சம்மு (நகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

01:03, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

சம்மு நகர் சம்மு பகுதியின் பெரிய நகராகும். சம்மு காசுமீரின் குளிர்கால தலைநகரான இந்நகர் தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மாநகராட்சியான இந்நகரின் எல்லைக்குள் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் பழைய பள்ளிவாசல்களும் நிறைய உள்ளதால் இந்நகரம் கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது. இது சம்மு காசுமீர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய அதிக மக்கள் தொகையுள்ள நகராகும்.

அமைப்பு

இந்நகரம் 32°44′N 74°52′E / 32.73°N 74.87°E / 32.73; 74.87.[1] என்ற புள்ளியில் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள இந்நகர் சிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கு, தென்கிழக்கில் சிவாலிக் மலைத்தொடராலும் வடகிழக்கில் திரிகுடா மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது. புது தில்லியில் இருந்து 600கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Falling Rain Genomics, Inc - Jammu
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு_(நகர்)&oldid=1224964" இலிருந்து மீள்விக்கப்பட்டது