முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
[[அடோல்ப் ஹிட்லர்|அடோல்ப் ஹிட்லரின்]] [[ரூர்]], ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக [[செக்கோசிலோவாக்கியா]] ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக [[நாசி ஜெர்மனி]]யின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை [[ஜெர்மன் ரெய்க்]], சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938-39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது.
 
ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[மோலடோவ்-ரிபன்ட்ரொப்ரிப்பன்டிராப் உடன்படிக்கைஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது.
 
சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது.<ref>{{cite web| title = World War II| publisher = Encyclopædia Britannica | accessdate =9 March 2008 | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|முக்கிய களமாக]] மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-43 குளிர்காலத்தில் நடைபெற்ற [[சுடாலின்கிரட் சண்டை|ஸ்டாலின்கிராட் போரிலும்]],<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II | publisher =Encyclopædia Britannica|accessdate=12 March 2008|title=The Allies' first decisive successes: Stalingrad and the German retreat, summer 1942 – February 1943}}</ref> 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோவியைச் சந்தித்தனர். [[லெனின்கிராட் முற்றுகை]]யும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை.<ref>[http://www.cambridge.org/gb/knowledge/isbn/item1173696/?site_locale=en_GB The Legacy of the Siege of Leningrad, 1941–1995]. Cambridge University Press.</ref> ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் [[வட கொரியா]]விலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.
3,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1225208" இருந்து மீள்விக்கப்பட்டது