தேவிகாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 35:
*[[தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்]]
[[படிமம்:devikapuram_temple1.jpg|300px|center|none]]
==பட்டு நெசவு==
 
பார் போற்றும் பட்டு‍ நெசவுத் தொழிலில் தேவிகாபுரத்து‍ மக்களும் ஈடுபட்டிருந்தனர் என்பது‍ பெரியநாயகியம்மன்‌ கோயில் கல்வெட்டுகளில் இருந்து‍ தெரியவருகிறது. கோயில் கல்வெட்டு‍ எண் பட்டாடை நூலாயம் மற்றும் தறிவரி என்ற வரிகளைப்பற்றிய செய்தியும் உள்ளன. இதன் படி‍ ஊரில் இருந்த ஒவ்வொரு‍ தறியும் கோயிலுக்கு‍ ஆண்டுக்கு‍ ஒன்றரை பணம் வரியாகத் தரவேண்டும் என்று‍ குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து‍ இவ்வூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு‍ மேலாக பட்டு‍ நெசவு மற்றும் கைத்தறி தொழிலில் சிறந்து‍ விளங்கியது‍ என்பது‍ தெரியவருகிறது.
பட்டடை நூலாயம் என்பது‍ பட்டறை நூலாயம் என்றும் பொருள் கொள்ளலாம் என்று‍ கல்வெட்டு‍ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் படி‍ பட்டறை என்பது‍ ஒரு‍ குறிப்பிட்ட தொழில் ஒரே இடத்தில் அதிக அளவில் மேற்கொள்வது‍ என்று‍ பொருள்படும். எனவே, தேவிகாபுரத்தில் பட்டாடை உற்பத்தி அல்லது‍ நூல் உற்பத்தி பெருமளவில் நடந்து‍ வந்துள்ளது‍ என்று‍ தெரியவருகிறது.
போர்ச்சுகீசியர்களின் துறைமுகமான சென்னைக்கு‍ அடுத்துள்ள புலிகாட் (பழவேற்காடு) துறைமுகத்திற்குத்‍ தேவிகாபுரத்தில் இருந்து‍ நெய்யப்பட்ட துணிகள் ஏற்றுமதிக்கு‍ அனுப்பப்பட்டதாகவும் அங்கு‍ சாயப்பட்டறைகள் இருந்தாகவும் வரலாற்று‍ ஆவணங்களில் சில குறிப்புகள் உள்ளன.
கைக்கோளர் என்ற பிரிவினர் தறி நெய்துவந்தனர் என்பதும் கோயில் நிர்வாகத்தில் பங்கேற்றனர் என்பதும் ‍ தேவிகாபுரம் கல்வெட்டுகளில் மட்டுமல்லாமல் வேறு‍ பல ஊர்களில் உள்ள கல்வெட்டுகளிலும் குறி்ப்பிடப்பட்டுள்ளன. பட்டு‍ நெசவு இன்றும் இவ்வூரில் முக்கியத் தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்து‍ வருகிறது. ஒரு‍ காலத்தில் கைக்கோளர் என்ற செங்குந்தர் மட்டுமே செய்து‍ வந்த இத்தொழில் காலப்போக்கில் அனைத்து‍ பிரிவினரும் இத்தொழிலைக் கற்று‍ செய்து‍ வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு‍ முன்னர் இவ்வூரில் நூல்சேலைகள், காடா துணிகள், லுங்கிகள் போன்றவை நெய்து‍ அவற்றை நெய்தவர்களே பல ஊர்களுக்கு‍ சென்று‍ விற்று‍ வந்தனர். இதில் வருமானம் குறைவாகவும் உழைப்பு அதிகமாகவும் இருந்ததால் பின்னர் அனைவருமே பட்டு‍ நெசவுக்கு‍ மாறிவிட்டனர். பட்டு‍ நெசவு என்பது‍ குறைந்த மூலதனம் அதிக உழைப்பு அதிக லாபம்‌ என்ற வணிக அமைப்பு உடையது. பட்டு‍ நெசவுத் தொழிலில் நட்டம் என்பது‍ தறி நெய்பவர்களுக்கு‍ என்றுமே கிடையாது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவிகாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது