எபிரேய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி மாற்றல்: sk:Hebrejský kalendár
சிNo edit summary
வரிசை 1:
'''எபிரேய நாட்காட்டி''' (''Hebrew Calendar'') அல்லது '''யூத நாட்காட்டி''' [[யூத சமயம்|யூதர்]]களால் பயன்படுத்தப்பட்டபயன்படுத்தப்படும் ஓர் [[சூரியசந்திர நாட்காட்டி]] ஆகும். அண்மைய காலங்களில் பல [[கிருத்தவம்|கிருத்தவர்]]களும் பயன்படுத்தி வருகின்றனர். இன்று, இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும்,[[இசுரேல்|இசுரேலில்]] யூத விவசாயிகளால் விவசாய கட்டமைப்பில் பாவிக்கப்படுகிறது.
 
யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் [[சூரிய நாட்காட்டி]]யுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் [[இடைச்செருகல் மாதம்]](intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு [[அமாவாசை]]யன்றும் புதிய மாதம் துவங்கும்.
 
பன்னிரு வழமையான மாதங்கள்:''நிசன் ''(30 நாட்கள்), ''இயார்'' (29நாட்கள்), ''சிவன்'' (30 நாட்கள்), ''தம்முஸ்'' (29 நாட்கள்), ''அவ்'' (30 நாட்கள்), ''எலுல்'' (29 நாட்கள்), ''தீஸ்ரே'' (30 நாட்கள்), ''செஷ்வன்'' (29 அல்லது 30 நாட்கள்), ''கிஸ்லெவ்'' (29 அல்லது 30 நாட்கள்), ''தெவேத்'' (29 நாட்கள்), ''சேவத்'' (30 நாட்கள்) மற்றும் ''அதார்'' (29 நாட்கள்). நெட்டாண்டுகளில் இம்மாதம் ''அதார் II'' என வழங்கப்பட்டு இதற்கு முன்னர் (சேவத் மாதத்தின் பின்னர்) ''அதார் I'' (30 நாட்கள்) மாதம் சேர்க்கப்படுகிறது.
 
ஆண்டு நிசன் மாதத்தில் துவங்குகிறது. நிசன் 15 அன்று வரும் முழுநிலவு அன்று பார்லி அறுவடை பண்டிகை (நமது அறுவடை பண்டிகை பொங்கல் போன்று)ஆண்டு துவக்கத்தை வரவேற்கிறது. இந்த பண்டிகை எப்போதும் இளவேனில் காலத்தில் அமையுமாறு [[நெட்டாண்டு]]களில் இடைச்செருகல் மாதம் சேர்க்கப்படுகிறது.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எபிரேய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது