பரங்கிப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Ganeshbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி 62.150.153.56ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 29:
 
[[en:Parangipettai]]
 
பரங்கிப்பேட்டை ஓர் அறிவியல் சுரங்கம்
Parangipettai (Porto-Novo)
Annamalai University Marine Biology Dept.
(Country Code: 0091 & STD Code: 04144)
 
பரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி. இங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறைப் பேராசிரியர் ஆர்.வி. சேஷய்யா தேர்ந்தெடுத்தார். பரங்கிப்பேட்டையின் கடற்கரை ஓரமாக உள்ள ஒர் பழைய விருந்தினர் மாளிகையைப் பரங்கிப்பேட்டையைச் சார்ந்த மறைந்த ஜனாப் முகமது அலி மரைக்காயர் அவர்கள் கடலூர் மாவட்ட நிர்வாகத்திலிருந்து நன்கொடையாகப் பெற்றுத் தந்தார்கள். முதல் பரிசோதனைக்கூடம் கட்டப்பட்டு மத்திய மாநில குழூத்தலைவர் Dr. C.D. தேஷ்முக் அவர்களால் அக்டோபர் 18, 1957-ல் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்த கடல் ஆய்வு நிலையத்தை ஒரு தனிதுறையாக அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தர் Dr. ராஜா சர் ஆ.யு. முத்தையா செட்டியார் அவர்களின் தலைமையில் திறந்து வைத்தார். இந்த கடல் ஆய்வு நிலையத்தை மத்திய மாநிலக் குழூ கடல் உயிரியல் உயராய்வமையமாக (Center of advanced study in Marine Biology) உயர்த்தி அக்டோபர் 1963-ல் அங்கீகரித்தது.
 
இந்த கடல்வாழ் உயிரியல் மையம் உலகப்புகழ் பெற்ற ஓரு ஆராய்ச்சி நிறுவனங்களை அடிபடையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அவற்றில் ஒன்று நோபல் பரிசு பெற்றவர்கள் பலரை உருவாக்கிய அமெரிக்காவின் 'உட்ஸ்ஹோல்' கடல் உயிரியல் நிலையம் மற்றும் பிரிட்டனைச் சார்ந்ததும் ' கடல் உயிரியல் நிலையங்களின் ராணி' என்று அழைக்கப்படுவதுமான 'நேபில்ஸ்' விலங்கியல் நிலையம். இதுவரை இந்த மையம் 1250 ஆராய்ச்சி கட்டுரைகளையும் 25 புத்தகங்களையும் மற்றும் 225 பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது. இங்கு படித்து பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் உலகின் பல பகுதிகளிளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு மையம் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், கென்யா, இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற பல வெளிநாடுகளோடு கூட்டாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. 20 பேராசிரியர்களும் 30 க்;கும்; மேற்பட்ட அலுவலர்களும் இந்த மையத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் இம்மையத்தில் கீழ்காணும் துறைகளில் பட்ட மேற்படிப்புகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதற்குரிய வாய்ப்புகளும், வசதிகளும் மாணவர்களுக்கு உள்ளன.
 
1.M.Sc Marine Biology & Oceanography (2 Years)
 
2. M.Sc Coastal Aqua-Culture (2 Year)
 
3. M.Phil. Marine Biology (1 Year)
 
4. Phd.D. Degree Research Programme.
 
இந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர். ஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது. பல இலட்சம் மதிப்புள்ள அரிய பரிசோதனை கருவிகளை குறிப்பாக நுண்ணூயிர்களின் பெயரைக்கண்டு பிடிக்கும் ஒர் கருவி இங்;கு இருக்கின்றது. ஆய்வுக்காக ஒர் கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.
 
தான் மேற்கொண்ட ஆய்வுகளின் பயணமாக மிகச்கிறந்த அறிய உண்மைகள் கண்டறியப்பட்டு பல புதிய கண்டுபிடிப்புகளை இம்மையம் உலகிற்கு அளித்துள்ளது. அழிந்து வரும் கடற்கரையின் பசுமையைக்காக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு, வெள்ளாற்றிலும், அரியாங்குப்பதிலும் சதுப்பு நிலக்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மீன்வலம் பெருகி மீனவர் பொருளாதாரம் வளர்ந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.
 
கடல் உயிரினங்களிலிருந்து
 
1. இரத்த உரைதலை தடுக்கும் 'ஹெப்பாரின்'
 
2. நல்ல பாம்பு விஷத்தைவிட பன்மடங்கு விஷம் வாய்ந்த நத்தை விஷம்.
 
3.மஞ்சள்காமாலை, எய்ட்ஸ் உள்ளிட்ட வைரஸ் நோய்களையும், கொசுக்களையும் கட்டுப்படுத்தும் மருந்து போன்ற பல மருந்துப்பொருக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 
பரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது. அன்றியும் இது ஒன்றே இந்தியாவின் கடல் உயிரியல் ஆய்வுக்கான ஒரே உயராய்வு மையம் என்பதில் நாம் பெருமைக் கொள்ளலாம். இந்த அறிவியல் மற்றும் அறிவுச் சுரங்கம் 50-ஆம் வருடத்தை நோக்கி வீறுநடை போடும் இவ்வேலையில் கடல்வாழ் உயிரினம் குறித்து மேலும் பல புதிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, அறிய பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தரும் நாள் வெகு தெரலைவில் இல்லை என்று கூறலாம்.
 
பரங்கிப்பேட்டை ஓர் அறிவியல் சுரங்கமாக விளங்குகிறது என்ற சிறப்புக் கட்டுரையை எழூதியவர்:
 
டாக்டர் க.கதிரேசன்,
இணை பேராசிரியர்,
கடல்வாழ் உயிரியல் உயர் ஆய்வு மையம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பரங்கிப்பேட்டை -608502
 
மெரின் பயாலேஜி அருங்காட்சியகம், பரங்கிப்பேட்டை
 
அருங்காட்சியகம் : உயிரியல்
உருவாக்கப்பட்ட வருடம் : 1958
பின் கோடு : 608502
தொலைபேசி : (04144) 243223
பேக்ஸ் : (04144) 243555
பார்வை நேரம் : பல்கலைக்கழக நேரம்
விலாசம் : கடல்வாழ் உயிரியல் உயர் ஆய்வு மையம்
 
பார்வைக்கு உள்ளவை : கடற்உயிரினம்.
 
 
Thanks to www.parangipettai.com
"https://ta.wikipedia.org/wiki/பரங்கிப்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது