எம். எம். ஏ. சின்னப்பா தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''சாண்டோ சின்னப்பா தேவர்''' ({{lang-en|Sandow M. M. A. Chinnappa Thevar}}) என அழைக்கப்படும் '''எம். எம். ஏ. சின்னப்பா தேவர்''' 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்ப்படத்தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரை]] வைத்துநடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். [[எம். ஜி. ராமச்சந்திரன்]] இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் [[பாலிவுட்|இந்தித் திரையுலகில்]] நடிகர் [[ராஜேஷ் கன்னா]] என்பவரை வைத்து ’’ஆத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார்.
ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்[[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரையுலகில்]] தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.
 
== இளமை ==
சின்னப்பா தேவர் கோவையை[[கோயம்புத்தூர்|கோவை]]யை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28-ந்தேதி ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்' சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள்.
இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, [[எம்.ஏ.திருமுகம்]] என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர், அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி"யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.
வரிசை 12:
 
== திரைப்பட வாய்ப்பு ==
சின்னப்பா அங்கு உடற்பயிற்சிகள் செய்து கட்டுடல் பெற்றார் [[மல்யுத்தம்]], கத்திச்சண்டை, [[சிலம்பம்|கம்புச்சண்டை]] முதலியவற்றையும் கற்றார். இந்த காலத்தில் கோவையில் ’’[[ஜுபிடர் பிக்சர்ஸ்]]’’ என்ற நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தில் [[எம்.ஜி.ஆர்]], [[எம்.என்.நம்பியார்]], [[எஸ்.வி.சுப்பையா]] ஆகியோர் ஒப்பந்த நடிகர்களாக மாத ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், புராண கதாபாத்திரங்களில் நடிக்கவும் கட்டுடல் பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சின்னப்பா தேவருக்கு அந்த வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] [[பகுப்பு:நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._ஏ._சின்னப்பா_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது