"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31,602 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
பெப்ரவரி புரட்சி காரணமாக இரண்டாம் நிக்கலஸ் பதவி துறந்தான். ரசிய சிவில் போரின்போது, இவனும் இவனது குடும்பமும் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்பட்டனர். முடியாட்சி, பலவீனமான, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்ட தற்காலிக அரசாங்கத்தால் பிரதியிடப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் மாற்று சோசலிச ஆட்சி இடம்பெற்றது. இதன் அதிகாரம் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சபையிடம் இருந்தது. இச்சபை சோவியத் எனப்பட்டது. புதிய அதிகார சபைகளின் ஆட்சி நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து, போல்செவிக் தலைவர் [[விளாடிமிர் லெனின்|விளாடிமிர் லெனினால்]] நடத்தப்பட்ட [[அக்டோபர் புரட்சி]]யின் மூலம், இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடு உருவாகியது.
 
===சோவியத் ரசியா===
 
[[File:Russia-2000-stamp-Tatlin Tower and Worker and Kolkhoz Woman by Vera Mukhina.jpg|thumb|முன் சோவியத் யுகத்தின் குறியீடு:டட்லினின் கோபுரம் திட்டம் மற்றும் ''வேலையாளும் கோல்கோஸ் பெண்ணும்'' செதுக்கற் சிற்பம்.]]
 
அக்டோபர் புரட்சியை அடுத்து கொம்யூனிச எதிர்ப்பு வெள்ளை இயக்கத்துக்கும், [[செஞ்சேனை]]யுடனான புதிய சோவியத் ஆட்சிக்குமிடையில் சிவில் போர் ஒன்று தொடங்கியது. பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் மூலம், ரசியா, முதலாம் உலகப்போரில் [[மைய சக்திகள்|மைய சக்திகளை]] எதிர்த்த அதன் உக்ரேனிய, போலிய, பால்டிக் மற்றும் ஃபின்னியப் பகுதிகளை இழந்தது. கொம்யூனிச எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாக, நேச நாடுகள் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இதேவேளையில், போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கமும் மாறிமாறி நாடுகடத்தல்களையும் மரண தண்டனைகளையும் மேற்கொண்டன. இச் செயற்பாடுகள் முறையே செம் பயங்கரம் மற்றும் வெண் பயங்கரம் என அழைக்கப்பட்டன. சிவில் போரின் முடிவில், ரசியப் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் மிகவும் பாதிப்படைந்தன. மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாயினர்.<ref>[http://books.google.com/books?id=uUsLAAAAIAAJ&pg=PA3 Transactions of the American Philosophical Society]. James E. Hassell (1991), p. 3. ISBN 0-87169-817-X</ref> மேலும், 1921ன் பொவொல்ஸ்யே பஞ்சத்தால் 5&nbsp;மில்லியன் பேர் இறந்தனர்.<ref>[http://www.icrc.org/eng/resources/documents/misc/5rfhjy.htm Famine in Russia: the hidden horrors of 1921], International Committee of the Red Cross</ref>
 
டிசம்பர் 30, 1922ல், ரசிய சோவியத் கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு (அந்த நேரத்தில் ''ரசிய சோசலிச கூட்டாட்சி சோவியத் குடியரசு'' என அழைக்கப்பட்டது), உக்ரேனிய, பெலாரசிய மற்றும் ட்ரான்ஸ்காக்கேசிய சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்]] அல்லது சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிக் கொண்டன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கிய 15 குடியரசுகளில், ரசிய சோவியத் சோசலிசக் கூட்டுக் குடியரசே பரப்பளவில் மிகவும் பெரியதாகும். மேலும், இது சோவியத் ஒன்றியத்தின் மொத்த சனத்தொகையின் அரைவாசியிலும் மேலதிகமான சனத்தொகையையும் கொண்டிருந்தது. இதுவே 69-வருடகால ஒன்றிய வரலாற்றில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது.
 
1924ல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து, ட்ரொய்க்கா எனப்பட்ட குழுவொன்று சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிய அமர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், கொமியூனிசக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளரான [[ஜோசப் ஸ்டாலின்]], அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டார். 1929ல், உலகப் புரட்சியின் முக்கிய ஆதரவாளரான, [[லியோன் ட்ரொட்ஸ்கி]] சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஸ்டாலினின் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. [[பெரும் துப்புரவாக்கம்|பெரும் துப்பரவாக்கத்தின்]]போது, போல்செவிக் கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் உச்சநிலையை அடைந்தது. 1937-38 வரையான இந்த அடக்குமுறை வாய்ந்த காலகட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலாத்கார ஆட்சி மாற்றத்துக்கு திட்டம் தீட்டிய இராணுவத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.<ref>Abbott Gleason (2009). ''[http://books.google.com/books?id=JyN0hlKcfTcC&pg=PA373 A Companion to Russian History]''. Wiley-Blackwell. p. 373. ISBN 1-4051-3560-3</ref>
 
[[File:RIAN archive 93172 Defenders of Leningrad.jpg|thumb|left|[[லெனின்கிராட் முற்றுகை|லெனின்கிராட்டின் பாதுகாவலர்கள்]]]]
 
ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் [[திட்டமிட்ட பொருளாதாரம்]], பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் [[சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம்|விவசாயக் கூட்டுப் பண்ணைகள்]] என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.<ref name="Getty">Getty, Rittersporn, Zemskov. Victims of the Soviet Penal System in the Pre-War Years: A First Approach on the Basis of Archival Evidence. The American Historical Review, Vol. 98, No. 4 (Oct. 1993), pp. 1017–49.</ref> இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.<ref name="Getty" /> கடுமையான சட்டங்கள் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932-33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.<ref>[[R.W. Davies]], [[S.G. Wheatcroft]] (2004). ''The Years of Hunger: Soviet Agriculture, 1931–33'', pp. 401.</ref> எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது.
 
[[அடோல்ப் ஹிட்லர்|அடோல்ப் ஹிட்லரின்]] [[ரூர்]], ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக [[செக்கோசிலோவாக்கியா]] ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக [[நாசி ஜெர்மனி]]யின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை [[ஜெர்மன் ரெய்க்]], சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938-39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது.
 
ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக மோலடோவ்-ரிபன்ட்ரொப் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது.
 
சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது.<ref>{{cite web| title = World War II| publisher = Encyclopædia Britannica | accessdate =9 March 2008 | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|முக்கிய களமாக]] மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-43 குளிர்காலத்தில் நடைபெற்ற [[சுடாலின்கிரட் சண்டை|ஸ்டாலின்கிராட் போரிலும்]],<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II | publisher =Encyclopædia Britannica|accessdate=12 March 2008|title=The Allies' first decisive successes: Stalingrad and the German retreat, summer 1942 – February 1943}}</ref> 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோவியைச் சந்தித்தனர். [[லெனின்கிராட் முற்றுகை]]யும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை.<ref>[http://www.cambridge.org/gb/knowledge/isbn/item1173696/?site_locale=en_GB The Legacy of the Siege of Leningrad, 1941–1995]. Cambridge University Press.</ref> ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் [[வட கொரியா]]விலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.
 
[[File:Convert ru kosmos077.jpg|thumb|upright|விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான [[யூரி ககாரின்]]]]
 
இரண்டாம் உலகப்போரின் 1941-45 காலப்பகுதி ரசியாவில் ''பெரும் நாட்டுப்பற்றுப் போர்'' எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6&nbsp;மில்லியன் ராணுவத்தினரும், 15.9&nbsp;மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite book|author=Erlikman, V.|title=Poteri narodonaseleniia v XX veke : spravochnik|year=2004|id=Note: Estimates for Soviet World War II casualties vary between sources|isbn=5-93165-107-1|publisher=Russkai︠a︡ panorama|location=Moskva}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும்.<ref>Geoffrey A. Hosking (2006). "''[http://books.google.com/books?id=CDMVMqDvp4QC&pg=PA242 Rulers and victims: the Russians in the Soviet Union]''". Harvard University Press. p. 242. ISBN 0-674-02178-9</ref> சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது.<ref>{{cite web|title=Reconstruction and Cold War|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/12.htm|accessdate=27 December 2007}}</ref> ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது.
 
போருக்குப் பின், [[செஞ்சேனை]], [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|கிழக்கு ஜெர்மனி]] உட்பட கிழக்கு ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக் கொண்டது. தங்கியிருக்கும் சோசலிச அரசாங்கங்கள் கிழக்குப்பகுதிக் கண்காணிப்பு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. உலகின் இரண்டாவது அணுவாயுத நாடாக உருவான சோவியத் ஒன்றியம், [[வார்சோ உடன்படிக்கை]]யை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] ஆகியவற்றுடன் [[பனிப்போர்]] என அறியப்பட்ட, உலக ஆதிக்கத்துக்கான போட்டியுள் இறங்கியது. உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு, சோவியத் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியது. இவற்றுள் புதிதாக உருவான [[சீன மக்கள் குடியரசு]], [[வட கொரியா|கொரிய சனநாயக மக்கள் குடியரசு]] மற்றும் [[கியூபா|கியூபக் குடியரசு]] போன்றனவும் அடங்கும். குறிப்பிடத்தக்களவு சோவியத் வளங்கள், ஏனைய சோசலிச நாடுகளுக்கு, உதவியாக ஒதுக்கப்பட்டது.<ref>[http://rs6.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field%28DOCID+su0391%29 Foreign trade] from ''A Country Study: Soviet Union (Former)''. [[Library of Congress Country Studies]] project.</ref>
 
ஸ்டாலினின் மரணத்துக்குப்பின், குறுகியகால கூட்டுத்தலைமையின் கீழ், புதிய தலைவரான [[நிக்கிட்டா குருசேவ்]], ஸ்டாலினின் கொள்கைகளை விமர்சித்ததோடு, ஸ்டாலின்மய ஒழிப்புக் கொள்கைகளைச் செயற்படுத்தினார். தொழிலாளர் வதை முகாம்கள் ஒழிக்கப்பட்டன. பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர். (இவர்களுல் பலர் இறந்திருந்தனர்.)<ref>{{Cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,916205-2,00.html|work=TIME|accessdate=1 August 2008|title=Great Escapes from the Gulag|date=5 June 1978}}</ref> பொதுவான அடக்குமுறைக் கொள்கைகளின் தளர்வு, பின்பு குருசேவ் தளர்வு என அழைக்கப்பட்டது. இதேவேளை, துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜூபிட்டர் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை மற்றும் [[கியூபா ஏவுகணை நெருக்கடி|கியூபாவில் சோவியத் ஏவுகணைகள்]] வைக்கப்பட்டமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுடனான முறுகல்நிலை அதிகரித்தது.
 
[[File:Mir on 12 June 1998edit1.jpg|left|thumb|சோவியத் மற்றும் ரசிய [[விண்வெளி நிலையம்|விண்வெளி நிலையமான]] [[மிர்]].]]
 
1957ல், சோவியத் ஒன்றியம் உலகின் முதல் [[செயற்கைக்கோள்|செயற்கைக்கோளான]] [[ஸ்புட்னிக் 1]]ஐ ஏவியதன் மூலம் விண்வெளி யுகத்தை ஆரம்பித்தது. ரசிய [[விண்ணோடி|விண்வெளி வீரரான]] [[யூரி ககாரின்]] ஏப்ரல் 12, 1961 அன்று, [[வாஸ்ட்டாக் 1]] விண்கலத்தில் புவியை வலம்வந்து, விண்வெளியை வலம்வந்த முதல் மனிதரானார்.
 
1964ல் குருசேவின் ஓய்வைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டுத் தலைமை ஆட்சி நடைபெற்றது. இறுதியில் [[லியோனிட் பிரெஷ்னெவ்]] தலைவராக ஆனார். 1970கள் மற்றும் முன் 1980கள், தடங்கல் யுகம் என அழைக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்ததோடு, சமூகக் கொள்கைகள் தடங்கலுற்றன. சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவில் [[பரவலாக்கம்|பன்முகப்படுத்தல்]] மற்றும் பெருங் கைத்தொழில் மற்றும் ஆயுத உற்பத்தியை, சிறுகைத்தொழில் மற்றும் நுகர்வோர் பண்டங்களாக மாற்றுதல் என்பவற்றை நோக்காகக் கொண்ட, 1965ன் கோசிஜின் சீர்திருத்தம் பழைமைவாத கொம்யூனிசத் தலைமையால் தடுக்கப்பட்டது.
 
1979ல், [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] கொம்யூனிஸ்டுகள் தலைமையிலான புரட்சியின் பின், புதிய தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க [[ஆப்கான் சோவியத் போர்|சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானினுள் நுழைந்தன]]. இதனால் ஆப்கானிஸ்தானின் வளங்கள் சுரண்டப்பட்டதோடு, எந்தவிதமான கருதத்தக்க அரசியல் திருத்தங்களும் ஏற்படவில்லை. இறுதியாக, சர்வதேச எதிர்ப்பு, (அமெரிக்க ஆதரவுடனான) கொம்யூனிச எதிர்ப்பு கெரில்லாப் போர் மற்றும் சோவியத் மக்களின் ஆதரவின்மை என்பன காரணமாக 1989ல் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது.
 
1985இலிருந்து, சோவியத் முறைமையில் தாராளவாத சீர்திருத்தங்களை ஏற்படுத்த விரும்பிய , இறுதி சோவியத் தலைவரான [[மிக்கைல் கோர்பச்சோவ்]], ''கிளாஸ்னொஸ்ட்'' (திறந்தநிலை) மற்றும் ''[[பெரஸ்ட்ரோயிகா]]'' (மீள்கட்டமைப்பு) ஆகிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத் தடங்கல் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாங்கத்தை சனநாயக மயப்படுத்தவும் அவர் முயற்சித்தார். எவ்வாறாயினும், இக்கொள்கைகள் காரணமாக வலுவான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. 1991க்கு முன், சோவியத் பொருளாதாரம் உலகளவில் இரண்டாவது நிலையில் காணப்பட்டது.<ref>{{cite web|url=http://www.umsl.edu/services/govdocs/wofact90/world12.txt|publisher=[[Central Intelligence Agency]]|accessdate=9 March 2008|title=1990 CIA World Factbook}}</ref> எனினும், அதன் இறுதிக் காலத்தில், பலசரக்குக் கடைகளில் பொருள் பற்றாக்குறையாலும், பாரிய பாதீட்டுப் பற்றாக்குறையாலும், பாரிய பணச்சுற்றோட்டம் காரணமாக பணவீக்கத்தாலும் அல்லலுற்றது.<ref>{{cite web|url=http://www.photius.com/countries/russia/economy/russia_economy_unforeseen_results_o~1315.html|title=Russia Unforeseen Results of Reform|publisher=The Library of Congress Country Studies; CIA World Factbook|accessdate=10 March 2008}}</ref>
 
1991ன் போது, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதனால் பால்டிக் குடியரசு நாடுகள் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லத் தீர்மானித்தன. மார்ச் 17ல், பொது வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியத்தை புதிய கூட்டரசாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகஸ்ட் 1991ல், கோர்பச்சேவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிசக் கட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க, கோர்பச்சேவின் அரசாங்க உறுப்பினர்கள் புரட்சியொன்றை நடத்தினர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டிசம்பர் 25, 1991ல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது.
 
==அரசியல்==
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1224751" இருந்து மீள்விக்கப்பட்டது