மறைமலை அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
மறைமலைஅடிகள், நாகையில் வெஸ்லியன் மிஷன் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
 
சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி [[1905]] இல் ''சைவ சித்தாந்த மகா சமாஜம்'' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1911-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். ''மணிமொழி நூல்நிலையம்'' என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
 
இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். [[மனோன்மணீயம்]] இயற்றிய [[சுந்தரனார்]], பெரும்புலவர் [[கதிரைவேலர்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்]], நாவலர் ச. [[சோமசுந்தர பாரதியார்]], [[தணிகைமணி வ.சு.செங்கல்வராயர்]], [[ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர்]], பேராசிரியர் ச. [[வையபுரியார்]], [[கோவை இராமலிங்கம்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[மீனாட்சி சுந்தரனார்]], பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன [[நாராயணசாமி]], 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட [[சோமசுந்தர நாயகர்]], என்று பலர் வாழ்ந்த காலம்.
"https://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது