மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*நீண்ட காலத்துக்கு பிறகு இப்ப தான் விரிவாக்கம்* :)
→‎இந்து பண்டிகைகள்: *விரிவாக்கம்*
வரிசை 62:
 
ஜ்யேஷ்ட பூர்ணிமா அன்று இப்பண்டிகை கொடாடப்படுகிறது.. இந்நன்னாளில் மகளிர் தங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்தோங்க, உண்ணாநோன்பிருந்து ஆலமரத்தை வழிபடுவர். திருமணமான பெண்கள் அருகிலுள்ள மரத்தில் சிவப்புக் கயிற்றைக்
கட்டி வழிபடுவர். இது போன்ற வழிபாடுகள் குடும்ப ஒற்றுமையைப் போற்றுவனவாக அமைகின்றன.
 
==கோகுலாஷ்டமி==
 
கிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவர். சிரவண மாதத்தின் 8ஆம் நாளின் இரவில் கொண்டாடப் படும். பரணிலிருந்த வெண்ணையை கிருஷ்ணன் திருடித் தின்றதை நினைவு கூறுவர். பெரிய மட்பாண்டங்களில் பால், வெண்ணெய், தேன், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து தெருக்களில் உயரமான இடத்தில் தொங்க விடுவர். இளைஞர் இப்போட்டியில் கலந்து கொள்ள முன்வருவர். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று முக்கோண அமைப்பில், மேலே நிற்கும் மனிதர் பானையை உடைத்து வெற்றி பெறுவர். அமைப்பில் நின்றவர்க்கு பரிசுத் தொகை பிரித்தளிக்கப்படும். சுற்றி நிற்போர் கூச்சலிட்டு உற்சாகப்படுத்துவர்.
 
==மங்கள் கவுர்==
 
மராத்தி பிரமாணப் பெண்களுக்கு முதல் மங்கள கவுர் என்ற பண்டிகை பிரசித்தி பெற்றது. கணவனும் குடும்பத்தினரும் நலமுடன் வாழ சிவலிங்கத்திற்கு பூசை செய்து வழிபடுவர். திருமணமான பெண்கள் கூடியமர்ந்து அரட்டையடித்து, உணவுண்டு சொல் விளையாட்டுகளை
விளையாடுவர். .
 
==போகி==
 
மகர சங்கராந்திக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையே போகி. இந்நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பர்.
 
==மகர சங்கராந்தி==
 
சங்கரமன் என்றால் கதிரவன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு பெயர்வதாகும். இன்னாளில், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு கதிரவன் பெயர்கிறார். தமிழர் தைப் பொங்கல் கொண்டாடும் நாளிலீயீ இதுவும் கொண்டாடப் படுகிறது. சங்கராந்தி, நட்புப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இன்னாளில் பழைய நண்பர்களை சந்தித்தும், சச்சரவுகளை பேசித்தீர்த்து, புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வர். இன்னாளில் இனிப்புகளை வழங்கி இனிய சொற்களைப் பேசு என்று கூறிக்கொள்வர். தில்குல் என்ற இனிப்பு இன்றைய சிறப்பு உணவாகும். இது எள்ளுருண்டை போன்றிருக்கும். எள்ளையும் சர்க்கரைப் பாகையும் போன்று இணைபிரியாது நண்பர்களாய் இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது. மேலும் இந்த உணவு உடலுக்கு ஏற்றது. tஇந்த நாளில் பெண்கள், நிலவு படம் பொறித்த கருமை நிற ஆடையணிவர். திருமணமான பெண்கள் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவர்.
 
==மகா சிவராத்திரி==
 
பங்குனி மாதத்தில் 14ஆம் நாள், கிருஷ்ண பட்சத்தில் தொடங்கும் இந்துப் பண்டிகை இது. சிவனை நோக்கி நோன்பிருந்து வில்வ இலைகளால் அர்ச்சித்து தூங்காமல் வழிபடுவர். பாவ மன்னிப்பு வேண்டினால் நல்ல முறையில் வீடுபேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
 
==ஹோலி==
 
மராத்தியரின் நாட்காட்டியின் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் நிகழும் ஹோலிப் பண்டிகை சிறப்பான பண்டிகையாகும்.
வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் தீப் பந்தங்களைக் கொளுத்தி மகிழ்வர்.
இரண்டாம் நாளில் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்வர். இதன் மூலம்
இன்னொருவரின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வாழ்த்துவதாக அர்த்தம்.
 
==கிராம ஜாத்ரா==
 
மகாராட்டிரத்தின் பல கிராமங்களில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிராம விழாக்கள் நிகழும். கிராம தேவதைக்காக கொண்டாடப்படுகிறது. சமய ரீதியான பண்டிகைகள் தவிர்த்து, வண்டி ஓட்டும் போட்டி கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இக்காலத்தில் சிலர் அசைவ உணவுகளையும் தயாரித்து உண்கின்றனர். சில ஊர்களில் பெண்களுக்கு ஓய்வளித்து ஆண்கள் வீட்டுவேலைகளை செய்கின்றனர்.
 
==அஷாதி ஏகாதசி==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது