"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
மொஸ்கோவின் டிமித்ரி டொன்ஸ்கோயினால் வழிநடத்தப்பட்டதும், ரசிய பழமைவாத திருச்சபையினால் உதவி வழங்கப்பட்டதுமான ரசியப் பகுதிகளின் ஐக்கிய இராணுவம், 1380இல் நடைபெற்ற குலிகோவோ போரில் மொங்கோலிய-தாத்தார்களைத் தோற்கடித்து சாதனை படைத்தது. சிறிது சிறிதாக அருகிலிருந்த பகுதிகளும் மொஸ்கோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள் மொஸ்கோவின் முன்னைய எதிரிகளான ட்வெர் மற்றும் நோவ்கோகொரட் போன்றனவும் அடங்கும்.
 
மூன்றாம் இவான்(''தி கிரேட்'') இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது "முழு ரசியாவினதும் பெரும் டியூக்" பட்டத்தைப் பெற்றவனாவான்.<ref>{{cite web|author=May, T.|title=Khanate of the Golden Horde|url=http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archiveurl=http://web.archive.org/web/20080607055652/http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archivedate=7 June 2008|accessdate=27 December 2007}}</ref> 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு ரோமப் பேரரசின்]] ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான்.
 
===ரசியாவில் சார் ஆட்சி===
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223701" இருந்து மீள்விக்கப்பட்டது