"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
மூன்றாம் ரோமச் சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், பெரும் டியூக்கான 4ம் இவான், ("மிகச்சிறந்த"<ref>Frank D. McConnell. [http://books.google.com/books?id=rqhZAAAAMAAJ Storytelling and Mythmaking: Images from Film and Literature.] [[Oxford University Press]], 1979. ISBN 0-19-502572-5; p. 78: "But Ivan IV, Ivan the Terrible, or as the Russian has it, ''Ivan Groznyi'', "Ivan the Magnificent" or "Ivan the Awesome," is precisely a man who has become a legend"</ref>) 1547ல், ரசியாவின் முதல் சார் ("சீசர்") ஆக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டான். சார் மன்னன் ஒரு புதிய சட்டத் தொகுப்பை (1550ன் சுடெப்னிக்) வெளியிட்டான். இதன் மூலம் முதலாவது ரசிய மானியமுறை அமைப்பு (செம்ஸ்கி சொபோர்) உருவாக்கப்பட்டதோடு கிராமியப் பகுதிகளுக்கு உள்ளூர் சுயாட்சி அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|pages=562–604|volume=6|isbn=5-17-002142-9}}</ref><ref>{{Cite book|author=Skrynnikov, R.|title=Ivan the Terrible|publisher=Academic Intl Pr|year=1981|page=219|isbn=0-87569-039-4}}</ref>
 
இவனது நீண்ட ஆட்சிக்காலத்தின்போது, மூன்று தாத்தார் கானேட்டுகளான (கோல்டன் ஹோர்டின் சிதறிய பகுதிகள்), வொல்கா நதிக்கருகில் இருந்த கசான் மற்றும் அஸ்ட்ராகான் என்பவற்றையும், தென்மேற்கு சைபீரியாவிலிருந்த சைபீரியன் கானேட்டையும் இணைத்த பயங்கர இவான், ஏற்கனவே பெரிதாக இருந்த ரசியப் பகுதியை கிட்டத்தட்ட இருமடங்காக்கினான். இதனால், 16ம் நூற்றாண்டின் முடிவில் ரசியாவை பல்லின, பல்சமய மற்றும் [[ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்|கண்டம் கடந்த]] ஒரு நாடாக்கினான்.
 
எவ்வாறாயினும், பால்டிக் கரையைக் கைப்பற்றுவதற்கும், கடல் வணிகம் மேற்கொள்வதற்கும், போலந்து, லிதுவானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நீண்ட, தோல்விகரமான லிவோனியப் போரின் காரணமாக சார் ஆட்சி வலுவிழந்தது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=6|pages=751–908|isbn=5-17-002142-9}}</ref> இதேவேளை, கோல்டன் ஹோர்டின் எச்சமான கிரிமியன் கானேட்டின் தாத்தார்கள், தென்ரசியாவில் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களை மேற்கொண்டனர்.<ref>{{PDFlink|[http://www.econ.hit-u.ac.jp/~areastd/mediterranean/mw/pdf/18/10.pdf The Crimean Tatars and their Russian-Captive Slaves]|355&nbsp;KB}}. Eizo Matsuki, Mediterranean Studies Group at Hitotsubashi University.</ref> 1571ல், வொல்கா கானேட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கிரிமியர்களும் அவர்களது [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமான்]] கூட்டணியினரும் மத்திய ரசியாவை ஆக்கிரமித்து மொஸ்கோவின் பகுதிகளை எரியூட்டினர்.<ref>{{cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=6|pages=751–809|isbn=5-17-002142-9}}</ref> ஆனாலும்,அடுத்த ஆண்டே மொலோடி போரில், இப்பாரிய ராணுவம் ரசியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ரசியாவில் ஒட்டோமன்-கிரிமியன் பரவலை தடுத்துக்கொண்டனர். கிரேட் அபாடிஸ் லைன் போன்ற பாரிய கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டு எதிரிப் படையெடுப்புக்கான பகுதிகள் குறுக்கப்பட்டன. ஆயினும், 17ம் நூற்றாண்டு வரையில் கிரிமியர்களின் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.
 
[[File:Minin&Pogjarsky 2.jpg|upright|thumb|மொஸ்கோவிலுள்ள, மினின் மற்றும் பொசார்க்கி ஆகியோருக்கான நினைவுச்சின்னம்]]
இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601-03 பஞ்சம்<ref>{{Cite book|author=Borisenkov E, Pasetski V.|title=The thousand-year annals of the extreme meteorological phenomena|isbn=5-244-00212-0|page=190}}</ref> உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=7|pages=461–568|isbn=5-17-002142-9}}</ref> போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது.
 
17ம் நூற்றாண்டில் கொசக்குகளின் காலத்தில் ரசியா தனது நிலப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கத் தொடங்கியது. கொசக்குகள் என்போர், கொள்ளையர் மற்றும் புதுநில ஏகுனர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமூகங்கள் ஆவர். 1648ல், கெமெல்நைட்ஸ்கி கிளர்ச்சியின்போது போலந்து-லிதுவானியாவுக்கு எதிராக, [[உக்ரேன்|உக்ரேனின்]] விவசாயிகள் சபோரோசியன் கொசக்குகளில் இணைந்து கொண்டனர். இதற்குக் காரணம், போலிய ஆட்சியின்கீழ் சமூக, மத அடக்குமுறைகளுக்கு உள்ளானமையேயகும்.1654ல் உக்ரேனிய தலைவரான போடான் கெமெல்நைட்ஸ்கி, உக்ரேன் ரசிய சார் மன்னரான முதலாம் அலெக்சியின் பாதுகாப்பில் இருப்பதற்கு சம்மதித்தார். அலெக்சி இதற்கு சம்மதித்ததால், இன்னொரு ரசிய-போலிய யுத்தம் (1654-1667) ஏற்பட்டது. இறுதியில், நீப்பர் நதியை எல்லையாகக் கொண்டு உக்ரேன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப்பகுதி (அல்லது வலது கரை) போலிய கட்டுப்பாட்டிலும், கிழக்குப்பகுதி (அல்லது இடதுகரை மற்றும் கீவ்) ரசிய கட்டுப்பாட்டிலும் இருந்தன. பின்பு, 1670-71ல் ஸ்டென்கா ரசினால் வழிநடத்தப்பட்ட டொன் கொசக்குகள் வொல்கா பகுதியில் பாரிய கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். ஆயினும் சாரின் படைகள் கலகத்தை வெற்றிகரமாக அடக்கின.
 
கிழக்குப் பகுதியில், பெரும்பாலும் கொசக்குகளால், சைபீரியாவின் பல பகுதிகளில் விரைவான ரசிய கண்டுபிடிப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும், பெறுமதிமிக்க, விலங்குகளின் தோல் மற்றும் தந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டன. ரசிய கண்டுபிடிப்பாளர்கள் சைபீரிய நதித் தடங்கள் வழியே மேலும் கிழக்கு நோக்கி பயணித்தனர். 17ம் நூற்றாண்டளவில் கிழக்கு சைபீரியாவின், சூச்சி தீபகற்பம், அமுர் நதிக்கரை, மற்றும் பசுபிக் கரையோரங்களில் ரசியக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1648ல், ஆசியாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான பேரிங்[[பெரிங் நீரிணை]], ஃபெடோட் போபோவ் மற்றும் செம்யோன் டெஸ்ன்யோவ் ஆகியோரால் முதன்முதலில் கடக்கப்பட்டது.
 
===ரசியப் பேரரசு===
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223705" இருந்து மீள்விக்கப்பட்டது