்டும்;
* 549. கல்வியு மொழுக்கமுங் கைக்கொளச் செய்க;
* மேலும் சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உடையவராகச் செய்தல் வேண்டும்;
* 550. இல்வாழ் வரசுற வல்லுந ராக்குக.
* மேலும் இல்வாழ்க்கை நடத்திடத் தேவையான எல்லாத் தகுதிகளையும் உடையவராகச் செய்தல் வேண்டும்.
*
==== 56. அன்பு வளர்த்தல்====
*
* 551. அன்பெனப் படுவ தகத்தி னுருக்கம்.
* அன்பு எனப்படுவது மனத்தினுள் ஏற்படும் நெகிழ்ச்சியாகும்.
* 552. ஆர்வல ரூறுறி னதுகண் ணீராம்;
* அன்புக்குரியவர் துன்பம் அடைந்தால் அன்பு கண்ணீராக வெளிப்படும்.
* 553. அவரூ றொழிக்குந் தவலிலா முயற்சியாம்.
* அன்பு அவரது துன்பத்தைக் கெடுதல் இல்லாத வகையில் நீக்க முயற்சி செய்யும்.
* 554. ஆருயிர் பெற்றதிங் கன்புசெய் தற்கே.
* நாம் அருமையான உயிரைப் பெற்றது அன்பு செய்வதற்கே.
* 555. அன்புபா ராட்டற் காமிடந் தானே;
* நாம் நம்மை நேசிக்க வேண்டும்.
* 556. தன்னுயிர்த் துணையே தன்னரும் புதல்வரே;
* தன்னுடைய உயிர் போன்ற வாழ்க்கைத் துணையையும் அருமையான குழந்தைகளையும் நேசிக்க வேண்டும்.
* 557. தன்பெற் றோரே தன் சகோ தரரே;
* தன்னுடைய பெற்றோர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
* 558. தன்னா சிரியரே தன்னுற வினரே;
* தன்னுடைய ஆசிரியரிடமும் உறாவினர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
* 559. தன்னூ ராரே தன்னாட் டினரே;
* தன்னுடைய ஊரைச் சேர்ந்தவர்களையும் நாட்டைச் சேர்ந்தவர்களையும் நேசிக்க வேண்டும்.
* 560. மனித சமூகமே மன்னுயி ரனைத்துமே.
* மனித குலம் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும்.
*
==== 57. பொறுமை கொள்ளல்====
*
* 561. பொறுமை பிறர்மிகை பொறுக்கு நற்குணம்.
* பொறுமை என்பது பிறரது குற்றங்களை பொறுத்துக் கொள்ளும் நல்ல குணம் ஆகும்.
* 562. தன்னலங் கெடுங்காற் சகிப்பது பொறுமை.
* நம்முடைய நலம் கெடும் பொழுதும் சகிப்பது பொறுமை ஆகும்.
* 563. பொதுநலங் கெடுங்காற் பொறுப்பது பிழையே.
* ஆனால் பொதுநலம் கெடும் பொழுது சகிப்பது பிழை ஆகும்.
* 564. வறுமைப் பிணிக்குப் பொறுமைநன் மருந்தாம்.
* வறுமை என்னும் நோய்க்குப் பொறுமை நல்ல மருந்தாக விளங்கும்.
* 565. சிறுமையை வளர்ப்பது பொறுமையில் லாமை.
* பொறுமையின்மை துன்பத்தைத் தரும்.
* 566. பொறுமையைக் கொண்டவர் புவியெலாங் கொள்வர்.
* பொறுமையைக் கொண்டவர் எல்லாவற்றையும் அடைவார்
* 567. பொறுமையை யிழந்தவர் புசிப்பவு மிழப்பர்.
* பொறுமை இல்லாதவர் உண்ண உணவு கூட இல்லாமல் சிரமப்படுவார்.
* 568. ஒறுத்தார்க் கொருகணத் தொருசிறி தின்பமாம்.
* தனக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு சிறிது நேரம் மட்டும் இன்பம் கிடைக்கும்.
* 569. பொறுத்தார்க் கென்றும் பொன்றா வின்பமாம்.
* பொறுத்தவர்க்கு என்றும் அழியாத இன்பம் கிடைக்கும்.
* 570. ஒறுத்தார் சிறியர் பொறுத்தார் பெரியர்.
* தனக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்கள் சிறியவர்கள். அதனைப் பொறுத்துக் கொண்டவர்கள் பெரியவர்கள்.
*
==== 58. ஒப்புர வொழுகல்====
*
* 571. ஒப்புர வூரா ரொப்பு நன்னடை.
* உலகம் ஒப்புக் கொள்ளும் நன்னடத்தையே ஒப்புரவு ஆகும்.
* 572. ஒப்புர வுயர்தர வொழுக்கத் தின்முதல்.
* ஒப்புரவு உயர்தர ஒழுக்கத்தின் வேர் ஆகும்.
* 573. ஒப்புர வொழுகுவார்க் குறவினர் பெருகுவர்.
* பிறருக்கு உதவுபவர்களுக்கு உறவினர்கள் அதிகம் இருப்பார்கள்.
* 574. ஒப்புர விலாரை வொருவருந் தழுவார்.
* பிறருக்கு உதவி செய்யாதவர்களை யாரும் நாட மாட்டார்கள்.
* 575. அறிஞரி னொப்புர வறவோர்க் குதவல்;
* அறிவுடையவர்களின் ஒப்புரவு என்பது அறவழியில் நடப்பவர்களுக்கு உதவுவது ஆகும்.
* 576. துறந்தா ரிறந்தார் துவ்வார்க் குதவல்;
* பற்றைத் துறந்தவர்கள், இறந்தவர்கள், வறியவர்கள் ஆகியோர்க்கு உதவுவது ஆகும்.
* 577. ஊர்ப்பொது நன்மைக் குழைத்தெலாஞ் செய்தல்;
* பொதுநலத்திற்காக உழைப்பதும் ஒப்புரவு ஆகும்.
* 578. ஊரார் நன்மை தீமைக் குதவுதல்;
* மக்களின் சுபகாரியங்கள் மற்றும் அசுபகாரியங்களில் உதவுவதும் ஒப்புரவு ஆகும்.
* 579. ஊரார் வேண்டுவ வுவந்துட னளித்தல்;
* மக்களுக்குத் தேவையானவற்றை முழு மனதுடன் அளிக்க வேண்டும்.
* 580. ஊரா ராணைக் குட்பட் டொழுகல்.
* சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதும் ஒப்புரவு ஆகும்.
*
==== 59. ஈகை புரிதல்====
*
* 581. இல்லார்க் கீவதே யீகை யென்ப.
* வறியவர்களுக்குக் கொடுப்பதே ஈகை ஆகும்.
* 582. மற்றையோர்க் கீதன் மாற்றிலா மடமை.
* மற்றவர்களுக்குக் கொடுப்பது அறிவற்ற செயலாகும்.
* 583. இல்லா ருள்ளு நல்லார்க் கீக.
* வறியவர்களிலும் நற்பண்புடையவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* 584. பிறருக் கீதல் பிழையென வறிக.
* நற்பண்பற்றவர்களுக்குக் கொடுப்பது குற்றம் ஆகும்.
* 585. மடையரே மடியரே பிணியரே யில்லார்.
* அறிவற்றவர்கள், சோம்பலுடையவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோரே உதவ வேண்டியவர்கள்.
* 586. மடையர்க் கீக மதியெனு மொன்றே.
* அறிவற்றவர்களுக்கு அறிவினை வழங்க வேண்டும்.
* 587. மடியர்க் கீக தொழிலெனு மொன்றே.
* சோம்பலுடையவர்களைத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.
* 588. மற்றையோர்க் கீக மருந்தூ ணிடனே.
* நோயுற்றவர்களுக்கு மருந்து மற்றும் உணவு அளிக்க வேண்டும்.
* 589. உடையவ ரீதற் குரிய ராவர்.
* செல்வம் உடையவர்கள் அதை கொடுப்பதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
* 590. ஈகை புகழ்சிறப் பெல்லா நல்கும்.
* ஈகை புகழ் மற்றும் எல்லாச் சிறப்புகளையும் கொடுக்கும்.
*
==== 60. புகழ் செய்தல்====
*
* 591. புகழுய ருலகம் புகலு நன்மொழி.
* புகழ் என்பது உயர்ந்த இவ்வுலகம் அளிக்கக் கூடிய பாராட்டுகள் ஆகும்.
* 592. புகழ்செய் தவரே பொன்றாது நிற்பவர்;
* புகழினை அடைந்தவர்களே நிலைத்து வாழ்பவர்கள் ஆவர்.
* 593. அறமுத னாங்கு மாற்றிமெய் யடைந்தவர்.
* அறம் முதலிய நான்கு செயல்களையும் செய்து இறைவனை அடைவார்கள்.
* 594. புகழ்செய் யாரே பொன்றி யொழிந்தவர்;
* புகழினை அடையாதவர்கள் அழிந்தவர்கள் ஆவர்.
* 595. நான்கி லொன்றை நண்ணா திழிந்தவர்.
* அவர்கள் அறம் முதலிய நான்கு செயல்களையும் செய்யத் தவறிய தாழ்ந்தவர்கள் ஆவர்.
* 596.மெய்ப்புகழ் தருவன மெய்யிய லடைதல்;
* இறை நிலையடைவது உண்மையான புகழைத் தரக் கூடியது ஆகும்.
* 597. உலக முழுவது மொருங்கர சாளுதல்;
* உலகம் முழுவதையும் ஆளுவது புகழைத் தரக் கூடியது ஆகும்.
* 598.அறமுத னாங்கு மறிந்துசெய் துரைத்தல்;
* அறம் முதலிய நான்கு செயல்களையும் செய்வதும் மற்றவர்களுக்கு அது பற்றிக் கூறுவதும் புகழைத் தரக் கூடியது ஆகும்.
* 599.உற்றவர்க் கெல்லா முடனுவந் துதவல்;
* சுற்றத்தார்க்கும் நண்பர்க்கும் முழுமனதுடன் தேவைப்பட்ட உடனே உதவுவது புகழைத் தரக் கூடியது ஆகும்.
* 600.இல்லார்க் கெல்லா மீந்து வாழ்தல்.
* வறியவர்களுக்குக் கொடுத்து வாழ்வது புகழைத் தரக் கூடியது ஆகும்.
*
===அரசியல்===
*
==== 61. அரசு நலம்====
*
* 601. அரசுயிர் கட்கு சிரசென நிற்பது.
* அரசாங்கம் குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
* 602. அதனலன் மாணவ ரருநல னாளுதல்;
* அதன் சிறப்பு மாணவர்களின் நலனைப் பேணுவதில் உள்ளது.
* 603. இல்வாழ் வியலெலா மியைந்துநன் கொழுகல்;
* இல்லறத்தாரின் தேவைகளைப் புரிந்து நன்முறைப்படி ஆட்சி செய்தல் வேண்டும்.
* 604. சுற்றம் பெருக்கல் சூழ்ச்சி புரிதல்;
* சுற்றத்தாரை அதிகரித்தும் அறிஞரோடு ஆலோசித்தும் ஆட்சி செய்தல் வேண்டும்.
* 605. தெரிந்து தெளிதல் செய்வினை யாளுதல்;
* ஒருவன் குணத்தை நன்கு ஆராய்ந்து அவனை நம்ப வேண்டும். ஒரு செயலைச் செய்வதினால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதனைச் செய்ய வேண்டும்.
* 606. ஒற்றுரை நூலமைச் சொருங்குட னாளுதல்;
* ஒற்றர்கள், புகழ் பெற்ற நூல்கள், அமைச்சர்கள் கூறும் நல்ல ஆலோசனைகள் இவற்றை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தல் வேண்டும்.
* 607. பெரியமன் னரைச்சார்ந் தரியவை பெறுதல்;
* வலிமை வாய்ந்த அரசரைச் சென்றடைந்து சிறந்தவற்றைப் பெறுதல் வேண்டும்.
* 608. நாடரண் பொருள்படை நட்பினி தாளுதல்;
* ஓர் அரசன் நாடு, கோட்டை, செல்வம், படை, நட்பு, இன்சொல் இவற்றைக் கொண்டு ஆட்சி செய்தல் வேண்டும்.
* 609. வினைத்திற னனைத்து நினைத்தறிந் தாற்றல்;
* செயல்களைச் செய்யும் அனைத்துத் திறமையையும் எண்ணி அதை அறிந்து செயல்பட வேண்டும்.
* 610. முறைசெய் தறம்புரிந் திறையென நிற்றல்.
* அறநெறிப்படி நீதி தவறாது ஆட்சி செய்யும் அரசன் கடவுள் எனப் போற்றப்படுவான்.
*
==== 62. சுற்றம் பெருக்கல்====
*
* 611. சுற்றமென் பதுதனைச் சூழ விருப்பது.
* சுற்றத்தினர் என்பவர் நம்முடன் இருக்கும் உறவினர் ஆவர்.
* 612. சுற்றமு மறிவுபோ லற்றங் காக்கும்.
* அறிவு நம்மைத் துன்பத்திலிருந்து காப்பது போல சுற்றத்தினரும் காப்பர்.
* 613. சுற்ற மின்மை யற்றமுறு விக்கும்.
* சுற்றத்தினர் இல்லாமை அழிவை ஏற்படுத்தும்.
* 614. சுற்ற முடையார் சூழ்வன முடிப்பர்.
* சுற்றத்தினரை உடையவர் நினைத்ததைச் செய்து முடிப்பார்.
* 615. சுற்ற மிலார்க்கு சூழ்ச்சியே யில்லை.
* சுற்றத்தினர் இல்லாதவர்களுக்கு மற்றவர்களுடன் ஆலோசிக்கும் வாய்ப்பில்லை.
* 616. குற்றம் விடுதலாற் சுற்றுறுஞ் சுற்றம்.
* மற்றவர்களின் குறைகளை எண்ணாதவர்கள் சுற்றத்தினர் சூழ இருப்பர்.
* 617. கொடையா லின்சொலாற் கூடிடுஞ் சுற்றம்.
* கொடுத்தலினாலும் இன்சொலினாலும் சுற்றத்தினர் அதிகரிப்பர்.
* 618. வாய்மையாற் பொறுமையாற் றூய்மையாஞ் சுற்றம்.
* உண்மை, பொறுமை மற்றும் ஆசையின்மையால் சுற்றத்தினர் பெருகுவர்.
* 619. கொள்ளல் கொடுத்தலாற் குலாவுறுஞ் சுற்றம்.
* பெண் கொடுப்பதாலும் பெண் எடுப்பதாலும் சுற்றத்தினர் மகிழ்வர்.
* 620. உணர்ச்சி பழகலாற் லுதவுஞ் சுற்றம்.
* ஒற்றுமையாக இருப்பதால் சுற்றத்தினர் நமக்கு உதவுவர்.
*
==== 63. கண்ணோட்டம்====
*
* 621. கண்ணோட்டஞ் சுற்றமேற் கண்ணோடி வீழ்தல்.
* கண்ணோட்டம் என்பது சுற்றத்தினரிடம் காட்டும் பரிவு ஆகும்.
* 622. சுற்றங் கண்டுழிக் குற்ற மறத்தல்;
* சுற்றத்தினரைக் கண்ட உடன் அவர்கள் குற்றங்களை மறந்துவிட வேண்டும்.
* 623. சுற்றங் கண்டுழி யுற்றன செய்தல்.
* சுற்றத்தினரைக் கண்ட உடன் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
* 624. கண்ணிற் கழகு கண்ணோட்ட மென்க.
* கண்ணிற்கு அழகு பரிவான பார்வை ஆகும்.
* 625.உளத்தொடு சேர்ந்தகண் ணோட்ட முயர்ந்தது.
* முழு மனதுடன் காட்டும் பரிவு உயர்ந்த்தது ஆகும்.
* 626. தீவினை யாளர்பாற் றீதுகண் ணோட்டம்.
* தீயவர்களிடம் காட்டும் பரிவு தீமையைத் தரும்.
* 627. கண்டுநஞ் சுணல்கரை கடந்தகண் ணோட்டம்.
* தமக்குத் தீங்கு செய்பவரையும் பொறுத்துக் கொள்வது அளவு கடந்த பரிவு ஆகும்.
* 628. கருமம் கெடாவகை கண்ணோடல் தக்கது.
* தமது தொழில் பாதிக்காத விததில் பரிவு காட்ட வேண்டும்.
* 629. சிறுவர்பா லென்றுஞ் சிறிதுகண் ணோடுக.
* சிறுவர்களிடம் எப்பொழுதும் பரிவுடன் இருக்க வேண்டும்.
* 630. முறைசெயும் பொழுததை முற்றுமே விடுக.
* நீதியை நிலை நாட்டும் போது பரிவு காட்டுவதை முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்.
*
==== 64. சூழ்ச்சி புரிதல்====
*
* 631. இயற்றுவ தெல்லா மெண்ணியே யியற்றுக.
* எச்செயலையும் ஆராய்ந்தே செய்ய வேண்டும்.
* 632. எண்ணா தியற்றுதல் கண்ணிலார் நடையாம்
* ஆராயாமல் ஒரு செயலைச் செய்வது கண்ணில்லாமல் நடப்பதற்குச் சமம்.
* 633. இயற்றத் தொடங்கி யெண்ணுத லிழுக்காம்.
* செய்யத் தொடங்கிய பிறகு ஆராய்வது குற்றம் ஆகும்.
* 634. இயற்றுமுன் செயலி னியல்பினை யாய்க.
* செய்யத் தொடங்குவதற்கு முன்பு அச்செயலின் இயல்பினை ஆராய வேண்டும்.
* 635. அறமெனிற் சுற்றுரு மறிஞரோ டெண்ணுக.
* செய்யத் தகுந்த நற்செயல் எனில் அது குறித்து அறிவுடையவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
* 636. வரவு செலவு வரும்பய னெண்ணுக.
* அச்செயலினால் வரக்கூடிய வருமானம், அதற்குச் செய்ய வேண்டிய செலவு மற்றும் பயன் இவை குறித்து ஆராய வேண்டும்.
* 637. செய்வலி செய்வழி செய்பவர்க் கருதுக.
* செய்வதற்குத் தேவையான வலிமை, செய்யும் வழிமுறைகள், செய்பவர்களின் திறமை இவை குறித்தும் ஆராய வேண்டும்.
* 638. வரவிற் செலவு வளருமேல் விடுக.
* வருமானத்தை விட செலவு அதிகம் எனில் அச்செயலைச் செய்யக் கூடாது.
* 639. பெரும்பயன் றராதெனிற் பேணா தொழிக.
* சிறந்த பயன் கிட்டாது என்றாலும் அச்செயலைச் செய்யக் கூடாது.
* 640. செய்வலி நெறியாள் சீரின்றேல் விடல்.
*
==== 65. தெரிந்து தெளிதல் ====
*
* 641. செயல்செய் வாரிய லுயர்குடிப் பிறப்பே;
* செயல் செய்வது உயர்குடியில் பிறந்தவர்களின் இயல்பு ஆகும்.
* 642. செம்மையே வாய்மையே தீவினை யின்மையே;
* நடு நிலைமை,நேர்மை, தீய செயல்கள் செய்யாமை ஆகியவை அவர்களின் குணங்கள் ஆகும்.
* 643. அறிவே யன்பே யழகே யாற்றலே;
* அறிவு, அன்பு, மேன்மை, ஆற்றல் ஆகியவையும் அவர்களின் குணங்கள் ஆகும்.
* 644. பண்பே பொறையே பணிவே யின்சொலே;
* நன்னெறி, பொறுமை, பணிவு, இனிமையான பேச்சு ஆகியவையும் அவர்களின் குணங்கள் ஆகும்.
* 645. மறவி நெடுநீர் மடிதுயி லிலாமையே;
* மறதி, காலம் தாழ்த்துதல், சோம்பல், உறக்கம் ஆகியவை அவர்களிடம் இருக்காது.
* 646. அவாஅ வின்மையே தவாவினை யுண்மையே;
* ஆசையின்மை, அறம், உண்மை ஆகியவை அவர்களிடம் இருக்கும்.
* 647. பொதுச்சிறப் பெனுமிரு மதிவளர் கல்வியே.
* அறிவை வளர்க்கக் கூடிய கல்வியான மொழி, கணிதம் மற்றும் பொருள் ஈட்டும் முறைகள் ஆகியவற்றை அறிந்திருப்பார்கள்
* 648. இவையெலா மியைந்துள வினமெலாந் தெறிக
* இக்குணங்களெல்லாம் பொருந்தியுள்ளவர்களை எல்லாம் கண்டறிய வேண்டும்.
* 649. அறம்பொரு ளின்புயி ரச்சத்தாற் றெளிக.
* அவர்களை அறம், பொருள், இன்பம், உயிர் பொருட்டால் அஞ்சும் அச்சம் இவை நான்கு வகையிலும் ஆராய்ந்து நம்ப வேண்டும்.
* 650. தெளியுமுன் கொண்டிடேல் தெளிந்தபி னையுறேல்.
* ஒருவனை ஆராயாமல் நம்புவதும் நம்பிய பிறகு சந்தேகப்படுவதும் கூடாது.
*
==== 66.செய்வினை யாளுதல்====
*
* 651. நன்றுதீ தெண்ணி நலம்புரிவா னாள்க.
* ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து நல்லது செய்பவனே செயலுக்கு உரியவன்.
* 652. வருவாய் பெருக்கி வளஞ்செய்வா னாள்க.
* பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து அவற்றால் வளம் ஏற்படுத்துபவனே செயலுக்கு உரியவன்.
* 653. ஊறுறா தாற்று முணர்வோனை யாள்க.
* செயல் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை அறிந்து நீக்குபவனே செயலுக்கு உரியவன்.
* 654. உறுமூ றொழிக்கு முரவோனை யாள்க.
* செயல் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை நீக்கும் வலிமை உடையவனே செயலுக்கு உரியவன்.
* 655. வினையினிற் றிரியா மெய்யனை யாள்க.
* தான் எடுத்துக் கொண்ட செயலிலிருந்து நீங்காமல் இருப்பவனேசெயலுக்கு உரியவன்.
* 656. இதையிதான் முடிப்பனென் றதையவன் பால்விடல்
* இந்தத் தொழிலை இக்காரணங்களால் இவன் முடிப்பான் என்று அறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
* 657. அதன்பி னவனையே யதற்குரிய னாக்குக.
* பிறகு அவனையே அத்தொழிலிற்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.
* 658. வினைக்கண் வனைசெயும் வீரனை யையுறேல்.
* எப்பொழுதும் தன் தொழிலில் முயற்சி உடையவரை சந்தேகப்படுதல் கூடாது.
* 659. செயல்செயும் பலரையுந் தினந்தொறு நாடுக.
* தொழில் செய்பவர்களை நாள்தோறும் கவனிக்க வேண்டும்.
* 660. செயன்முறை செய்தவன் சிந்தைகண் டாற்றல்.
* செயலைப் பற்றியும் செய்பவனைப் பற்றியும் அறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
*
==== 67. ஒற் றாளுதல்====
*
* 661. ஒற்றுவினை ஞர்பகை சுற்றமறைந் தறிவது;
* ஒற்றர் சுற்றத்தினர், பகைவர் என அனைவரையும் மறைந்திருந்து ஆராய்பவர் ஆவார்.
* 662. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தறிவது;
* பார்த்தவர் சந்தேகப்படாத மாற்று உருவுடனும் அஞ்சாமலும் இருப்பவர் ஒற்றர்.
* 663. உறுப்பெலாஞ் சிதைப்பினு முகாஅமை வல்லது.
* உறுப்பெல்லம் சிதைத்தாலும் பார்த்ததை வெளியில் சொல்லாதவர் ஒற்றர்.
* 664. உலகெலா நிகழ்பவை யொற்றினா லறிக.
* எல்லா இடங்களிலும் நிகழ்பவற்றை ஒற்றர்களின் மூலம் அறிய வேண்டும்.
* 665. ஒற்றுரை சான்ற நூல் கொற்றவன் கண்களே.
* ஒற்றரின் கூற்றும் புகழ் பெற்ற நீதி நூல்களின் கருத்தும் அரசனின் கண்கள் ஆகும்.
* 666. ஒற்றிலார் கொற்றமும் வெற்றியு மிழப்பர்.
* ஒற்றர்கள் இல்லாத மன்னன் செல்வத்தையும் வெற்றியையும் இழப்பான்.
* 667. ஒற்றுரைத் ததனைவே ரொற்றினா லொற்றுக.
* ஓர் ஒற்றரின் கூற்றை மற்றொரு ஒற்றரின் கூற்றுடன் ஒப்பிட்டு உண்மை அறிய வேண்டும்.
* 668. ஒற்றுமூன் றொத்திடி னுண்மையென் றறிக.
* இவ்வாறு மூன்று ஒற்றர்கள் சொல்வது ஒன்றாக இருந்தால் உண்மை என்று அறிய வேண்டும்.
* 669. ஒற்றொற் றயிரா துணரா தாள்க.
* ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாமல் சந்தேகியாமல் ஆள வேண்டும்.
* 670. ஒற்றிற் கயலா ருணர்ந்திடா தீக.
* ஒற்றர்களுக்கு மற்றவர் அறியாத வண்ணம் பொருள் அளித்தல் வேண்டும்.
*
==== 68. உரைநூ லாளுதல்====
*
* 671. உரைநூல் புரைதவிர புகழ்சால் நூல்கள்.
* உரை நூல் என்பது குற்றமற்ற புகழ் பெற்ற நீதி நூல்களாகும்.
* 672. அழியாப் பொருள்களை யறைபவே புகழ்பெறும்.
* எந்நாளும் அழியாத பொருள்களைப் பற்றிக் கூறும் நூல்களே புகழ் பெறும்.
* 673. அவைமெய்ப் பொருளே யதிற்சே ரறனே.
* எந்நாளும் அழியாதவை உண்மை, பொருள் மற்றும் அதைச் சார்ந்த அறம் ஆகியவை ஆகும்.
* 674. பொருளிலா தறனிலை புணர்விலா தொழிவிலை.
* பொருளே அறத்திற்கு அடிப்படை. இல்வாழ்க்கையே வீடு பேற்றிற்கு அடிப்படை.
* 675. ஆதலா லவையு மழியாப் பொருள்களே.
* ஆதலால் இவையும் அழியாப் பொருள்களே.
* 676. அவ்வைம் பொருளிலு மடங்காப் பொருளில்லை;
* இந்த ஐந்து பிரிவுகளிலும் அடங்காத பொருளே இல்லை.
* 677. புது நூ லுடனே புகழ்பெற லரிது;
* புதிய நூல்கள் உடனே புகழ் பெறுவது கடினமான விஷயமாகும்.
* 678. ஆதலா லுரைநூ லவைசொலுந் தொன்னூல்.
* ஆதலால் உரை நூல்கள் என்பவை அழியாதப் பொருள்களைப் பற்றிக் கூறும் பழமையான நூல்கள் ஆகும்.
* 679. அவைபல மொழியிலு மமைந்துள மறைகள்;
* அவை பல மொழிகளிலும் உள்ள வேதங்களாகும்.
* 680. இனிய நந்தமிழி னிலக்கியமி லக்கணம்.
* இனிய நம் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண நூல்கள் உரை நூல்கள் ஆகும்.
*
==== 69. அமைச் சாளுதல்====
*
* 681. அமைச்சர சிற்கினி தமைவன சொல்வது;
* அமைச்சர் அரசருக்கு இனிமையாக பொருத்தமானவற்றைச் சொல்ல வேண்டும்.
* 682. அரசுசொல் வனவு மமைத்துத் தருவது;
* அரசர் சொல்பவற்றையும் செய்து முடித்துத் தர வேண்டும்.
* 683. அரசின் செயற்கெலாஞ் சிரசென நிற்பது;
* அரசின் செயல்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பது அமைச்சர்.
* 684. அரசின் குடிக்கெலா மன்னையா நிற்பது;
* குடிமக்களுக்கு ஓர் அன்னையைப் போல் தேவை அறிந்து செயல்பட வேண்டும்.
* 685. அரசுயிர்த் துணையா வறனெலாஞ் செய்வது.
* அரசருக்குத் துணையாக இருந்து அறச் செயல்கள் செய்ய வேண்டும்.
* 686. அதனல மரசிய லனைத்துநன் காளுதல்;
* அமைச்சரின் சிறப்பு ஆட்சிக்குத் தேவையான அனைத்தையும் செய்து நன் கு ஆட்சி செய்வது ஆகும்.
* 687. நூலிய லுலகிய னுண்ணறி வுடைமை;
* நூலறிவும் உலகியல் நடை முறைகளும் நுட்பமாக அறிந்து இருக்க வேண்டும்.
* 688. காமமும் வெகுளியுங் கைக்கொளா தமைதல்.
* ஆசை, கோபம் ஆகியவை இருத்தல் கூடாது.
* 689. அமைச்சுபட் டியைப்போ லமைந்தறம் புரிக.
* பட்டி என்ற அமைச்சரைப் போல நீதி நெறிகளை அறிந்திருக்க வேண்டும்.
* 690. அரசுவிக் கிரமனி னன்புகொண் டாள்க.
* விக்கிரமாதிதன் என்ற அரசனைப் போல் அன்புடன் ஆட்சி செய்ய வேண்டும்.
*
==== 70. அறிந்து சொல்லல்.====
* 691. நாநல மழியா நலமென மொழிப.
* ஒருவனுக்கு நாவன்மை அழியாத சிறப்பைக் கொடுக்கும்.
* 692. ஆக்கமுங் கேடு மதின்வரு மென்ப.
* ஒருவனுக்கு நன்மையும் தீமையும் தம் சொற்களால் ஏற்படும்.
* 693. அறனும் பொருளு மதின்வரு மன்ற.
* நாவன்மை ஒருவனுக்கு அறத்தையும் பொருளையும் கொடுக்கும்.
* 694. அகிலநிற் பதுமஃ தமைதலா னன்றே.
* சொல்வன்மையால் உலகம் நிலைத்து நிற்கிறது.
* 695. சொல்லு மியலெலா மொல்லும் வகைசொலல்.
* சொல்லும் சொற்களைச் சொல்வதற்கு உரிய முறைகள் அனைத்தும் பொருந்தும்படி சொல்லுதல்
* 696. அவையறம் பொருடர வமைத்துச் சொல்லல்;
* சொல்லும் சொற்கள் அறத்தை விளக்குவதாகவும் பொருள் ஈட்ட உதவுவதாகவும் இருக்கும் படி சொல்லுதல்.
* 697. கேட்போர்க் கின்பங் கிளைக்கச் சொல்லல்;
* கேட்பவர்க்கு இன்பம் பெருகுமாறு சொல்லுதல்.
* 698. சுருங்கத் தொகுத்து விளங்கச் சொல்லல்;
* தாம் சொல்வதை குறைவான சொற்களினால் பிறர் அறியும்படி சொல்லுதல்
* 699. வரிசைப் படுத்தி மனங்கொளச் சொல்லல்;
* தாம் சொல்வதை வரிசைப்படுத்திக் கேட்பவர் மனதில் பதியும்படி சொல்லுதல்.
* 700. மறுக்கா விதத்து மாணுறச் சொல்லல்.
* தாம் சொல்வதைப் பிறர் மறுக்காத வகையில் சிறப்பாகச் சொல்லுதல்.
*
==== 71. பண்பு செய்தல்====
*
* 701. பாடறிந் தொழுகலே பண்பென மொழிப.
* பிறர் பெருமையை அறிந்து நடப்பதே பண்பு ஆகும்.
* 702. பண்பா லுலக முண்டெனும் பொதுமறை.
* பண்புடைமையால் உலகம் நிலைத்து நிற்கிறது என்று குறள் கூறுகிறது.
* 703. மக்களுட் பண்பிலார் மரபெனப் படுவர்.
* மக்களில் பண்பு இல்லாதவர் மரத்திற்கு ஒப்பானவர்.
* 704. பெரியார்க் கடங்கி யுரியவை வழங்குக.
* பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து கொடுக்க வேண்டியவற்றைக் கொடுக்க வேண்டும்.
* 705. சிறியரை யடக்கிச் செய்வன செய்க.
* சிறியவர்களை வழி நடத்திச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்.
* 706. மெல்லியன் மகளிருண் மென்மைபா ராட்டுக.
* மென்மையான தன்மை உடையவர்களான பெண்களிடம் மென்மையாக நடக்க வேண்டும்.
* 707. நண்பருள் ளுவப்புற நண்ணிநின் றொழுகுக.
* நண்பர்களின் உள்ளம் மகிழ்ச்சியடையுமாறு அவர்களுடன் நெருங்கி இருக்க வேண்டும்.
* 708. பகைவருள் ளுட்கமே னகைபுரிந் தொழுகுக.
* பகைவர்களின் உள்ளம் நடுங்க வெளியில் மட்டும் சிரித்துப் பழக வேண்டும்.
* 709. சலவருட் சாலச் சலஞ்செய் தொழுகுக.
* வஞ்சகரிடம் மிகுந்த வஞ்சகத்துடன் பழக வேண்டும்.
* 710. பண்பர சின்பெலா மெண்பதத் தாலாம்.
* எளிதில் கண்டு பேசுவதற்கு ஏற்ற நிலையில் இருத்தலே பண்புடைமையின் இன்பம் ஆகும்.
*
==== 72. பெரிய வரசரைச் சேர்தல்====
*
* 711. பெரிய வரசர் பெரியநா டாள்பவர்;
* பேரரசர் என்பவர் பெரிய நாட்டை ஆள்பவர் ஆவார்.
* 712. சிறிய வரசர்பாற் றிறைநனி கொள்பவர்;
* சிற்றரசர்களிடம் அதிக அளவு கப்பம் பெறுபவர் ஆவார்.
* 713. எவ்வர சர்க்கு மிளையாத் திறத்தினர்;
* எல்லா அரசர்களையும் விட அதிக வலிமை உடையவர்.
* 714. திறனெலாம் பெருக்கி யறனெலாஞ் செய்பவர்;
* செல்வத்தைப் பெருக்கி அறச்செயல்கள் செய்பவர்.
* 715. மறஞ்செயு மரசரின் றிறஞ்சிதைத் தொழிப்பவர்.
* தீய செயல்கள் செய்யும் அரசர்களின் வலிமையைக் குறைப்பவர்.
* 716. பெரிய வரசர் பெரியார்க் கடுத்தவர்.
* பேரரசர் ஞானிகளுக்கு அடுத்ததாக மதிக்கத் தகுந்தவர்கள்.
* 717. அவரைச் சேர்தலா லரும்பெரு மாக்கமாம்.
* பேரரசரை அணுகினால் மிகச் சிறந்த செல்வத்தைப் பெறலாம்.
* 718. அமைச்சராய்ப் புலவரா யவரவை சேர்க.
* அமைச்சராகவோ புலவராகவோ அவரது அமைச்சரவையில் சேர வேண்டும்
* 719. அருவனைத் தலைவரா யவர்பாற்சேர்க.
* சிறந்த படைத் தலைவராக அவரிடத்தில் சேர வேண்டும்
* 720. அவருள கொளநடந் தரியவை பெறுக.
* அவர் மனம் திருப்தியடையும்படி நடந்து சிறந்தவற்றைப் பெற வேண்டும்.
*
==== 73. அவர்பா லொழுகல்====
*
* 721. அகலா தணுகா தனற்காய்வார் போல்க.
* நெருப்பில் குளிர் காய்பவர் போல் அரசரை விட்டு மிகவும் விலகாமலும் அரசரை மிகவும் நெருங்காமலும் இருக்க வேண்டும்.
* 722. அன்பொடு மெய்யொடு மடங்கிநின் றொழுக.
* அன்போடும் உண்மையோடும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
* 723. அவர்முன் செவிச்சொ லயனகை பொருந்தேல்.
* காதோடு காதாகப் பேசுவதையும் பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும் தவிர்க்க வேண்டும்
* 724. அவர்சொலி னலாலொன் ற்றிந்திட விரும்பேல்.
* அரசராகச் சொன்னாலன்றி எதையும் அறிய விரும்பக் கூடாது.
* 725. அவர்க்கா வனவு மமையங்கண்டியம்புக.
* அரசருக்குத் தேவையானவற்றை தகுந்த நேரம் பார்த்துக் கூற வேண்டும்
* 726. அவர்விழை பவற்றை யகத்தினும் விழையேல்.
* அரசர் விரும்புபவற்றை உள்ளத்தினாலும் விரும்பக் கூடாது.
* 727. அவரை யுறாவகை யாங்கணு மொழுகுக.
* எந்த இடத்திலும் அரசர் சந்தேகப்படாத வண்ணம் நடக்க வேண்டும்
* 728. இளைய ரினத்தின ரெனநினைந் திகழேல்.
* இளையவர் என்றும் உறவினர் என்றும் நினைத்து இகழக் கூடாது
* 729. பழையவ ரெனினும் பண்பிலா தனசெயேல்.
* அரசர் தமது பழைய நண்பர் என்று நினைத்துத் தகாதவற்றைச் செய்யக் கூடாது.
* 730. தனக்குவேண் டுவவவர் சாற்றெனிற் சாற்றுக.
* தனக்கு வேண்டியவற்றை அவர் அனுமத்தித்தால் மட்டுமே கூற வேண்டும்.
*
==== 74. குறிப்புணர் வுடைமை====
*
* 731. குறிப்புணர் விரண்டு கூறா கும்மே.
* கூறாமல் குறிப்பால் உணர்வது இரண்டு விதமாக நடைபெறும்.
* 732.குறிப்பி னுணர்த்தலே குறிப்பி னுணர்தலே.
* அவை குறிப்பால் உணர்த்துவது மற்றும் குறிப்பினை உணர்வது ஆகியவை ஆகும்.
* 733.குறிப்பி னுணர்த்தல் கூறா துணர்த்தல்.
* குறிப்பால் உணர்த்துவது என்பது கூறாமலேயே புரிய வைப்பது ஆகும்
* 734.குறிப்பி னுணர்தல் கூறா துணர்தல்.
* குறிப்பினை உணர்வது என்பது கூறாமலேயே புரிந்து கொள்வது ஆகும்.
* 735.இவையர சமைச்சிற் கின்றியமை யாதவை.
* இவை அரசர் மற்றும் அமைச்சருக்கு இன்றியமையாத குணங்களாகும்.
* 736. அகதினி லுள்ளது முகத்தினிற் றெரியும்.
* மனதில் நினைப்பதை முகம் காட்டிவிடும்.
* 737. மொழியான் மறைப்பினு முகமதைக் காட்டும்.
* வாயால் கூறாமல் மறைத்தாலும் முகம் காட்டிவிடும்.
* 738. முதுவர் குறிப்பினான் மொழிகுவ ரறிகுவர்;
* அறிஞர்கள் குறிப்பினால் மற்றவர்கள் கூற விரும்பியவற்றை அறிவர்.
* 739. முகங்கண் களினான் மொழிகுவ ரறிகுவர்;
* முகம் மற்றும் கண்களினால் மற்றவர்கள் கூற விரும்பியவற்றை அறிவர்.
* 740. முன்சொல் குறிப்பினு மொழிகுவ ரறிகுவர்.
* முன்னால் சொல்லிய கருத்தின் மூலமும் மற்றவர்கள் கூற விரும்பியவற்றை அறிவர்.
*
==== 75. அரியவை பெறுதல்====
*
* 741. அரியவை நட்புநா டரண்பொருள் படையே.
* நண்பர்கள், நாடு, கோட்டை, பொருட் செல்வம், படை ஆகியவையே அரிய பொருட்கள் ஆகும்.
* 742அவையொருங் கெய்தின்வா யமிழ்தடைந் தற்றே.
* இவையனைத்தையும் அடைவது அமிழ்த்தை அடைவது போன்று இன்பம் தரக் கூடியது ஆகும்.
* 743. ஒன்றெய் தினும்பிற வுண்டா மெளிதே.
* இவற்றில் ஒன்றை அடைந்தால் மற்றவற்றை அடைவது எளிது ஆகும்.
* 744. ஒன்று மிலாது நன்றுற லரிது.
* இவை ஒன்றுமில்லாமல் நன்மை அடைவது கடினம் ஆகும்.
* 745. அவைபெரு மன்னர்க் கரியன வல்ல.
* பேரரசருக்கு இவை அரிய பொருட்கள் அல்ல.
* 746. அவருளங் கொளச்சொலி னவரவை யளிப்பர்.
* அவரது மனதை கவரும்படி கூறினால் அவர் இவற்றை அளிப்பார்.
* 747 அவரையோர் தந்தையா வறிந்திட வுடன்படல்;
* அவரைத் தந்தையாக எண்ண உடன்படவேண்டும்.
* 748. அவர்பின் வேண்டுவ ளித்திட வுடன்படல்;
* அவருக்குத் தேவையானவற்றை அளித்திட உடன்படவேண்டும்.
* 749. அவரது பகையை யழித்திட வுடன்படல்;
* அவரது பகைவர்களை அழித்திட உடன்படவேண்டும்.
* 750. பிறவுமொத் தியைவன பெற்றெலாம் பெருக்குக.
* பிறகு பொருத்தமானவற்றை எல்லாம் பெற்று அவற்றைப் பெருக்க வேண்டும்.
*
==== 76. நாடு====
*
* 751. நாடு நாடுவ நல்குநா னிலத்தது.
* நாடு என்பது நான்கு வகையான நிலங்களை உடையதாகும்.
* 752. மலைகாடு வயல்கடல் மருவிய நானிலம்.
* மலைகள், காடுகள், வயல்கள், கடல் இவை நான்கும் அடங்கியதே நானிலம் ஆகும்.
* 753. அவை குறிஞ்சி முல்லை மருத நெய்தல்.
* மலைப்பகுதி குறிஞ்சி எனவும்,காட்டுப்பகுதி முல்லை எனவும், வயல் பகுதி மருதம் எனவும், கடல் பகுதி நெய்தல் எனவும் அழைக்கப்படும்.
* 754. அவைபல வுயிருணா மரமுதற் றாங்கும்.
* அவை பல வகையான உயிரினங்கள்,உணவுப் பொருட்கள், மரங்கள் முதலியவற்றால் நிறைந்திருக்கும்.
* 755. ஒருமொழி வழங்குவ தொருதனி நாடு.
* ஒரு மொழி பேசும் பகுதி ஒரு தனி நாடாகும்.
* 756. ஒருபெருங் கண்டத் துறுவவக நாடு.
* ஒரு பெரிய கண்டத்தினுள் உள்ளவை உள்நாடுகளாகும்.
* 757. பிறபெருங் கண்டத் துறுவபுற நாடு.
* மற்ற கண்டத்திலுள்ளவை அயல் நாடுகளாகும்.
* 758. பெருங்கடன் மலையாற் பிரிவது கண்டம்.
* பெரிய கடற்பரப்பாலோ மலைப்பகுதியாலோ பிரிக்கப்படும் நிலப்பரப்பு வெவ்வேறு கண்டங்களாகும்.
* 759. கடலுந் தீவுமயற் கண்டமொடு சேரும்.
* கடலும், தீவும் பக்கத்தில் உள்ள கண்டத்தின் பகுதிகளாகக் கருதப்படும்.
* 760. பலபெருங் கண்டமு முலகெனப் படுமே.
* பல பெரிய கண்டங்கள் சேர்ந்த்ததே உலகம் ஆகும்.
*
==== 77. நாட்டுச் சிறப்பு====
*
* 761. நாட்டுச் சிறப்புநல் வளன்பல வமைதல்;
* ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்நாடு பல வளங்களால் நிறைந்து இருப்பது ஆகும்
* 762. உயிகளு முணாக்களு மொக்க நிறைதல்;
* அந்நாட்டில் உயிர்களும் அவற்றிற்குத் தேவையான உணவும் சரியான அளவில் நிறைந்து இருப்பதாகும்.
* 763. நிலநதி மலைகட னலநிதம் வளர்தல்;
* நிலம், ஆறு, மலை, கடல் இவற்றின் பயன்கள் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும்.
* 764. அரும்பொருள் பெரும்பொரு ளாலய மிகுதல்;
* அரிய பொருட்களாலும் பொன், முத்து போன்ற மதிப்பு மிக்க பொருட்களாலும் நாடு நிறைந்து இருக்கவேண்டும்.
* 765. அரணு மரசு மமைந்துநடு நிற்றல்;
* நாடு சுற்றிலும் அரண் சூழ நடுவில் இருக்க வேண்டும்.
* 766. உறுபசி யரும்பிணி செறுபகை யிலாமை;
* நாடு மிகுந்த பசியும். நீங்காத நோயும், அழிக்கும் பகையும் இல்லாமல் இருக்க வேண்டும்.
* 767. செல்வமு மின்பமுஞ் சீரும் பெருக்கல்;
* நாட்டின் செல்வமும், இன்பமும், புகழும் பெருக வேண்டும்.
* 768. ஒழுக்கமுங் கல்வியு முயர்நிலை நிற்றல்;
* நாட்டில் ஒழுக்கமும் கல்வியும் உயந்தநிலையை அடைய வேண்டும்.
* 769. திறந்தகை வாய்மை யறந்தவம் வளர்தல்;
* நாட்டில் பெருந்தன்மை, நேர்மை, அறம், தவம் ஆகியவை அதிகரிக்க வேண்டும்.
* 770. அருளுமெய் யறிவு மமைந்து பரவல்.
* நாட்டில் கருணையும், கடவுள் ஞானமும் நிரம்பியிருக்க வேண்டும்.
*
==== 78. அரண்====
*
* 771. அரணுயிர் பொருள்களை யளிக்குமோர் காப்பு.
* அரண் என்பது உயிர்களையும் பொருள்களையும் காக்கக் கூடிய ஒரு வேலி ஆகும்.
* 772. இயற்கையுஞ் செயற்கையு மியைந்தர ணாகும்.
* இயற்கையாக உள்ளதும் மனிதனால் கட்டப்பட்டதும் இணைந்து அரண் ஆகிறது.
* 773. அரண்புற வரணக வரனெண விரண்டு.
* அரண் புறவரண், அகவரண் என இரு வகைப்படும்.
* 774. புறவரண் புறநா டுறாவகை காப்பது.
* புறவரண் அயல் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பது ஆகும்.
* 775. அகவர ணரசுயி ரரும்பொருள் காப்பது.
* அகவரண் இராச்சியம், உயிரினங்கள், செல்வம் ஆகியவற்றைக் காப்பது ஆகும்.
* 776. கண்டத்தைச் சூழ்ந்துள கடனீர் புறவரண்.
* நாட்டினைச் சுற்றியுள்ள கடல் ஒரு புறவரண் ஆகும்.
* 777. அதனை யடுத்துள வருநிலம் புறவரண்.
* பகைவரைக் கொல்லக் கூடிய கருவிகள் கொண்டுள்ள நிலம் ஒரு புறவரண் ஆகும்.
* 778. நிலத்தை யடுத்துள மலைத்தொடர் புறவரண்.
* மலைத்தொடர் ஒரு புறவரண் ஆகும்.
* 779. மலையை யடுத்துள மரக்காடு புறவரண்.
* மரங்கள் நிறைந்த காடு ஒரு புறவரண் ஆகும்.
* 780. நாட்டகத் தமையுமிந் நான்கு மகவரண்.
* நாட்டினுள் இந்நான்கும் அமைந்தால் அது அகவரண் ஆகும்.
*
==== 79. அர ணமைத்தல்====
*
* 781. அரணிலார்க் கரசிலை யரசிலார்க் கரணிலை.
* அரண் நன்கு அமையாவிடில் நாடு பறி போய்விடும். சொந்த நாடு இல்லாவிடில் பாதுகாப்பில்லை.
* 782. அரணன் கமைந்திடி னரசெலாங் கொள்ளும்.
* அரண் நன்கு அமைந்துவிட்டால் நாடு எல்லா செல்வங்களும் பெற்று விளங்கும்.
* 783. அரணன் கமைத்தலோ ரரும்பெருஞ் செயலே.
* அரணை நன்கு அமைப்பது என்பது அரிய, பெரிய செயல் ஆகும்.
* 784. அரணெலா முரியரா லமைத்திடல் வேண்டும்.
* அரண் திறமை உடையவர்களால் அமைக்கப்பட வேண்டும்.
* 785. புறவர ணான்கையும் பூரண மாக்குக.
* புறவரண்கள் நான்கையும் முழுமை பெறச் செய்ய வேண்டும்.
* 786. நாட்டி லகவர ணலம்பெற வியற்றுக.
* அகவரண்கள் சிறப்பாக விளங்கும்படி செய்ய வேண்டும்.
* 787. அவற்று ளகழ்மதி லரசில மாக்குக.
* அவற்றுள் அகழ், மதில் மற்றும் அரண்மனை ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
* 788. புறவக நெறிகளைத் திறனுடன் பொருத்துக.
* வெளிப்புற வழிகளையும் சுரங்க வழிகளையும் திறமையுடன் பொருத்த வேண்டும்.
* 789. அவைகணத் தடைக்கவும் திறக்கவும் வேண்டும்.
* அவை நினைத்த உடன் மூடவும் திறக்கவும் வேண்டும்.
* 790. நெறியுள விடனெலாம் பொறிகளை நிரப்புக.
* வாய்ப்புகள் உள்ள இடத்தில் எல்லாம் கொல்லக் கூடிய கருவிகளை அமைக்க வேண்டும்.
*
==== 80. அர ணளித்தல்====
*
* 791. அரண்படை யளிக்குமஃ தளிப்பது படையே.
* அரண் படையைக் காக்கும். அதைக் காப்பது படை ஆகும்.
* 792. நீரி லரும்படை நெடுங்கல நிறுத்துக.
* சிறந்த படைக்கப்பல்களை நீரில் நிறுத்த வேண்டும்.
* 793. நிலத்தி லருந்தொழில் வலப்படை நிரப்புக.
* மேன்மையான திறமையான வலிமையான படைகளை நிலத்தில் நிரப்புதல் வேண்டும்.
* 794. மலைமதில் களிலரு வினைப்படை நாட்டுக.
* மலைகளிலும் மதில்களிலும் தொழில் திறமை மிக்க படைகளை நிறுத்த வேண்டும்.
* 795. காட்டுட் பகைகொலுங் கரவெலா மாக்குக.
* காட்டினுள் பகைவர்களைக் கொல்லக் கூடிய படுகுழிகளை ஏற்படுத்த வேண்டும்.
* 796. அரணுட் புறனெலா மாம்விளை வாக்குக.
*
* 797. உடைபடைக் கலமெலாந் தடைவரா தியற்றுக.
* அழிக்கக் கூடிய படைக்கருவிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்தல் வேண்டும்.
* 798. அவரவர் வசிப்புக் காமில மாக்குக.
* அந்தந்த படை வீரர்கள் வசிப்பதற்கு ஏற்ற இல்லங்கள் உருவாக்க வேண்டும்.
* 799. அகழ்மதில் சூழிலத் தரசினம் வாழ்க.
* அகழ், மதில் இவை சூழ்ந்த அரண்மனையில் அரச குடும்பத்தினர் வாழவேண்டும்.
* 800. அகவரண் களையர சனுதினங் காண்க.
* உட்புற அரண்களை அரசர் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.
*
==== 81. பொருள்====
*
* 801. விற்கத் தக்க விலையுடை யதுபொருள்.
* விற்கப்படக் கூடியதும் விலை மதிப்பு உடையதும் பொருள் எனப்படும்.
* 802. பொருளின் பறம்புகழ் பொருந்திடச் செய்யும்.
* பொருள் இன்பம், அறம் மற்றும் புகழ் இவற்றை அடையும்படி செய்யும்.
* 803. பயனழ கருமையா லுயர்வஃ தடையும்.
* பொருளின் மதிப்பு அதன் பயனாலும் அழகாலும் பெருமையாலும் அதிகரிக்கும்.
* 804. விலையிடம் பொழுதால் வேறுபா டுற்றிடும்.
* பொருளின் விலை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறும்.
* 805. பொருண்மண் முதனாற் பூதங்கள் பிராணிகள்;
* பொருள் என்பது மண் முதலிய நான்கு பூதங்கள் (மண், நீர், நெருப்பு, காற்று), விலங்குகள்;
* 806. அவற்றினின் றாவன வாக்கப் படுவன.
* மற்றும் அவற்றிலிருந்து உருவாகின்றவை, உருவாக்கப்படுபவை ஆகியன.
* 807. உத்தம மவற்றுண் முத்தாதி மணிகளே;
* அவற்றுள் மிகச் சிறந்தவை முத்து, பவளம் போன்ற மணிகள்;
* 808. வயிரமுதல் ரத்நமே பொன்முத லுலோகமே;
* வயிரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், நீலம், புஷ்பராகம் முதலிய விலை உயர்ந்த கற்கள் மற்றும் பொன் முதலிய உலோகங்கள்;
* 809. நவதா னியமே நன்மரஞ்செடிகளே;
* நவ தானியங்கள்(நெல், கோதுமை, துவரை, உழுந்து, பயறு, கடலை, அவரை, எள், கொள்), நன்மை தரும் மரம் மற்றும் செடிகள்;
* 810. உணவுடை யிலஞ்செல வணியமர்க் குரியவே.
*
==== 82. பொருட் சிறப்பு====
*
* 811. பொருளிற் சிறந்தது புகலவொன் றில்லை.
* பொருட்செல்வத்தைவிடச் சிறந்தது என்று எதையும் கூற இயலாது.
* 812. அதுநினைத் தவையெலா மளிக்குந் திறத்தது;
* அது நினைத்ததை எல்லாம் அளிக்கும் திறமை உடையது.
* 813. நீர்சூ ழுலகெலா மோர்நொடி யிற்றரும்;
* நீர் சூழ்ந்த இந்த உலகத்தையே ஒரு நொடியில் தந்துவிடும்.
* 814. மன்னர்மன் னவரையுந் தன்னடி வீழ்த்தும்;
* பேரரசரையும் நம் காலடியில் விழச் செய்யும்.
* 815. அருளையு மெய்யையு மடைந்திடச் செய்யும்.
* கருணையையும் இறைவனையும் அடைய வழிவகுக்கும்.
* 816. பொருளிலா ரின்பறம் புகழ்மெய் யிழப்பர்;
* பொருள் இல்லாதவர் இன்பம், அறம், புகழ் மற்றும் இறைவனருள் ஆகியவற்றை இழப்பர்.
* 817. மடையராய்த் தம்மரு நடையெலாம் விடுவர்;
* அறிவை இழந்து தம்முடைய நல்லொழுக்கத்தைக் கைவிடுவர்.
* 818. அடியராய்ச் சிறியரா யலக்கணுற் றுழல்வர்;
* அடிமையாக இழிந்தவராக துன்புற்று அலைவர்.
* 819. பசியினும் பிணியினும் பட்டுழந் தழிவர்;
* பசியாலும் நோயாலும் பாதிக்கப்பட்டு அலைந்து அழிவர்.
* 820. பழியுளு நரகுளு மழியா துறைவர்.
* பழிச் சொல்லை ஏற்று நரகத்தில் நீங்காது வாழ்வர்.
*
==== 83. உழவு====
*
* 821. உழவு தொழினில விளையுளைச் செய்தல்.
* உழவுத் தொழில் நிலத்திலிருந்து விளைபொருளை விளையச் செய்வது ஆகும்.
* 822. உழவ ருயிர்க்கெலா முயிரெனத் தக்கவர்.
* உழவர்கள் உயிர்களுக்கு எல்லாம் உணவு கொடுப்பதால் உயிர்களுக்கு உயிர் எனப் போற்றப்படுவர்.
* 823. உழவுசெய் முறைநிலங் கிழவர்தாங் காண்டல்;
* நிலத்துக்கு உரியவன் உழவுத் தொழிலைக் கவனிக்க வேண்டும்.
* 824. காடுநன் கழித்துக் கோடையி லுழுதல்;
* அடர்ந்தசெடிகளைக் கோடை காலத்தில் அழித்து அந்நிலத்தை உழ வேண்டும்.
* 825. நிலத்திற் கிசைவன விதைத்திடத் துணிதல்;
* நிலத்திற்கு ஏற்ற விதை விதைத்திட எண்ண வேண்டும்.
* 826. வித்திற் காமெரு மெத்த விடுதல்;
* விதைக்கு ஏற்ற உரம் அதிகம் இட வேண்டும்.
* 827. வேர்செலு மாழ மேர்செல வுழுதல்;
* செடியின் வேர் செல்லும் ஆழத்திற்கு ஏரினால் உழ வேண்டும்.
* 828. பதநன் கறிந்துநல் விதைசெல விதைத்தல்.
* நிலத்தின் ஈரப்பததை நன்கு சோதித்து தரமான விதையை மண்ணின் உள்ளே செல்லுமாறு விதைக்க வேண்டும்.
* 829. களைகட்டு நீர்பாய்ச்சிக் காத்துப் பயன்கொளல்.
* களை பிடுங்கி நீர்ப் பாய்ச்சி பயிரைக் காத்து பயன் அடைய வேண்டும்.
* 830. ஒருபலன் றாருநிலத் திருபல னாக்குதல்.
* ஒரு பங்கு விளையும் நிலத்தில் இரு பங்கு விளையும்படி செய்ய வேண்டும்.
*
==== 84. வாணிகம்====
*
* 831. வாணிகம் பண்ட மாற்று நற்றொழில்.
* வாணிகம் பொருளைக் கொடுத்துப் பொருளை வாங்கும் சிறந்த தொழில் ஆகும்.
* 832. அஃதெஞ் ஞான்று மரசிற் கடுத்தது.
* அது எப்பொழுதும் அரசாட்சிக்கு அடுத்த நிலையில் உள்ளது ஆகும்.
* 833. அஃதிலார்க் கரசிலை யரசிலார்க் கஃதிலை.
* வாணிகம் இல்லை எனில் அரசாட்சி இல்லை. அரசாட்சி இல்லை எனில் வாணிகம் இல்லை.
* 834. அதன்முறை யதைநித மதிபர்தா நோக்கல்;
* வாணிகத்துக்கு உரியவர் அதனை தினமும் கவனித்தல் வேண்டும்.
* 835. கணிதமெப் பொழுதுநா நுனிவைத் தாளுதல்;
* பொருளின் விலை போன்ற விவரங்களைத் தெய்வாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* 836. கொள்ளிடங் கொடையிட முள்ளுணன் கறிதல்;
* பொருட்களை வாங்கும் இடம், விற்கும் இடம் இவற்றை நன்கு அறிந்து இருக்க வேண்டும்.
* 837. செலவெலாங் கூட்டிச் சிறிதேற்றி விற்றல்;
* பொருட்களை வாங்கியதிலிருந்து விற்கும் வரை ஆகும் செலவுடன் சிறிது கூட்டி விற்க வேண்டும்.
* 838. எவர்க்கு மொருசொலே யின்புறச் சொல்லல்;
* எல்லோரிடமும் இனிமையாகப் பேசவேண்டும்.சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்.
* 839. கடனனி கொடுக்கு மடனனி யொழித்தல்;
* கடனுக்கு வாணிகம் செய்வது அறிவற்ற செயல் ஆகும்.
* 840. பிறரது பொருளையுந் தமதெனப் பேணல்.
* பிறரது பொருளையும் தம்முடைய பொருளைப் போல் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
*
==== 85. கைத் தொழில்====
*
* 841. கைத்தொழில் பொருடரு மெய்த்தொழி லாகும்.
* கைத்தொழில் நமக்கு வருமானம் தரக்கூடிய உடல் உழைப்பு ஆகும்.
* 842. மற்றைய விரண்டையும் வளர்ப்ப தத்தொழில்.
* கைத் தொழில் வாணிகம், உழவுத் தொழில் ஆகியவற்றை வளர்க்கும்.
* 843. அத்தொழில் பேணா ரடைகுவர் வறுமை.
* கைத்தொழில் செய்யாதவர் ஏழ்மை நிலையை அடைவர்.
* 844. அத்தொழில் பல.அவை யாடை நெய்தல்;
* கைத்தொழில் பல. அவை நெசவுத் தொழில்;
* 845. உணற்குஞ் செயற்கு முதவுவ செய்தல்;
*
* 846. வீடரண் முதலிய மேம்பட வியற்றல்;
* வீடு, கோட்டை முதலிய கட்ட உதவும் கட்டிடத் தொழில்:
* 847. நிலத்திற் செல்பல வலத்தே ராக்கல்;
* தரையில் செல்லும் பல வகை வாகனங்கள், வலிமையான தேர் முதலியன செய்தல்;
* 848. நீரிற் செல்பல நாவா யாக்கல்;
* நீரில் செல்லக்கூடிய பல வகைக் கப்பல்கள் செய்தல்:
* 849. நிலநீ ருள்ளுள பலபொரு ளெடுத்தல்;
* நிலத்திற்கும் நீருக்கும் அடியில் சுரங்கம் தோண்டி பல பொருட்கள் எடுத்தல்:
* 850. காப்பிற் காம்பல கருவிக ளியற்றல்.
* பல வகை பாதுகாப்புக் கருவிகள் செய்தல்.
*
==== 86. படை====
*
* 851. பகையுயிர் படுத்தலாற் படையெனப் பட்டது.
* படை என்பது பகைவர்களின் உயிரைக் கொல்லும்.
* 852. உலகெலா மளிப்பதோ ருத்தம வரசே.
* சிறந்த அரசு குடிமக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்.
* 853. அரசரண் பொருள்களை யளிப்பது படையே.
* இராச்சியம், அரண் மற்றும் பொருள்களைப் பாதுகாப்பது படை ஆகும்.
* 854. இன்பமும் புகழு மீவது படையே.
* இன்பமும் புகழும் கொடுப்பது படைதான்.
* 855. மெய்யிய லடையச் செய்வதும் படையே.
* கடவுள் தன்மை அடையச் செய்வதும் படைதான்.
* 856. படையிலா ரரசரண் படுபொரு ளிழப்பர்;
* படை இல்லாதவர் இராச்சியம், அரண் மற்றும் சிறந்த பொருள்களை இழப்பர்.
* 857. அறம்புக ழின்பறி வருண்மெய் யிழப்பர்;
* அறம், புகழ், இன்பம், அறிவு, அருள், உடல் நலம் ஆகியவற்றை இழப்பர்.
* 858. அடியராய்ச் சிறைபுகுந் தலக்கணுற் றுழல்வர்;
* அடிமையாக சிறையில் துன்புற்று வருந்துவர்.
* 859. பிணியொடும் பசியொடும் பிணக்குற் றழிவர்;
* நோயாலும் பசியாலும் சண்டையிட்டு அழிவர்.
* 860. நரகமும் பழியுங் கிருகமாக் கொள்வர்.
* பழிச்சொல்லை அடைந்து நரகத்தை இருப்பிடமாகக் கொள்வர்.
*
==== 87. படை வகை====
*
* 861. படைவகை நான்கெனப் பகருவர், அவைதாம்.
* படை நான்கு வகைப்படும், அவை.
* 862. முன்னோர் வழிவரு மூலப் படையே;
* பரம்பரையாக வரும் படை மூலப்படை எனப்படும்;
* 863. நாட்டுளார்க் கூட்டு நாட்டுப் படையே.
* நாட்டில் வசிப்பவர் உதவியினால் வரும் படை நாட்டுப்படை எனப்படும்;
* 864. காட்டுளார்க் கூட்டுங் காட்டுப் படையே;
* காட்டில் வசிப்பவர் உதவியினால் வரும் படை காட்டுப்படை எனப்படும்;
* 865. கொடைநட் பால்வருங் கூலிப் படையே;
* பணத்திற்காகவும் நட்புக்காகவும் வரும் படை கூலிப்படை எனப்படும்;
* 866. நான்கிலொவ் வொன்று நால்வகைப் படும்அவை;
* இப்படைகள் ஒவ்வொன்றும் நான்கு வகைப்படும். அவை;
* 867. நிலமிசை யமர்செயும் வலமிகு படையே;
* நிலத்தில் போர் செய்யும் வலிமை மிகுந்த படை;
* 868. நிலக்கீ ழமர்செயு நேரிலாப் படையே;
* நிலத்தின் கீழ் பதுங்கு குழிகளில் இருந்து போர் செய்யும் தன்னிகரில்லாத படை;
* 869. நீர்மிசை யமர்செயு நீர்க்கலப் படையே;
* நீரில் போர் செய்யும் கப்பல் படை;
* 870. வானிற் றிரிதரும் விமானப் படையே.
* வானில் போர் செய்யும் விமானப் படை;
*
==== 88. படைக்கலம்====
*
* 871. படைக்கலம் படைசெறப் படைகை யெடுப்பன.
* படைக்கலம் என்பவை எதிரிப் படையை அழிக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகும்.
* 872. படைக்கல மில்லெனிற்படையுமின் றாகும்.
* படைக்கலம் இல்லை எனில் படையினால் பயன் இல்லை.
* 873. படைக்கல மீட்டல் பயப்பொரு ளீட்டலே.
* படைக்கலங்களைத் திரட்டுவது பயனுள்ள பொருள்களைச் சேகரிப்பது ஆகும்.
* 874. பகைத்திற னெண்ணியே படைக்கல மியற்றுக.
* பகைவர்களின் வலிமையை அறிந்து அதற்கேற்ப படைக்கலங்களை உருவாக்க வேண்டும்.
* 875. விசையெரி கூருரம் விடமிக வியற்றுக.
* அம்பு, வாள் போன்றவை மிகவும் விஷமுள்ளதாகவும் மிகவும் கூர்மையாகவும் உருவாக்க வேண்டும்.
* 876. வெடிப்பன தெறிப்பன விசைமிகல் வேண்டும்.
* வெடிகுண்டுகள் போன்றவை மிகவும் விசையுடன் வெடிக்க வேண்டும்.
* 877. எறிவன விடுவன வெரிமிகல் வேண்டும்.
* எறியும் கருவிகளான ஈட்டி, வில்லில் இருந்து விடுபடும் அம்பு போன்றவை மிகுந்த வேகத்துடன் செல்ல வேண்டும்.
* 878. குத்துவ வெட்டுவ கூர்மிகல் வேண்டும்.
* குத்தவும் வெட்டவும் பயன்படும் வாள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும்.
* 879. உடைப்பன வறுப்பன வுரமிகல் வேண்டும்.
* உடைக்கவும் அறுக்கவும் பயன்படும் கருவிகள் வலிமையாக இருக்க வேண்டும்.
* 880. படைகொலும் படைக்கலம் விடமிகல் வேண்டும்.
* படையை அழிக்கும் படைக்கலங்கள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.
*
==== 89. படை யமைத்தல்====
*
* 881. பகைத்திற னழிக்கும் வகைத்தே ரியற்றுக.
* பகைவர்களின் வலிமையைத் அழிக்கும் திறனுடைய தேர்களை உருவாக்க வேண்டும்.
* 882. பகைக்குழுச் சிதைக்கும் வயக்களி றீட்டுக.
* பகைவர்களைச் சிதறி ஓடச் செய்யும் வலிமை உடைய யானைகளைத் திரட்ட வேண்டும்.
* 883. குறித்த நெறிசெலுங் குதிரைகள் கொள்ளுக.
* குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லும் குதிரைகளை வாங்க வேண்டும்.
* 884. இறத்தலி னின்புறூஉ மறத்தினர்க் கூட்டுக.
* போரில் இறப்பதை விரும்பும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* 885. தேர்மா பரியாள் சேனையா வகுக்க.
* தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று படைகளைப் பிரிக்க வேண்டும்.
* 886. அறைப்படுத் தேகுதற் காஞ்சில வியற்றுக.
* நிலத்தின் கீழிருந்து போர் செய்வதற்கு ஏற்றவற்றைச் செய்ய வேண்டும்.
* 887. கடல்செலும் பலவகைக் கலங்களு மியற்றுக.
* கடலில் செல்லக்கூடிய பலவகைக் கப்பல்களை உருவாக்க வேண்டும்.
* 888. விண்செலும் பலவகை விமானமு மியற்றுக.
* வானத்தில் செல்லக்கூடிய பலவகை விமானங்களை உருவாக்க வேண்டும்.
* 889. அவையாள் படைபடைக் கலமொடு வழங்குக.
* அவற்றிற்குத் தேவையான ஆட்கள், படைக்கருவிகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
* 890. வரிசைத் தலைவரா வுரியரை யுயர்த்துக.
* தகுதியானவரை படைத் தளபதியாக நியமிக்க வேண்டும்.
*
==== 90. படை யளித்தல்====
*
* 891. படைதன் னுயிரெனப் பார்த்துமன் னோம்புக
* அரசன் படைகளைத் தன்னுடைய உயிர் போலப் பாதுகாக்க வேண்டும்.
* 892. தினம்படை நோக்கித் திறன்மிகுந் திடச்செயல்.
* நாள்தோறும் படைகளைக் கவனித்து அவற்றின் திறமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
* 893. அவரவர் திறனறிந் தளிக்க வேதனம்.
* ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப சம்பளம் அளிக்க வேண்டும்.
* 894. படையுவப் புறச்சீர் பரிசிலும் வழங்குக.
* படைகள் மனம் மகிழும்படி பட்டங்கள், வெகுமதிகள் வழங்க வேண்டும்.
* 895. அமரிற் படுபவர் தமர்தமை யோம்புக.
* போரில் இறப்பவர்களின் உறவினர்களைப் பாதுகாக்க வேண்டும்.
* 896. படைகளின் கடன்தாம் பகைகொளல் கொலப்படல்;
* பகைவர்களை கொல்லுவதும் அவர்களால் கொல்லப்படுவதும் படைவீரர்களின் கடமை ஆகும்.
* 897. கூற்றையு மெதிர்த்திடு மாற்றலொடு செல்லல்;
* எமனையும் எதிர்த்துப் போரிடும் ஆற்றலோடு போருக்குச் செல்ல வேண்டும்.
* 898. இழைத்த திகவாஅ திறந்துபுகழ் கொள்ளல்;
* செய்த சபதம் நிறைவேற்றிப் புகழ் அடைய வேண்டும்.
* 899. தலைவரின் சொல்லெலா நிலையுறப் பணிதல்;
* அரசரின் சொற்களை நிறைவேற்ற வேண்டும்.
* 900. தலைவரைத் தமதுநற் றாயினும் பேணுதல்.
* அரசரைத் தமது தாயைவிடப் பாதுகாக்க வேண்டும்.
*
==== 91. நட்பு====
*
* 901. நட்பெனப் படுவது பெட்புறு கேண்மை.
* நட்பு என்பது அன்பு மிகுதியால் ஏற்படுவது ஆகும்.
* 902. அதுநன் மகாருளத் தலரு நன்மலர்.
* நட்பு சான்றோர்(noble)களின் உள்ளத்தில் மலரும் சிறந்த மலராகும்.
* 903. அதனிய லடுத்தவ ரகநக விரும்பல்;
* அவர்கள் அடுத்தவர் மனமும் மகழ்வதை விரும்புவர்.
* 904. இடித்துக் கூற லிடுக்கண் களைதல்.
* தவறு செய்யும்போது கண்டித்துக் கூறுவதும் துன்பம் வந்தபோது அதை நீக்குவதும் நட்பாகும்.
* 905. புணர்ச்சி பழகுத லுணர்ச்சியா னட்பாம்.
* அடிக்கடி சந்தித்தலும், பேசுதலும், ஒத்த உணர்ச்சியும் நட்பாகும்.
* 906. ஆய்ந்துநன் னட்பறிந் ததன்பின் கொள்ளுக.
* ஆராய்ந்து நல்ல நட்பு என்று அறிந்தபின் நட்புக் கொள்ள வேண்டும்.
* 907. ஆய்ந்தறி யாதுறல் சாந்துயர் தருமே.
* ஆராயாது கொண்ட நட்பு இறப்பையும் கொடுக்கும்.
* 908. மருவிப் பன்னா ளொருவா தாய்க.
* பழகிப் பல காலம் தொடர்ந்து ஆராய வேண்டும்.
* 909. வாய்க்கா லனைய மாந்தரை நட்டல்.(வாய்க்கால் மற்றவர்களுக்குப் பயன்படும். ஓர் இலக்கை நோக்கிக் கட்டுப்பாடுடன் ஓடும்)
* உதவும் குணமும் கட்டுப்பாடும் உடையவர்களை நண்பர்களாகக் கொள்ள வேண்டும்.
* 910. சூட்டுக் கோனிகர் துணைவரைக் கொள்க.(சூட்டுக் கோலினால் நமக்குத் துன்பம் ஏற்படும். ஆனால் அதனால் நன்மையே உண்டாகும். அது ஒரு வகை வைத்தியம்)
* நம்மைச் சிரமப்படுத்தியும் நமக்கு நன்மை செய்பவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
==== 92. பழமை====
-முதிர்ந்த நட்பு
*
* 911. பழமையெத னாலுங் கிழமைகுன் றாதது.
* நண்பரின் உரிமையை எதனாலும் குறைக்காத நட்பு பழமை எனப்படும்.
* 912. அஃதுயர் நட்பி னருங்கனி யாகும்.
* அது சிறந்த நட்பினால் உருவாவது ஆகும்.
* 913. பழமையி னின்பம் பயப்பதொன் றில்லை.
* பழைய நட்பை விட இன்பம் தருவது எதுவிமில்லை.
* 914. பழயவர் பிழைப்பினும் பழமைமா றற்க.
* பழைய நட்பினர் தவறுகள் செய்தாலும் அவரின் நட்பை விடக்கூடாது.
* 915. அழிவந்த செய்யினு மன்பறா ராகுக.
* பழைய நட்பினர் நமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தாலும் நாம் அன்பு மாறாமல் இருக்கவேண்டும்.
* 916. பழமையை மறப்போர் பாம்பினுங் கொடியர்.
* பழைய நட்பை மறப்பவர்கள் பாம்பைவிடக் கொடியவர்கள் ஆவர்.
* 917. அலக்கணுங் கேடு மழிவு முறுவர்.
* அவர்கள் துன்பமும் கேடும் அழிவும் அடைவர்.
* 918. பழமையை விடாரைப் பாரும் விடாது.
* பழைய நட்பைத் தொடர்பவரை இந்த உலகம் கைவிடாது.
* 919. பழையார்ப் பிரியாரை விழையாரும் விழைப.
* பழைய நட்பினரைப் பிரியாதவர்களைப் பகைவர்களும் விரும்புவர்.
* 920. பழமையைப் புதுமையிற் பார்ப்போர் பெரியர்.
* சான்றோர் பழைய நட்பினரைக் கண்டவுடன் விரும்புவர்.
*
==== 93. ஆகா நட்பு====
*
* 921. ஆகா நட்பிவ ணழிவுபழி தருவது.
* தீயவரது நட்பு அழிவையும் பழிச் சொல்லயும் ஏற்படுத்தும்.
* 922.அவைநனி தருபவ ரறிவில் பேதையர்;
* அவற்றை மிகுதியாகத் தரும் அறிவற்றவர்;
* 923. உறுவதே தூக்குஞ் சிறுமைமிகு மாந்தர்;
* தனக்கு வரும் ஆதாயத்தையே எண்ணும் இழிமக்கள்;
* 924. வினையொடு தஞ்சொல் வேறுபடு வஞ்சகர்;
* சொல்வது வேறாகவும் செய்வது வேறாகவும் உள்ள வஞ்சகர்;
* 925. ஒல்லுங் கரும முஞற்றாக் கள்ளர்;
* செய்ய இயலும் வினையைச் செய்யாத கள்ளர்;
* 926. மிகைபல விழைத்து நகைசெய்யும் பகைவர்;
* குற்றங்கள் பல செய்துவிட்டு வெளியில் மட்டும் சிரிக்கும் பகைவர்;
* 927. பக்கத் துறைந்து பதம்பார்த் திருப்பவர்;
* பக்கத்திலேயே இருந்து அழிப்பதற்குத் தக்க காலத்தை எதிபார்த்திருப்பவர்;
* 928. அட்டைபோ லொட்டிநின் றரியவை கவர்வோர்;
* அருகிலேயே இருந்து நமது அரிய பொருட்களைக் கவர்பவர்;
* 929. கள்ளுங் கவறுங் கைவிடாப் பதகர்;
* கள் அருந்துதலையும் சூதாடுவதையும் கைவிடாத கொடும்பாவி;
* 930. விடருந் தூர்த்தரு நடருமுள் ளிட்டோர்.
* காமுகன், கொடியவன், பொய்யன் ஆகிய இவ்வனைவரும் தீயவர் ஆவர்.
*
==== 94. இகல்====
-பகை
*
* 931. இகலெனப் படுவ துளமாறு பாடு.
* இகல் என்பது எனப்படுவது உள்ளத்தில் ஏற்படும் வேறுபாடு ஆகும்.
* 932. நகறரு நட்பிற் கிகன்மறு தலையாம்.
* மகிழ்ச்சி தரும் நட்பிற்கு எதிரானது இகல் ஆகும்.
* 933. அதனிய லடுத்தவ ரழமனம் விரும்பல்;
* அதனுடைய இயல்பு அடுத்தவர் மனம் வருந்துவதை விரும்புவது;
* 934. இடருற மொழித லிடுக்கண் புரிதல்.
* அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது, துன்பம் செய்வது ஆகியவை ஆகும்.
* 935. எதிருணர் வழுக்கா றிறுகுளத் தால்வ கடுத்தது.
* அது எப்பொழுதும் அரசாட்சிக்கு அடுத்த நிலையில் உள்ளது ஆகும்.
* 936. இகலுள மென்று மெரிந்து துன்புறும்.
* இகல் கொண்ட உள்ளம் என்றும் பொறாமைப்பட்டு வருந்தும்.
* 937. அன்போ தட்பமோ வின்போ வுறாது.
* அதில் அன்போ, கருணையோ, மகிழ்ச்சியோ இருக்காது.
* 938. இகல்பா ராட்டுவார் தகல்காண் பரிது;
* இகல் உடையவர் மேன்மை அடைவது அரிது.
* 939. அருமைச் சுற்றமு மாக்கமு மிழப்பர்;
* அவர்கள் சிறந்த சுற்றத்தையும் செல்வத்தையும் இழப்பர்.
* 940. கேடு மழிவுங் கிளைகளாக் கொள்வர்.
* அவர்கள் கேட்டினையும் அழிவையும் சுற்றமாகக் கொள்வர்.
*
==== 95. பகைமை====
*
* 941. பகைமை யென்ப திகலது முதிர்வு.
* பகைமை என்பது நீண்ட நாள் பகை ஆகும்.
* 942. பழமையின் மறுதலை பகைமையென் றறிக.
* பழமையின் எதிரானது பகைமை ஆகும்.
* 943. பகைமையுட் கொடியதுட் பகைமையென் றறைப.
* பகைமையுள் கொடியது உட்பகைமை ஆகும்.
* 944. அதனினுங் கொடியதிங் கரியவை கவர்வது.
* அதைவிடக் கொடியது அரிய பொருட்களைக் கவர்வது ஆகும்.
* 945. பகைமையை யுட்கொள றகைமையன் றென்ப.
* பகைமை கொள்வது பெருந்தன்மை ஆகாது.
* 946. அதைவிடா தவர்பா லியாதிவண் செய்வது?
* பகைமை கொண்டவர்களிடம் என்ன செய்யலாம்?
* 947. அன்புபா ராட்டி யவரை வளர்ப்பதோ?
* அன்பு செலுத்தி அவரை வளர்ப்பதா?
* 948. ஈகையென் றவர்கரத் தின்னுயிர் விடுப்பதோ?
* ஈகை என்று நினைத்து அவரால் உயிரை விடுவதா?
* 949. அறமென வெண்ணித் துறவினைக் கொள்வதோ?
* அறச் செயல் என்று நினைத்து துறவினை மேற்கொள்வதா?
* 950. தம்மா ருயிரைத் தாமழித் தொழிவதோ?
* நம்முடைய உயிரை நாமே அழித்துக் கொள்வதா?
*
==== 96. பகையடு நெறி====
-பகைவரை வெல்லக்கூடிய வழிகள்
*
* 951. பகைமையை விடாரைப் பகைத்தடல் வழக்கு.
* பகைமையை விடாதவரை எதிர்த்து வெல்லுதல் உலக இயல்பு ஆகும்.
* 952. பகையினை யடற்குப் பலபல நெறியுள.
* பகைவர்களை வெல்லுவதற்குப் பல வழிகள் உள்ளன.
* 953. எதற்கும் பொருளறி வின்றியமை யாதவை.
* அனைத்து வழிகளுக்கும் பொருளும் அறிவும் இன்றியமையாதவை.
* 954. ஒல்லு மிடத்தெலாம் வெல்லு மமர்நலம்.
* போர் செய்து வெல்ல முடியும் என்றால் போர் செய்வது சிறந்தது.
* 955. ஒல்லா விடத்தினி லுபாய முறைநலம்.
* போரில் வெல்ல முடியாவிட்டால் அரசருக்கு உரிய வழிமுறைகளைக் கடைபிடிப்பது சிறந்தது.
* 956. முறையின் சொல்லே கொடைபிரிப் பழிப்பே.
* அவ்வழிமுறைகள் இன்சொல் கூறல், ஈதல், வேறுபடுத்தல், அழித்தல் ஆகியவை.
* 957. முன்னைய விரண்டுந் தன்னினாம் வகைசெயல்.
* முதல் இரண்டு வகைகளை அரசன் தனியாகவே செய்யலாம்.
* 958. பின்னைய விரண்டும் பெருந்துணை கொடுசெயல்.
* அடுத்த இரண்டு வகைகளை அரசன் சிறந்த துணையுடன் செய்ய வேண்டும்.
* 959. உட்பகை யினரை யுட்பகைத் தடுக.
* உட்பகைவர்களை அவர்களுக்குள் பகை ஏற்படுத்தி அழிக்க வேண்டும்.
* 960. ஒட்டிமேய் வாரை யொட்டிமேய்ந் தடுக.
* உறவாடி அரிய பொருட்களைக் கவர்பவர்களை உறவாடி வெல்லவேண்டும்.
*
==== 97. அமர்வகை====
*
* 961. அமர்வகை நான்கென வறைகுவ ரவைதாம்.
* போர் நான்கு வகைப்படும் என்று புறப்பொருள் நூல்கள் கூறுகின்றன. அவை
* 962. வெட்சியே வஞ்சியே யுழிஞையே தும்பையே.
* வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவை.
* 963. வெட்சிநல் லுயிர்களை விரோதிபாற் கவர்தல்;
* வெட்சி என்பது பகைவர்களின் ஆநிரைகளைக் கவர்தல்;
* 964.அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
* அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
* 965. வஞ்சிமண் ணசைமன் னஞ்சவடல் குறித்தல்;
* வஞ்சி என்பது பகைவர் நாட்டை வெற்றி கொள்ளச் செல்லுதல்;
* 966. அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
* அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
* 967. உழிஞையரண் முற்றி யுரத்தினாற் கோடல்;
* உழிஞை என்பது பகைவர்களின் அரணைச் சுற்றி வளைத்தல்;
* 968. அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
* அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
* 969. தும்பைமுன் வந்தமன் மைந்துதலை யழித்தல்;
* தும்பை என்பது போருக்கு வந்த மன்னரின் வலிமையை நெருங்கி அழித்தல்;
* 970. அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
* அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
*
==== 98. அமர்த் திட்பம்====
*
* 971. அமர்த்திட்ப மொருவ ரகத்திட்ப மென்ப.
* அமர்த் திட்பம் என்பது ஒருவரின் மனவலிமை ஆகும்.
* 972. ஊறுறா தாற்றுக வூறுறிற் றளரேல்.
* இடையூறு வராமல் விலக்குதலும் இடையூறு ஏற்பட்டால் மனம் தளராமல் இருத்தலும் வேண்டும்.
* 973. அமர்க்கெழும் வரையய லறியா தமைக.
* போரைத்தொடங்கும் வரை அயலார் அறியாமல் வைத்திருக்க வேண்டும்.
* 974. சொல்லுத லெளிது செய்தலோ வரிது.
* சொல்லுதல் எளிது. செய்தல் அரிது.
* 975. அமரின்மாண் டாரை யனைவருந் துதிப்பர்.
* போரில் இறந்தவரை அனைவரும் வணங்குவர்.
* 976. திண்ணியா ரெண்ணிய வெண்ணியாங் கடைவர்.
* மனத்திட்பம் உடையவர் எண்ணிய பொருள்களை எண்ணியவாறு அடைவர்.
* 977. உளிபோல் வாருள ருருக்கண் டிகழேல்.(உளி சிறியது, ஆனாலும் மரத்தையே பிளந்துவிடும்.அதனால்)
* பகைவர் உருவத்தால் சிறியர் என்று இகழக்கூடாது.
* 978. துணிந்தநல் லமரினைத் தூங்கா தாற்றுக.
* ஆராய்ந்து துணிந்த போரினைக் காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும்.
* 979. பெரும்பயன் றருமமர் வருந்தியுஞ் செய்க.
* முடிவில் பெரும் பயன் தரும் போரை துன்பப்பட்டாவது செய்ய வேண்டும்.
* 980. அமர்த்திட்ப மிலாரை யாருமே வேண்டார்.
* போருக்கு அஞ்சுபவரை யாரும் விரும்ப மாட்டார்.
*
==== 99. வலி யறிதல்====
*
* 981. தனது படையையுந் தனத்தையு மறிக.
* தான் கருதிய போரைச் செய்தற்கு வேண்டிய படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
* 982. பகையது தனத்தையும் படையையு மறிக.
* பகைவரின் படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
* 983. தன்றுணைப் படையையுந் தனத்தையு மறிக.
* தனது துணைவரின் படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
* 984. பகைத்துணை தனத்தையும் படையையு மறிக.
* பகைவரது துணைவரின் படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
* 985. இருதிறப் படைகளி னேற்றத்தாழ் வறிக.
* இரு பக்கப்படைகளின் வலிமையைச் சீர் தூக்கி அவற்றின் ஏற்றத்தாழ்வு அறிய வேண்டும்.
* 986. இருதிறப் படைக்கல வேற்றத்தாழ் வறிக.
* இரு பக்கப்படைக்கலங்களின் வலிமையைச் சீர் தூக்கி அவற்றின் ஏற்றத்தாழ்வு அறிய வேண்டும்.
* 987. எவ்வமர் செயறனக் கெளிதென் றறிக.
* எந்த வகையான போர்முறை தனக்கு எளிது என்று அறிய வேண்டும்.
* 988. அதுகொளும் பொருள்படை யாதிய வறிக.
* அதற்குத் தேவையான பொருள், படை முதலியவற்றை அறிய வேண்டும்.
* 989. அயன்மன் வரினா டளிக்குமா றறிக.
*
* 990. அனையவு மறிந்துபி னமர்செயத் துணிக.
* எல்லாவற்றையும் அறிந்த பின்னர் போர் செய்யத் துணிய வேண்டும்.
*
==== 100. கால மறிதல்====
*
* 991. வலிமிகு கூகையைப் பகல்வெலுங் காகம்.
* காகம் தன்னினும் வலிமையான ஆந்தையைப் பகல் பொழுதில் வென்றுவிடும்.
* 992. ஆகுங் காலத் தரியவு மாகும்.
* தக்க காலத்தில் செய்வதற்கு அரிய வினைகளையும் செய்ய இயலும்.
* 993. ஆகாக் காலத் தெளியவு மாகா.
* பொருத்தமற்ற காலத்தில் எளிய செயல்களையும் செய்ய இயலாது.
* 994. தனக்காங் காலஞ் சார்ந்தமர் தொடங்குக.
* தனக்குப் பொருத்தமான காலத்தில் போரைத் தொடங்க வேண்டும்.
* 995. பகைகெடுங் காலம் பார்த்தமர் தொடங்குக.
* பகைவருக்குப் பொருத்தமற்ற காலத்தில் போரைத் தொடங்க வேண்டும்.
* 996. பருவம் வரும்வரை பகைவர்க் கடங்குக.
* பகைவரை அழிப்பதற்குத் தக்க காலம் வரும் வரை பகைவருக்கு அடங்கி நடக்க வேண்டும்.
* 997. பருவம் வரினுடன் பகைவரை யடக்குக.
* பகைவரை அழிப்பதற்குத் தக்க காலம் வந்த உடன் பகைவரை அழிக்க வேண்டும்.
* 998. கூம்பும் பொழுது கொக்கொத் தமர்க.
* அடங்கியிருக்கும் காலத்தில் கொக்கைப் போல் அடங்கியிருக்க வேண்டும்.
* 999. அடர்க்கும் பருவத் ததுபோற் குத்துக.
* பகைவரை அழிப்பதற்கு ஏற்ற காலம் வந்த உடன் கொக்கு விரைந்து கொத்துவதைப் போல் பகைவரை அழிக்க வேண்டும்.
* 1000. காலமறிந் தேசெயின் ஞாலமுட னெய்தும்.
* பொருத்தமான காலம் அறிந்து செய்தால் உலகத்தையே வெல்லலாம்.
*
==== 101. இட னறிதல் ====
 
* 1001. நெடும்புனலுண் முதலையா லடுங்களிறு படுமே.
* ஆழமான நீரினுள் முதலை யானையை வெல்லும்.
* 1002. முதனிலத் தெறும்பான் முதலையும் படுமே.
* கரை மீது முதலையை எறும்பும் வெல்லும்.
* 1003. கால்வ னெடுந்தேர் கடலோ டாதே.
* நிலத்தில் செல்லும் பெருந்தேர்கள் கடலின் மீது ஓடாது.
* 1004. நிலமிசை நாவாய் நின்றா டாதே.
* நீரில் செல்லும் கப்பல்கள் நிலத்தில் ஓடாது.
* 1005. முரண்சேர்ந் தவர்க்கு மரண்சேர்த னன்று.
* வலிமை உடைய அரசராக இருந்தாலும் பாதுகாப்பான இடத்தில் இருப்பது நன்மை அளிக்கும்.
* 1006. மேலிருந் தமர்செயல் வெல்வோர்க்கு நன்று.
* உயரமான இடத்தில் இருந்து போர் செய்தல் வெற்றி பெறுவோர்க்கு நல்லது.
* 1007. பெருமலை யரணுள பேடியும் வெல்லும்.
* பெரிய மலை மீதுள்ள கோட்டையினுள் வீரமற்றவனும் வெற்றி பெறுவான்.
* 1008. சிறுபகை தன்னிடத் துறுபகை யழியும்.
* சிறிய படையை உடைய அரசனும் தன்னுடைய இடத்தில் பெரிய படையை உடைய அரசனை அழிப்பான்.
* 1009. தெரியா விடத்துப் பெரியாரு மழிவர்.
* புதிய இடத்தில் பெரிய படை உடைய அரசனும் அழிவான்.
* 1010. இடங்கண் டல்லது தொடங்கிடே லமரே.
* போர் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்காமல் போரைத் தொடங்கக் கூடாது.
*
==== 102. அமர் துணிதல் ====
*
* 1011. ஒருமா னிடவுயிர்க் குலகெலா மாற்றா.
* ஒரு மனிதரின் உயிருக்கு உலகம் கூட நிகராகாது.
* 1012. பலமா னிடர்தாம் படுமமர் நன்றோ?
* பல மனிதர்கள் இறக்கும் போர் நல்லதுதானா?
* 1013. படுமா னிடரிற் பலருயி னன்றாம்.
* இறக்கும் மனிதர்களில் பலர் உயிர் பிழைத்தால் அது மிகவும் நல்லது ஆகும்.
* 1014. இவ்வொன் றலாலமர்க் கேதுபிறி தில்லை.
* இதைத் தவிர போரினால் ஏற்படக்கூடிய அழிவு வேறு எதுவும் இல்லை.
* 1015.ஆன்றோ ரிதனையே யமர்க்கேது வென்ப.
* அறிஞர்கள் இதனையே போர்க்குற்றம் என்பர்.
* 1016. அளிக்கப் படுவன வழிவன வெண்ணுக.
* போரினால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் இழப்புகளையும் ஆராய வேண்டும்.
* 1017. அளிக்கப் படுவன வதிகமேற் றுணிக.
* நன்மைகள் அதிகம் கிடைக்கும் எனில் துணிந்து போரை மேற்கொள்ள வேண்டும்.
* 1018. பொருள்படை யமர்த்திறன் பொழுதிட னெண்ணுக.
* தன்னுடைய பொருள், படை, போர்த் திறமை, தக்க காலம், இடம் ஆகியவற்றை ஆராய வேண்டும்.
* 1019. அவைபகை யிற்றனக் கதிகமேற் றுணிக.
* அவை பகை அரசனைவிடத் தனக்கு அதிகம் எனில் துணிந்து போரை மேற்கொள்ள வேண்டும்.
* 1020. அன்றே லுலகெலா மழியினும் விடுக.
* இல்லை எனில் எந்தக் காரணத்தினாலும் போரை மேற்கொள்ளக்கூடாது.
*
==== 103. தூது விடல்====
*
* 1021. தூதொரு வர்க்குச் சொலச்சொலுஞ் சொல்லே.
* தூது என்பது வேற்றரசருக்குச் சொல்லி அனுப்பும் செய்தி ஆகும்.
* 1022. எதிரியை யிணைத்தற் கெண்ணிய சொல்லே.
* எதிரியுடன் சமாதானமாகப் போவதற்காகச் சொல்லப்படும் செய்தி ஆகும்.
* 1023. அறவர சமர்முன ரதுவிடல் வழக்கே.
* அறவழி நடக்கும் அரசர் போருக்கு முன்பு தூதூதுவிடுதல் வழக்கம் ஆகும்.
* 1024. அமையு மிடத்தெலா மதுவிடல் கடனே.
* சாத்தியப்படும் இடத்தில் எல்லாம் தூதுவிடுதல் அரசருக்குக் கடன் ஆகும்.
* 1025. அறியாப் பகைக்கறி வளித்தலுங் கடனே.
* அறிவற்ற எதிரி அரசனுக்கு அறிவு கொடுப்பதும் அரசருக்குக் கடன் ஆகும்.
* 1026. தூதுரைப் பாரிய றூய்மையே வாய்மையே;
* தூது சொல்பவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் தூய ஒழுக்கம், உண்மை;
* 1027. அன்பே துணிவே யழகே யாற்றலே;
* அன்புடைமை, அஞ்சாமை, அழகிய உருவம், ஆற்றல்;
* 1028. நூலெலா மறிந்துள நுண்ணறி வுடைமையே;
* நீதி நூல்களைக் கற்றுப் பெற்ற நுட்பமான அறிவுடைமை;
* 1029. அமையமும் பிறவு மறிந்துசொலுந் திறனே;
* காலத்தையும் மற்றவற்றையும் அறிந்து தூது சொல்லும் திறமை;
* 1030. அமைச்சர சியலெலா மமைந்துள தன்மையே.
* அமைச்சரைப் போன்ற அறிவும் அரசரைப் போன்ற தைரியமும் கொண்டுள்ள தன்மை ஆகியவை ஆகும்.
*
==== 104. அமர் செய்தல்====
*
* 1031. தூதினுந் தெருளாத் தீயரை யடன்முறை.
* தூது அனுப்பியும் அறிவு பெறாத தீயவரை வெற்றி கொள்வது நியாயம் ஆகும்.
* 1032. அவரை யறவடா தவர்தீ தடறலை.
* அவரைக் கொல்லாது அவர் குற்றத்தை வெற்றி கொள்வது சிறப்பு.
* 1033. அரும்படை பெருக்கி யவரஞ் சச்செயல்.
* படைபலத்தைப் பெருக்கி அவரை பயப்படச் செய்தல்.
* 1034. அறியா நெறியா லவரைச் சிறைகொளல்.
* அவர் அறியாத வழிமுறைகளால் அவரைச் சிறைபடுத்துதல்.
* 1035. அவரய லமர்செயு மமையத் தரண்கொளல்.
* அவர் அண்டை அரசருடன் போர் செய்யும் சமயத்தில் அவரது கோட்டையைக் கைப்பற்றுதல்.
* 1036. அவரது பகைகொண் டவர்மற வலியடல்.
* அவரது பகை அரசரைக் கொண்டு அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
* 1037. அவரிற் சிலர்கொண் டவர்மற வலியடல்.
* அவருடன் இருப்பவர்களைக் கொண்டு அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
* 1038. அவரிற் சிலர்பிரித் தவர்மற வலியடல்.
* அவரிடம் இருந்து சிலரைப் பிரித்து அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
* 1039. அமையு மமர்செய் தவர்மற வலியடல்.
* தக்க சமயத்தில் போர் செய்து அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
* 1040. அளவுக் கதிக மடுவது தீது.
* அளவுக்கு அதிகமாகப் போர் செய்வது தீமையையே விளைவிக்கும்.
*
==== 105. வெற்றி யடைதல்====
*
* 1041. வெற்றிதன் பொருளை மீட்டர சாளுதல்.
* வெற்றி என்பது தன் பொருளை மீட்டு அரசாட்சி செய்வது ஆகும்.
* 1042. பகைமறம் விடவும் பணியவுஞ் செய்தல்.
* பகையரசர் தனது குற்றத்தை விட்டுப் பணியும்படி செய்தல் வேண்டும்.
* 1043. பகையவை செயும்வரை பக்கநாட் டமர்த்தல்.
* பகையரசர் அவற்றைச் செய்யும்வரை அவரைப் பக்கத்து நாட்டில் வைத்திருத்தல் வேண்டும்.
* 1044. பகைமற வலிகெடும் வகையெலாந் திருத்தல்.
* பகையரசரின் படைவலிமை குறையும் வகையில் அவரைத் திருத்துதல் வேண்டும்.
* 1045. அறஞ்செயு மாறதற் கதனா டீதல்.
* அறவழி நடக்குமாறு பகையரசருக்கு அவரது நாட்டைக் கொடுத்தல் வேண்டும்.
* 1046. வேரொடும் பகையடல் வெற்றியென் றறைப.
* வேரொடு பகையை அழித்தல் வெற்றி என்று கூறுவர்.
* 1047. அஃதரும் பெருமற மாமென் றறிக.
* அது சிறந்த, பெரிய வீரம் என்று அறிதல் வேண்டும்.
* 1048. அமர்பகை யெச்ச மனலதா மென்ப.
* போர்ப்பகை மிச்சம் என்பது தீ மிச்சம் போல வளர்ந்து தன்னை அழிக்கும்.
* 1049. அனலற வொழிப்பவ ரியாங்கணு முளரோ?
* தீயை முற்றிலும் ஒழிப்பவர்கள் இங்கு யாராவது இருக்கிறார்களா?
* 1050. அடாஅ வகையதை யடக்கிவைத் தாளுக.
* பகையரசர்கள் தீங்கு செய்யாத வகையில் அவர்களை அடக்கி ஆள வேண்டும்.
*
==== 106. அரசு கொள்ளல்====
*
* 1051. அரசினைத் தருதற் கருகரந் தணரே.
* வெற்றி பெற்ற அரசினைப் பகையரசருக்குத் தருவதற்குத் துறவியே தகுதியானவர்.
* 1052. அருளறி வமைந்துள வறவோ ரந்தணர்.
* கருணையும் அறிவும் நிறைந்து அறச்செயல்கள் புரிபவர்கள் அந்தணர்கள் ஆவர்.
* 1053. அவரிலை யெனிற்றரற் கருக ரரசரே.
* அவருக்கு அடுத்து அரசினைத் தருவதற்குத் தகுதியானவர் அரசர் ஆவார்.
* 1054. மறத்தினைச் சிதைக்குந் திறத்தின ரரசர்.
* அரசர் பகையரசரின் வலிமையை அழிக்கும் திறமை உடையவர் ஆவார்.
* 1055. அவரிலை யெனிற்றரற் கருகர் வணிகரே.
* அவருக்கு அடுத்து அரசினைத் தருவதற்குத் தகுதியானவர் வணிகர் ஆவார்.
* 1056. பொருள்வே ளாண்மை புரிபவர் வணிகர்.
* பொருள்களை விற்பவர் வணிகர் ஆவார்.
* 1057. அவரிலை யெனிற்றரற் கருகர் பிறரே.
* அவருக்கு அடுத்து அரசினைத் தருவதற்குத் தகுதியானவர் மற்றவர்கள் ஆவர்.
* 1058. பிறர்பிற தொழிலெலாம் பேணியிங் காள்பவர்.
* மற்றவர்கள் உழவுத் தொழில், கைத்தொழில் போன்றவற்றைச் செய்பவர்கள் ஆவர்.
* 1059. அனைவருந் தரக்கொள லதிகநன் றென்ப.
* அனைவரும் தந்து பெற்றுக் கொள்ளுதல் மிகவும் சிறந்ததாகும்.
* 1060. அறஞ்செயத் தானர சாதலும் வழக்கே.
* அற வழியில் ஆட்சி செய்வதற்காக வெற்றி பெற்ற அரசரே அரசாளுவதும் வழக்கமே.
*
==== 107. குடி புரத்தல்====
*
* 1061. குடியெலா மகவெனக் கொண்டுமன் னோம்புக.
* குடிமக்களைத் தன்னுடைய குழந்தைகளாகக் கருதி மன்னன் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
* 1062. அவர்க ளியாவரு மறிவுறச் செய்க;
* அவர்கள் அனைவரும் அறிவு பெறும்படி செய்ய வேண்டும்.
* 1063. அரியகைத் தொழில்சில வறிந்திடச் செய்க;
* சிறந்த கைத்தொழில் சிலவற்றை அறியும்படி செய்ய வேண்டும்.
* 1064. படைக்கலப் பயிற்சியிற் பாடுறச் செய்க.
* அவர்கள் சிறந்த முறையில் படைக்கலங்களைக் கையாளும்படி செய்ய வேண்டும்.
* 1065. பொருளைக் குடியின் பொதுவெனப் பெருக்குக.
* நாட்டின் செல்வத்தை எல்லோருக்கும் பொதுவாக வைத்து அதனைப் பெருக்க வேண்டும்.
* 1066. குடிபொருள் செய்தற் கடிமுதல் வழங்குக.
* அவர்கள் பொருள் சம்பாதிக்க மூலதனம் வழங்க வேண்டும்.
* 1067. குடியில் வாழ்ந்திடக் குறைந்தன வழங்குக.
* அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் குறைந்தபட்சமாவது வழங்க வேண்டும்.
* 1068. குடிசெயூ தியத்துட் குடியினர் வாழ்க.
* அவர்கள் தங்கள் வருமானத்திற்குள் வாழ வேண்டும்.
* 1069. பொன்றுநாண் மிஞ்சிய பொதுவா மன்கொளல்.
* உரிமையாளர் இறந்து, வெகு நாட்களான சொத்துக்களை அரசன் பொதுசொத்தாகக் கொள்ள வேண்டும்.
* 1070. குடிபசித் துழலன்மன் குற்றமென் றறிக.
* குடிமக்கள் பசியால் வருந்தும்படி விடுவது மன்னவனின் குற்றம் ஆகும்.
*
==== 108. இறை கொள்ளல்====
*
* 1071. இறைகுடி யூதியத் திறைகொளு மளவே.
* இறைப்பணம் குடிமக்களின் ஊதியத்தில் அரசன் பெற்றுக் கொள்ளும் அளவு ஆகும்.
* 1072. அஃதறு பங்கிலொன் றாமென மொழிப.
* அது ஊதியத்தில் ஆறில் ஒரு பங்கு என்று கூறுவர்.
* 1073. இறையிலா றொன்றனு ளிறையினர் வாழ்க.
* இறைப்பணத்தில் ஆறில் ஒரு பங்கு பணத்தில் அரசாங்க ஊழியர்கள் வாழ வேண்டும்.
* 1074. ஒன்றிறை கொளநடு வுதவிட வழங்குக.
* ஒரு பங்கை இறைப் பணம் வசூலிக்க, நீதி வழங்கக் கொடுக்க வேண்டும்.
* 1075. ஒன்றினாட் டகம்புற மோம்பலை நடாத்துக.
* ஒரு பங்கினால் நாட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பாதுகாக்க வேண்டும்.
* 1076. ஒன்றினூர் நிலநல முயர்ந்திடச் செய்க.
* ஒரு பங்கினால் ஊர் நலம் மற்றும் விவசாயத்தை மேம்படச் செய்ய வேண்டும்.
* 1077. ஒன்றினே கல்வியோ டுயரற மாற்றுக.
* ஒரு பங்கினால் கல்வி வழங்குதல் மற்றும் அறச் செயல்கள் செய்ய வேண்டும்.
* 1078. மிஞ்சுவ பொதுவொடு வேந்துவைத் தோம்புக.
* மீதம் உள்ளவற்றால் பொதுநலத்தையும் அரசர் நலத்தையும் பாதுகாக்க வேண்டும்.
* 1079. புவிநலங் குன்றிற் பொதுப்பொருள் வழங்குக.
* பஞ்சம் ஏற்பட்டால் மக்களுக்குத் தேவையானவற்றை வழங்க வேண்டும்.
* 1080. மறமன் னிலங்கொளத் திறஞ்செய வழங்குக.
* வீரமன்னன் நாடுகளைக் கைப்பற்ற, வலிமையைப் பெருக்க நிதி வழங்க வேண்டும்.
*
==== 109. முறை செய்தல்====
*
* 1081. குடியது குற்றமன் கடிவது முறையாம்.
* குடிகளின் குற்றத்தை மன்னன் களைவது நீதி ஆகும்.
* 1082. கடியு மியலதன் காரணம் போக்கல்;
* குற்றத்தை நீக்கும் முறையானது அதன் காரணத்தைப்(நோக்கம்) போக்குவது ஆகும்.
* 1083. காரணம் போம்வரை காப்பினுள் வைத்தல்.
* (நோக்கம்)காரணம் நீங்கும் வரை சிறையினுள் வைக்க வேண்டும்.
* 1084. எதற்குமோர் வகையறி விலாமையே காரணம்.
* அறிவில்லாமையே எல்லாவற்றிற்கும் காரணம் ஆகும்.
* 1085. செய்ததைச் செய்ய விடாமையே காப்பு.
* ஏற்கனவே செய்த குற்றத்தை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கே சிறை ஆகும்.
* 1086. இவையே யறமுறை நவையே பிறவெலாம்.
* இம்முறைகளே சிறந்த முறைகளாகும். மற்ற முறைகள் குற்றங்களாகும்.
* 1087. முறைகண் ணோடா துயிர்வௌவ லென்ப.
* மற்ற முறைகள் இரக்கம் இல்லாது உயிரைக் கவர்வது ஆகும்.
* 1088. அம்முறை யழிவுறு மரசுசெய் மறமுறை.
* அம்முறை அழியக் கூடிய அரசு செய்யும் தீங்கான முறை ஆகும்.
* 1089. களையறி யாமை நிலங்குடி யொக்கும்.
* நிலத்தில் களை விளைவது போல மக்களிடையே அறியாமை ஏற்படுகிறது.
* 1090. களையோ களையுடை நிலமோ களைவது.
* நாம் களையைத்தான் நீக்குகிறோம். நிலத்தை அழிப்பது இல்லை.
*
==== 110. அறம் புரிதல்====
*
* 1091. அறமன் னுயிர்த்துய ரறுக்கு நல்வினை.
* அறம் உலகத்து உயிர்களின் துன்பத்தை நீக்கக் கூடிய நற்செயல் ஆகும்.
* 1092. அவ்வினை யுயிர்தொறும் வெவ்வே றாகும்.
* நல் வினை என்பது ஒவ்வொரு உயிருக்கும் வேறுபடும்.
* 1093. அவையுடன் கண்டுநன் காற்றுதன் மன்கடன்.
* அவற்றைக் கண்டறிந்து நல்ல முறையில் செய்வது மன்னனின் கடமை ஆகும்.
* 1094. துயர்முத லுயிர்க்கெலாந் துப்புர விலாமை;
* உயிர்களின் தலையாய துன்பம் உணவு முதலியன இல்லாமை;
* 1095. அதனத னிடத்ததை யமர்த்திவை யாமை;
* அவற்றிற்குரிய இடத்தில் அவற்றை வைக்காமல் இருப்பது;
* 1096. ஆறறி வினர்க்குநல் லறிவில் லாமை.
* மனிதர்களுக்கு நல்லறிவு இல்லாமை -ஆகியவை ஆகும்.
* 1097. உயிரெலா மதனத னுணவுற வோம்புக.
* அரசன் எல்லா உயிர்களும் அதன் உணவைப் பெறுமாறு பாதுகாக்க வேண்டும்.
* 1098. அதனத னெல்லையு ளமர்த்திவைத் தாளுக.
* உயிர்களை அதன் எல்லை மீறாமல் வைத்து ஆட்சி செய்ய வேண்டும்.
* 1099. ஆறறி வினர்க்குநல் லறிவெலாம் வழங்குக.
* மனிதர்கள் நல்லறிவு பெறுமாறு செய்ய வேண்டும்.
* 1100. அறவிரி திருக்குற ளாதியா லறிக.
* அறத்தைப் பற்றி விரிவாக அறிய திருக்குறள் போன்ற நூல்களைக் கற்க வேண்டும்.
*
===அந்தணரியல்===
==== 111. அந்தண ரியல்பு====
*
* 1101. அந்தண ரறத்தோடு செந்தன்மை பூண்டவர்.
* அந்தணர் என்பவர் அறச்செயல்கள் செய்வதோடு கருணையும் நிரம்பியவர் ஆவார்.
* 1102. மாணவர் தம்மையே வளர்க்கு மியல்பினர்.
* அவர்கள் மாணவர்களை வளர்க்கும் இயல்பினை உடையவர்கள்.
* 1103.அடுத்தவர் தம்மையு மளிப்பவரில் வாழ்பவர்.
* இல்லறத்தார் மற்றவர்களையும் பாதுகாப்பர்.
* 1104. அரசர்நல் லுயிரெலா மளிக்குந் திறத்தினர்.
* அரசர் நல்ல உயிர்களைப் பாதுகாக்கும் திறமை உடையவர்.
* 1105. அனைத்துயிர் தம்மையு மளிப்பவ ரந்தணர்.
* எல்லா உயிர்களையும் பாதுகாப்பவர் அந்தணர்.
* 1106. முதன்முந் நிலையினர் முகைமலர் காயனர்.
* சிறுவர், இளைஞர், இல் வாழ்வினர் மூவரும் முறையே அரும்பு, மலர், காய் போன்றவர்கள்.
* 1107. அந்தணர் மெய்ந்நிலை யடைந்தவர் கனிவிதை.
* துறவி, ஞானி ஆகியோர் கனி, விதை போன்றவர்கள்.
* 1108. விதையே மரமிலை மென்முகை யாதியாம்.
* விதையே மரம், இலை, மெல்லிய அரும்பு போன்றவையாக மாறுகிறது.
* 1109. மெய்யே யுலகுயி ரைந்நிலை யினராம்.
* கடவுளே உலகமாகவும் உயிராகவும் ஐந்து நிலையினராகவும் உள்ளார்.
* 1110. முறைமுகை விதையா முதனிலை யுயிர்மெயாம்.
* அரும்பு விதையாகும் தன்மை உடையது போல முதல் நிலை உயிர் கடவுள் ஆகும் தன்மை உடையது.
*
==== 112. அந்தண ரொழுக்கம்====
*
* 1111. ஓதலி னந்தணர்க் கொழுக்கநன் றென்ப.
* மந்திரங்களை ஓதுவதைவிட துறவிகளுக்கு ஒழுக்கம் சிறந்தது ஆகும்.
* 1112. அந்தணர்க் கொழுக்க மனற்குச் சூடுபோன்ம்.
* அந்தணர்களுக்கு ஒழுக்கம் மனதிற்கு சூடு போல பிரிக்க இயலாதது.
* 1113. ஒழுக்கமு மறிவு முடனிகழ் தகைமைய.
* ஒழுக்கமும் அறிவும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் தன்மை உடையது.
* 1114. ஒன்றின் றெனின்மற் றதுவு மிலதாம்.
* ஒன்று இல்லை எனில் மற்றொன்றும் இருக்காது.
* 1115. ஞானச் சொல்லெலாங் கானற் சலமாம்.
* அவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் கானல் நீர் போன்று உண்மையற்றது.
* 1116. ஒழுக்க மறிதற் குரைகலின் றென்ப.
* ஒருவரின் ஒழுக்கத்தை அறிவதற்கு உரைகல் எதுவுமில்லை.
* 1117. பகுத்தறி வறநூ லுகுத்தவ ரேயவர்.
* நன்மை, தீமைகளைப் பகுத்து விளக்கும் அறநூல்களில் கூறியுள்ளபடி நடத்தல் வேண்டும்.
* 1118. ஒழுக்கமெவ் வுயிர்க்கு மூறுசெய் யாமை.
* ஒழுக்கம் என்பது எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமை.
* 1119. இயலு நன்றெலா மிடைவிடா தியற்றல்.
* செய்ய முடிந்த நன்மைகள் எல்லாம் தொடர்ந்து செய்தல்.
* 1120. இழுக்கமிவ் விரண்டிலொன் றியற்றத் தவறல்.
* இவ்விரண்டில் ஒன்று செய்யத் தவறினாலும் அது குற்றம் ஆகும்.
*
==== 113. கூடா வொழுக்கம்====
*
* 1121. சாமிக ளுட்பலர் காமிக ளாயினர்.
* தலைவர்களுல் பலர் காம இச்சை மிகுந்தவர்களாக உள்ளனர்.
* 1122.தேசிக ருட்பல ராசின ராயினர்.
* ஆசிரியர்களில் பலர் குற்றம் புரிபவர்களாக உள்ளனர்.
* 1123. மகந்துக ளுட்பல ரிகந்தன ரொழுக்கம்.
*
* 1124. தம்பிரான் மறமெலா மெம்பிரா னறிவர்.
* துறவிகளின் குற்றங்களை இறைவன் அறிவார்.
* 1125. போலியந் தணர்பலர் புரியா மறமிலை.
* பல போலித் துறவிகள் செய்யாத குற்றமில்லை.
* 1126. அரசரு ளுளர்மறங் கரவினி லாள்பவர்.
* அரசர்களுல் மறைவினில் குற்றம் செய்பவர்கள் உள்ளனர்.
* 1127. இல்வாழ் வினருளும் புல்வாழ் வினருளர்.
* இல்லறத்தாரிலும் இழிந்த வாழ்க்கை வாழ்பவர்கள் உள்ளனர்.
* 1128. மாணவ ருளுமுளர் கோணல் கொண்டவர்.
* மாணவர்களிலும் நேர்மையற்றவர்கள் உள்ளனர்.
* 1129. உலக மென்றுநல் லொழுக்கங் கொள்ளும்?
* உலகத்தினர் எப்பொழுது நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்?
* 1130. உள்ளும் புறமு மோரியல் பூணும்?
* உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவர்களாக மாறுவார்கள்?
*
==== 114. மானங் காத்தல்====
*
* 1131. மானமென் பதுதம் மதிப்பை விடாமை;
* மானம் என்பது தம்முடைய மதிப்பை விடாமல் இருப்பது;
* 1132. தத்தந் நிலைக்குத் தாழ்ந்தசெய் யாமை;
* தம்முடைய நிலைக்குக் கீழான செயல்களைச் செய்யாமல் இருப்பது;
* 1133. தத்த மியற்குத் தக்கவா றொழுகல்.
* தம்முடைய தன்மைக்குத் தக்கவாறு நடப்பது -ஆகியவை ஆகும்.
* 1134. மானொரு மயிரற மாயுமவ் விடத்தே.
* கவரிமான் ஒரு மயிர் உதிர்ந்தாலும் அந்த இடத்திலேயே உயிரைவிடும்.
* 1135. மனிதர்தம் மதிப்பற வாழ்ந்திடல் வியப்பே.
* மனிதர் தம் மதிப்பை இழந்த பின்னும் வாழ்வது வியப்புக்கு உரியது ஆகும்.
* 1136. மாணவ ரிழுக்கலின் மடித னன்றே.
* மாணவர்கள் குற்றம் செய்வதைவிட மடிதல் சிறந்தது.
* 1137. இல்லின ரிவறலி னிறத்த னன்றே.
* இல்லறத்தார் தானம் செய்யாமல் வாழ்வதைவிட இறத்தல் சிறந்தது.
* 1138. அரசறஞ் செயாமையி னழித னன்றே;
* அரசர் அறம் செய்யாது இருப்பதைவிட அழிவது சிறந்தது.
* 1139. தாழ்ந்தார்த் தெறுதலிற் சாத னன்றே.
* இழிந்தோர் கொல்வதைவிட சாதல் சிறந்தது.
* 1140. அந்தணர் வெகுளலி னழற்புக னன்றே.
* துறவிகள் கோபப்படுவதைவிட தீயில் புகுவது சிறந்தது.
*
==== 115. வெஃகாமை====
*
* 1141. வெஃகுதல் பிறர்பொருள் விரும்புங் குற்றம்.
* வெஃகுதல் என்பது பிறர் பொருளை விரும்புகின்ற குற்றம் ஆகும்.
* 1142. வெஃகலை மறத்தின் வித்தென மொழிப.
* எல்லா குற்றங்களுக்கும் பிறர் பொருளின் மீது ஏற்படும் விருப்பமே காரணம் ஆகும்.
* 1143. அதுதீ யவாவி னங்குர மாகும்;
* அது தீமையை ஏற்படுத்தும் விருப்பத்தின் ஆரம்பம் ஆகும்.
* 1144. காமமுங் களவுங் கலிதழை யிலைவிடும்;
* காமம், களவு போன்ற குற்றங்கள் பெருகும்;
* 1145. கொலையும் பொய்யுமாங் கொம்பொடு கிளைவிடும்;
* கொலை, பொய் போன்ற குற்றங்கள் வளரும்;
* 1146. அழிதகு மறங்களா மரும்பொடு மலர்விடும்;
* நம்மை அழிக்கக் கூடிய குற்றங்களாக மலரும்;
* 1147. பழியுங் கேடுமா மழியாக் காய்தரும்;
* பழிச் சொல், அழிவு போன்ற நிலையான துன்பங்களைத் தரும்;
* 1148. அழிபல நிரயக் கழிபெருங் கனிதரும்;
* மிக்க துயரத்தைத் தரக்கூடிய நரகத்தைத் தரும்;
* 1149. பொறிவழித் துன்பமாஞ் செறிபல சுவையாம்.
*
* 1150. ஆதலால் வெஃகலை யறவே விடுக.
* அதனால் பிறர் பொருளை விரும்புகின்ற குற்றத்தை அறவே விட வேண்டும்.
*
==== 116. வெகுளாமை====
*
* 1151. வெகுளி யகத்தெழும் வெங்கனற் சுடரே.
* கோபம் மனத்தினுள் உண்டாகும் மிக்க வெப்பமுடைய தீப்பொறியாகும்.
* 1152. இச்சுடர் தம்மையு மினத்தையு மழிக்கும்;
* இப்பொறி கோபம் கொண்டவருடன் அவருடைய இனத்தையும் சேர்த்து அழிக்கும்;
* 1153. நகையை யுவகையைத் தகையைக் கொல்லும்;
* சிரிப்பு, மகிழ்ச்சி, கருணை ஆகியவற்றைக் கொல்லும்;
* 1154.பகையைச் சொல்லரும் வகையில் வளர்க்கும்;
* பகையை மிக அதிகமாக வளர்க்கும்;
* 1155. மிகையுந் துயரு மிகுந்திடச் செய்யும்;
* குற்றமும் துன்பமும் அதிகரிக்கச் செய்யும்;
* 1156. வெகுளியை விடற்கவ் விருப்பமுட் கொள்ளுக;
* கோபத்தை விடுவதற்கு அந்த விருப்பத்தை மனதினில் கொள்ள வேண்டும்;
* 1157. வெகுளியுள் ளெழுங்கா னகுதலேபுரிக;
* கோபம் மனதினில் தோன்றும் போது புன்னகை செய்ய வேண்டும்;
* 1158. வெகுளியின் கேடெலாம் விரைந்துட னெண்ணுக;
* கோபத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளை எல்லாம் உடனே நினைத்துப் பார்க்க வேண்டும்;
* 1159. ஆடிகொண் டுடன்முக வழகினை நோக்குக.
* கோபம் கொண்ட முகத்தின் தோற்றத்தைக் கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும்.
* 1160. வெகுளியை யடுதலே தகுதியென் றடுக.
* கோபத்தைக் கொல்லுவதே நீதி என்பதால் அதைக் கொல்ல வேண்டும்.
*
==== 117. இன்னா செய்யாமை====
*
* 1161. மன்னுயி ருளமுடல் வருத்துவ வின்னா.
* இன்னா என்பது உயிர்களின் மனதையும் உடலையும் துன்புறுத்துவது ஆகும்.
* 1162. அவைதீச் செயலே யச்சொலே நினைப்பே.
* அவை தீமை தரும் செயல், சொல், நினைப்பு ஆகியவை ஆகும்.
* 1163. கொடியது செயலுட் கொலையென மொழிப.
*
* தீய செயல்களில் கொடியது கொலை செய்தல் ஆகும்.
* 1164. கொலையினு மிந்தியங் களைவது கொடியது.
* கொலையைவிடக் கொடியது ஐம்பொறிகளை நீக்குவது ஆகும்.
* 1165. அவைகெட வதைசெய லதனினுங் கொடியது.
* அதைவிடக் கொடியது ஐம்பொறிகளை வருத்துவது ஆகும்.
* 1166. கொடியவை சொல்லுட் குறளைபொய் நிந்தை.
* சொல்லில் கொடியது புறம் பேசுதல், பொய் பேசுதல், இகழ்தல் ஆகியவை ஆகும்.
* 1167. கொடியவை நினைப்புட் கொலைமுத னினைப்பு.
* எண்ணத்தில் கொடியது கொலை செய்ய நினைப்பது ஆகும்.
* 1168. இன்னா செய்தார்க் கின்னா வந்துறும்.
* துன்பம் செய்தவருக்குத் துன்பம் வரும்.
* 1169. ஒன்றொரு கோடியாய் பின்றைநாள் வந்துறும்.
* ஒரு துன்பம் ஒரு கோடி துன்பமாக பின்வரும் நாளில் வரும்.
* 1170. உற்றவுயி ரறிவள வுறுத்தும் நிற்கும்.
* துன்பம் உற்ற உயிரின் அளவுக்கு ஏற்ப துன்பம் அநுபவித்த பிறகே நிற்கும்.
*
==== 118. தவஞ் செய்தல்====
*
* 1171. தவமென் பதுதனைச் சார்ந்தநோய் பொறுத்தல்;
* தவம் என்பது தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தல்;
* 1172. உணர்வுடை யுயிர்கட் கூறுசெய் யாமை;
* மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை;
* 1173. கைந்நிலை விடாது மெய்ந்நிலை யுள்ளல்;
* இல்வாழ்க்கையிலிருந்து நீங்காது இறைவனை நினைத்தல்;
* 1174. மனத்தை யடக்கி வசஞ்செய முயறல்;
* மனத்தைக் கட்டுப்படுத்தி நமக்குக் கீழ்ப்படியச் செய்ய முயலுதல்;
* 1175. அதற்கின்றி யமையா வப்பியா சங்கள்.
* அதற்குப் பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை.
* 1176. தவஞ்செய லொன்றே தஞ்செய லென்ப.
* தவம் செய்தல் ஒன்றே நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும்.
* 1177. தவத்தி னளவே தனமுறு மென்ப.
* நாம் செய்யும் தவத்தின் அளவுக்கு ஏற்பவே செல்வம் வரும்.
* 1178. தவமுடித் தாரே சமனைக் கடப்பர்.
* தவம் செய்தவர்கள் எமனையும் வெல்லுவர்.
* 1179. தவமே யிகபரந் தருநன் முயற்சி.
* இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் இன்பம் அடைய தவமே சிறந்த முயற்சி ஆகும்.
* 1180. தவமே யியற்றுக தகவுற வேண்டுவர்.
* பெருமை அடைய விரும்புபவர் தவம் செய்தல் வேண்டும்.
*
==== 119. துற வடைதல்====
*
* 1181. துறவியா னெனதெனு முறவினை யொழித்தல்;
* துறவு என்பது 'யான்', 'எனது' என்ற பற்றினை விடுதல்;
* 1182. மன்னுயி ரெல்லாந் தன்னுயி ரென்றல்;
* எல்லா உயிர்களையும் தன்னுடைய உயிரைப் போல நினைத்தல்;
* 1183. தன்பொருண் மன்னுயிர் தமதென வாழல்.
* தன்னுடைய பொருள் மற்ற உயிர்களுக்குச் சொந்தமானது என்று வாழ்தல்;
* 1184. துறவென விவ்வகத் துறவையே மொழிப.
* இந்த அகத்துறவே உண்மையான துறவு ஆகும்.
* 1185. புறத்துற வெல்லாம் பொய்த்துற வாமே.
* புறத்துறவு(காவி ஆடை, சடை வளர்த்தல் போன்றவை) உண்மையான துறவு ஆகாது.
* 1186. துறவந் தணருக் குறவொழுக் கன்றோ?
* துறவு பூண்ட அறவோர்க்கு உறவு ஒழுக்கம் அல்லவா?
* 1187. தாய்தந் தையரைத் தள்ளலுந் தண்மையோ?
* பெற்றோரைப் பிரிவது மேன்மையான செயலா?
* 1188. தன்னுயிர்த் துணையைத் தவிர்தலுந் தண்மையோ?
* தன்னுயிர்த் துணையைத் தவிர்த்தல் மேன்மையான செயலா?
* 1189. தீயவா மிவையெலாம் பேயா டுறவே.
* தீமை பயக்கக் கூடிய இவை எல்லாம் வெறி பிடித்த விருப்பங்களாகும்.
* 1190. தமரையே யளியார் பிறவுயி ரளிப்பரோ?
* தம் உறவினரையே பாதுகாக்காதவர் பிற உயிர்களைப் பாதுகாப்பாரா?
*
==== 120. அருள் புரிதல்====
*
* 1191. அருள்பல வுயிர்க்கு மன்புபா ராட்டல்.
* அருள் என்பது எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் ஆகும்.
* 1192. உயிரெலா மெய்யது பயிரெனக் காண்க.
* எல்லா உயிர்களும் இறைவனது குழந்தைகள் என்று பார்க்க வேண்டும்.
* 1193. எவ்வகை யுயிர்க்கு மின்னா செயற்க.
* எந்த உயிருக்கும் துன்பம் செய்தல் கூடாது.
* 1194. அவற்றிற் காவன வனைத்து முதவுக.
* அவற்றிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
* 1195. தமையவை வருத்தினு மவைதமை யோம்புக.
* நமக்கு அவை துன்பம் கொடுத்தாலும் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
* 1196. அருளுடை யார்மெய்ப் பொருளடை வதுதிடம்.
* அன்புடையவர்கள் இறைவனை அடைவது உறுதி ஆகும்.
* 1197. அருள்பே ணாருள மருண்மிகு முண்மை.
* அன்பு செய்யாதவர்களின் உள்ளத்தில் தெளிவு இல்லாமல் குழப்பம் மிகும் என்பது உண்மை ஆகும்.
* 1198. சுயநயச் செயலரு ளினையற வோட்டும்.
* தன்னுடைய நலத்தைக் கருதிச் செய்யும் செயல்கள் அருளினை அறவே நீக்கும்.
* 1199. பரநயச் செயலருள் பரவிடச் செய்யும்.
* பிறருடைய நலத்தைக் கருதிச் செய்யும் செயல்கள் அருளினை பரவச் செய்யும்.
* 1200. அருள்விடா தவரைமெய்ப் பொருள்விடா துண்மை.
* அன்பு காட்டுபவரை இறைவன் கைவிடமாட்டான் என்பது உண்மை ஆகும்.
*
===மெய்யியல்===
*
==== 121. மெய் யுண்மை====
*
* 1201. உயர்கரி சுருதி யுத்தி யநுபவம்.
* சுருதி(வேதம்-sacred book), உத்தி(ஆராய்ச்சி-deliberation), அநுபவம்(experience) ஆகியவை உயர்ந்த சாட்சிகள் ஆகும்.
* 1202. தூயர் பகருரை சுருதி யென்ப.
* புனிதமானவர்கள் கூறிய உரைகள் சுருதி எனப்படும்.
* 1203. பலமதத் தூயரும் பகர்ந்துள ருண்மை.
* பல மதத்தைச் சேர்ந்த பெரியோரும் கூறியுள்ள உண்மை.
* 1204. ஏது சிலகொண் டோதுவ துத்தி.
* காரணங்கள் சிலவற்றைக் கொண்டு விளக்குவது உத்தி ஆகும்.
* 1205. ஆத னிலவ லழித லிவணுள;
* இவ்வுலகத்தில் உருவாதல், இருத்தல், அழிதல் ஆகியன உள்ளன.
* 1206. அவைசெயக் கர்த்தா வவசிய மென்க.
* அவற்றைச் செய்தற்குக் கடவுள் அவசியம்.
* 1207. அறிந்துள் ளுணர்தலை யநுபவ மென்ப.
* அநுபவம் என்பது இதனை அறிந்து உணர்வது ஆகும்.
* 1208. இடருறும் போழ்துமெய் யெண்ணுகின் றனர்பலர்;
* துன்பப்படும் போது மட்டும் பலர் கடவுளை எண்ணுகின்றனர்.
* 1209. பாவஞ் செயவுளம் பதைப்ப தநுபவம்;
* கடவுளை உணர்ந்தால் மனம் பாவம் செய்யப் பயப்படும்.
* 1210. அரசரு மாளப் படுவ தறிகிறோம்.
* அரசரும் கட்டுப்படுத்தப்படுவதைக் காண்கிறோம்.
*
==== 122. மெய்யின் அடக்கநிலை ====
*
* 1211. அடக்க நிலைமெய் யடங்கிய வறிவு.
* அடக்கநிலை கடவுள் புலப்படாத நிலையில் உள்ள அறிவு ஆகும்.
* 1212. அண்டப் பொருளெலா மணுக்களின் சேர்க்கை.
* அண்டப் பொருள்கள் எல்லாம் அணுக்களின் சேர்க்கை.
* 1213. வலியிலா தணுக்கண் மருவிநிற் கும்மோ?
* வலிமை இல்லாமல் அணுக்கள் சேர்ந்து இருக்குமா?
* 1214. அண்டஞ் சுற்றலு மதுகொண் டன்றோ?
* அண்டம் சுற்றுவதும் அந்த வலிமையினால் தானே?
* 1215. ஆதலா லெங்கணு மஃதமைந் துளதே.
* ஆதலால் அவ்வலிமை எல்லா இடத்திலும் பரவி உள்ளது.
* 1216. அகில நிகழுமா றாள்வ தறிவு.
* உலகம் இயங்குமாறு செய்வது அறிவு ஆகும்.
* 1217. அன்றே லொழுங்கா வவைகண நிகழுமோ?
* இல்லையெனில் அவை ஒவ்வொரு கணமும் ஒழுங்காக நிகழ முடியுமா?
* 1218. ஆதலா லெங்கணு மறிவமைந் துளதே.
* ஆதலால் அவ்வறிவு எல்லா இடத்திலும் அமைந்து உள்ளது.
* 1219. நிறைபொரு ளிரண்டு நிலவா வென்ப.
* இரண்டு பொருள் எல்லா இடத்தையும் நிறைத்தல் இயலாது.
* 1220. ஆதலால் வலியு மறிவு மொரேபொருள்.
* ஆதலால் வலிமையும் அறிவும் ஒரே பொருள் ஆகும்.
*
==== 123. மெய்யின் விளக்கநிலை====
*
* 1221. விளக்க நிலைமெய் விளங்கு மறிவு.
* விளக்க நிலை கடவுளைப் புரிந்து கொண்ட நிலையில் உள்ள அறிவு ஆகும்.
* 1222. அடக்கமெய் விறகு ளடங்கிய தீப்போன்ம்.
* விறகில் அடங்கிய தீ போன்றது அடக்கநிலை ஆகும்.
* 1223. விளக்கமெய் கடைய விறகெழுந் தீப்போன்ம்.
* விறகைக் கடைந்த உடன் வெளிப்படும் தீ போன்றது விளக்கநிலை ஆகும்.
* 1224. ஐயறி வுயிர்களின் மெய்யொளி யடங்கும்.
* விலங்குகளில் மெய்யொளி அடங்கி இருக்கும்.
* 1225. ஆறறி வினரு ளவ்வொளி விளங்கும்.
* மனிதர்களில் மெய்யொளி விளங்கி இருக்கும்.
* 1226. அவர்மறஞ் செயச்செய வதனொளி குன்றும்.
* அவர்கள் குற்றம் செய்யச் செய்ய மெய்யொளி குறையும்.
* 1227. அவரறஞ் செயச்செய வதனொளி பெருகும்.
* அவர்கள் அறச்செயல்கள் செய்யச் செய்ய மெய்யொளி அதிகரிக்கும்.
* 1228. அவரொழுக் கறிந்தபோழ் தஃதக விளக்காம்.
* அவர் ஒழுக்கதைப் பற்றி அறிந்திருப்பது (அவர் உள்ளத்தில் ஏற்றப்பட்ட விளக்காக)அவருக்கு மட்டும் வழிகாட்டும்.
* 1229. அவரொழுக் கடைந்தபோழ் ததுமலை விளக்காம்.
* அவர் ஒழுக்கதைக் கடைபிடிக்கும்போது அது (மலையில் ஏற்றப்பட்ட விளக்காக)உலகத்துக்கே வழிகாட்டும்.
* 1230. ஒழுக்கில்வாய் ஞானமஃ தொழிக்குங் காற்றாம்.
* ஒழுக்கம் இல்லாத ஞானம் அந்த விளக்கை அணைக்கும் காற்றாகும்.
*
==== 124. மெய் யுணர்தல்====
*
* 1231. ஒழுக்க முடையா ருணர்வர் மெய்யை.
* ஒழுக்கம் உடையவர்கள் கடவுளை உணர்வார்கள்.
* 1232. அறநூ லெண்ணில வறைந்துள வொழுக்கம்.
* எண்ணற்ற அற நூல்கள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியுள்ளன.
* 1233. அவற்றைவிட் டயலுற றவற்றைப் புரிதலாம்.
* அந்த நூல்களைப் படிக்காமல் மற்றவற்றைப் படிப்பது தவறு செய்வது ஆகும்.
* 1234. அடிவிட் டேணியி னந்தமே றுவரோ?
* ஏணியின் முதல் படியில் ஏறாமல் கடைசிப் படியில் ஏற இயலுமா?
* 1235. அறநூல் கற்றுநின் றான்மநூ லாய்க.
* அறநூல்களைக் கற்ற பிறகு ஆன்மநூல்களை ஆராய வேண்டும்.
* 1236. ஓருட லளவி லுறுமறி வான்மா.
* ஓர் உடலில் தங்கியிருக்கும் அறிவு ஆன்மா ஆகும்.
* 1237. அணையுள குளநீர்க் கான்மா விணையாம்.
* எல்லா இடத்திலும் தங்கியிருக்கும் அறிவு கடவுள் ஆகும்.
* (அணையைக் கடவுளுக்கும் அணைக்குள் உள்ள குளத்தை ஆன்மாவுக்கும் ஒப்பிடலாம்.)
* 1238. ஆன்மா மெய்யொன் றாணவம் வேற்றுமை.
* ஆன்மாவும் கடவுளும் ஒன்றுதான். ஆணவம் ஆன்மாவை இறைவனை அடையவிடாமல் தடுக்கும் மும்மலங்களுல் ஒன்று.
* 1239. அறஞ்சே ரொழுக்கா லாணவங் களைக.
* அறத்தின் பாற்பட்ட ஒழுக்கத்தினால் ஆணவத்தை நீக்க வேண்டும்.
* 1240. உண்மை மெய்யான்மா வுலகுமெய்த் தோற்றம்.
* உண்மை கடவுளின் ஆன்மா. உலகம் கடவுளின் தோற்றம்.
*
==== 125. மெய்ந்நிலை யடைதல்====
 
* 1241. உயிரியல் விடமெய் யியலுறு முடனே.
* உயிரின் மீதுள்ள பற்றை விட்டால் கடவுள் தன்மை உடனே ஏற்படும்.
* 1242. விடலே வீடது மெய்யறஞ் செயினாம்.
* மெய்யறம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும்.
* 1243. மெய்யற மாந்தர் மிகைவிட வுதவல்;
* மெய்யறம் என்பது மனிதர்கள் குற்றத்தைவிட உதவுவது;
* 1244. ஒழுக்க வுயிர்மெய் யுணர்ந்திட வுதவல்;
* ஒழுக்கம் என்பது உயிர்கள் கடவுளை உணர்ந்திட உதவுதல்;
* 1245. உலகி லுயிர்க ணிலவுற வுதவல்.
* உலகில் உயிர்கள் வாழ்வதற்கு உதவுதல் வேண்டும்.
* 1246. இவ்வற மரசர்க் கியற்றுத லெளிது.
* இந்த அறம் செய்வது அரசருக்கு எளிதான செயல் ஆகும்.
* 1247. அறிவ ரரச ராகுத லரிதோ?
* அறிவுடைய அரசர் ஆகுதல் சிரமமான செயலா?
* 1248. அரசரை யாள்வ தமைச்சறி வன்றோ?
* அரசரை வழிநடத்துவது அமைச்சரின் அறிவு அல்லவா?
* 1249. அறிந்தில் வாழ்ந்துல காண்டறஞ் செய்க.
* இறைவனை அறிந்து இல்வாழ்க்கை நடத்தி எல்லா இன்பங்களும் அநுபவித்து அறம் செய்தல் வேண்டும்.
* 1250. அருள்கொடு மெய்யற மாற்றிமெய் யடைக.
* அன்புடன் அறச் செயல்கள் செய்து இறைவனை அடைதல் வேண்டும்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
* <gallery>
* படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
* படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
* </gallery>
*
"https://ta.wikipedia.org/wiki/மெய்யறம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது