செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
:சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் [[அத்துவஞ்சேரல் இரும்பொறை]]க்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான [[மாந்தரன் சேரல் இரும்பொறை]] என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்<ref>[http://www.keralahistory.net/1b.htm History of Ancient Kerala]</ref>. இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
===பதிற்றுப்பத்து தரும் செய்திகள்===
;பெயர் விளக்கம்
:’செல்வக் கோ’ என்றும், பதிற்றுப்பத்து 63 ‘செல்வக் கடுங்கோ’ என்றும் பதிகம் 7 இவன் போற்றப்படுவது நண்பர்களுக்கு இவன் செல்வம் போல் விளங்கியதால் எனத் தெரிகிறது. சேர்ந்தோர் செல்வன் பதிற்றுப்பத்து 65
;தமிழ் மன்றம்
:போர் வெற்றியில் கிடைத்த இவனது செல்வமெல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் பயன்பட்டதனாலும் இவனைச் செல்வக்கோ என்றனர். கொண்டி மிகைப்பட தண்டமிழ் செறித்து பதிற்றுப்பத்து 63
;கபிலர் பாடியது ஏன்
:பாரி இறந்தான், காப்பாற்று என்று கபிலர் இவனைப் பாடவில்லையாம். கொடைப் புகழைக் கேள்வியுற்றுப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களைப் பாடினாராம். பதிற்றுப்பத்து 61
;மாவள்ளல்
*கொடுத்துவிட்டோமே எனக் கவலைப்படுவதோ, கொடுக்கிறோம் என மகிழ்வதோ இல்லாமல் வழங்கும் இவன் மாவள்ளல். ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான், ஈத்தொறும் மாவள்ளியன் பதிற்றுப்பத்து 61
*பந்தர், கொடுமணம் ஊர்வாழ் பாணர்களுக்குத் தெண்கடல் முத்தும் அணிகலன்களும் வழங்கினான் பதிற்றுப்பத்து 67
*இளம்பிள்ளைகளைப் பேணுவது போல இவன் முதியரைப் பேணினான். இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்தான் பதிற்றுப்பத்து 70
*நாட்டுமக்கள் நாமம் அறியா எம வாழ்க்கை, வடபுல வாழ்நர் போல் வாழ்ந்தனர். பதிற்றுப்பத்து 68
;போர்
*சோழ பாண்டியரை வென்றான். ஒரு முற்று இருவர் ஓட்டிய வெல் போரோயே பதிற்றுப்பத்து 63
*கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த … வயவர் பெருமான் பதிற்றுப்பத்து 70
*வில் வீரர்களுக்குக் கவசம் போன்றவன். வில்லோர் மெய்ம்மறை பதிற்றுப்பத்து 65
*விதியை வெல்லும் வீரன். தீமை நிகழப்போவதை உன்னமரம் அழுது காட்டினும் இவன் வெல்வான். ‘உன்னத்துப் பகைவன்’ - பதிற்றுப்பத்து 61
;பண்புகள்
*பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியாதவன் பதிற்றுப்பத்து 63 *வேள்வி முடித்த அந்தணர்க்கு அருங்கலம் வழங்கினான் பதிற்றுப்பத்து 64 (இப்படிச் சொல்பவர் அந்தணப் புலவர்)
*நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சாதவன், மகளிர்க்கு அல்லது மார்பு மலராதவன் பதிற்றுப்பத்து 63
;வழிபாடு
:அயிரை நெடுவரை போல வாழ்நாள் சிறக்கட்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துவதால் இவனது வழிபடு தெய்வம் அயிரைமலை ஐயப்பன் எனத் தெரிகிறது. பதிற்றுப்பத்து 70
 
==கோ ஆதன் செல்லிரும்பொறை==
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது