இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
பல சாதனங்களுக்கு லித்தியம் மின்கலம் (lithium cell) உதவுகிறது. இதில் நேர்மின் வாயாக லித்தியமும் மின்னாற் பகுபொருளாக லித்தியக் கூட்டுப் பொருளான லித்தியம் புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றது. இதன் எதிர் மின்வாயாக கார்பன் மோனோ புளூரைடு அல்லது அயோடைடு செயல்படுகின்றது. இது 1.5-3.௦ வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது. எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை. 40 டிகிரி செல்சியசுக்கு மேலும் - 20 டிகிரி செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன்படுத்த முடிவதில்லை.
 
=== உயவுப் பொருட்கள் ===
லித்தியம் ஹைட்ராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து சூடு படுத்த லித்தியம் சோப்பு கிடைக்கின்றது. இது எண்ணையின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்புப் பசை (Grease) தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது. ஸ்டேரேட்(stearate), பல்மிடேட் (Palmitate) போன்ற சில கரிம லித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மசகுப் பொருட்களாக விளங்குகின்றன.
 
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது