மெய்யறம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
="மெய்யறம்"=
==முன்னுரை==
வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே "மெய்யறம்" ஆகும். அவர் விடுதலை பெற்ற பின்னர் அந்த நூல் வெளியிடப்பட்டது. வ.உ.சி. அந்த நூலைத் தஞ்சாவூரைச் சேர்ந்த இராவ் பகதூர் திரு. சீனிவாச பிள்ளை என்பவருக்கு சமர்ப்பித்துள்ளார். இவர் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் ஆவார்.
வ.உ.சி. காலத்திலேயே இந்நூல் மூன்று பதிப்புகள் கண்டுள்ளது. முதல் பதிப்பு சென்னையில் ப்ரோக்ரஸிவ் அச்சகத்தில் 1914- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு சென்னையில் கலாரத்னாகரா அச்சகத்தில் 1917- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. மூன்றாவது பதிப்பு அம்பாசமுத்திரத்தில் சண்முகவிலாஸ் அச்சகத்தில் 1930- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
வரி 8 ⟶ 9:
 
முதல் பகுதி மாணவர்களுக்கானது. அது 30 அதிகாரங்கள் கொண்டது. இந்தப் பகுதியில் வ.உ.சி. இளமைப் பருவமே கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் என்று குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் கற்க வேண்டியவறைக் கற்க வேண்டும், அறியக் கூடாதவற்றைத் தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கடமை, அடக்கம், கல்வி, உடல் நலம் இவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குகிறார். அவர் நமது உடல், ஆன்மா, மனம் இவை குறித்தும் கூறியுள்ளார். நமது மனமே நமது செயல்களுக்குக் காரணமாகும். நமது உடலை, அதாவது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது நமது மனமே ஆகும். ஆன்மா நமது மனத்தை வழி நடத்துகறது. நமது விதியைத் தீர்மானிப்பது கடவுளல்ல, நாம்தான். ஏனெனில் நமது செயல்களின் பயனே நமது விதியாகும் என்று உறுதிபடக் கூறுகிறார். நமது நன்மைக்கும் தீமைக்கும் நமது செயல்களே காரணம். அதனால் நல்விதியை விரும்பினால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
மாணவர்கள் இறைச்சி. மது, திருட்டு, புறம் கூறுதல், பொய், இரத்தல், பொறாமை,போதை பொருட்கள்., பயனில் சொல் போன்ற்வற்றைபோன்றவற்றை விலக்கும்படி வ.உ.சி. கூறுகிறார். மேலும் நட்பு, நன்றி மறவாமை, நடுநிலைமை, அடக்கம், ஒழுக்கம், முயற்சி, ஊக்கம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.
 
இரண்டாவது பகுதியில் 30 அதிகாரங்கள் உள்ளன. இதில் வ.உ.சி. இல்லறம் குறித்து விளக்குகிறார். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்து விளக்குகிறார். பின்னர் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திச் செல்வதற்கும் அறிவுரைகள் கூறுகிறார். மறதி, காலம் தாழ்த்துதல், மடி, பேதைமை, வெண்மை போன்றவற்றை நீக்க வேண்டும் என்றும் அதிக துயில், அச்சம், அதிக ஆசை, செருக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் வ.உ.சி. கூறுகிறார். பெற்றோர், குழந்தைகள், விருந்தினர், முன்னோர் ஆகியோரைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை என்று அறிவுறுத்துகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மெய்யறம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது