பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
'''நெப்போலியன் பொனபார்ட்''' (''Napoléon Bonaparte'', [[15 ஆகஸ்ட்]] [[1769]] – [[5 மே]] [[1821]]) அல்லது '''முதலாம் நெப்போலியன்''' [[பிரான்ஸ்]] நாட்டின் படைத் தலைவனாகவும், [[அரசியல்]] தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் [[பிரெஞ்சுப் புரட்சி]]யில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், [[பிரெஞ்சுப் பேரரசன்]], இத்தாலியின் மன்னன், [[சுவிஸ் கூட்டமைப்பு|சுவிஸ் கூட்டமைப்பின்]] இணைப்பாளன், [[ரைன் கூட்டாட்சி]]யின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
 
[[கோர்சிக்கா]]வில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான [[முதலாம் கூட்டணி]] மற்றும் [[இரண்டாம் கூட்டணி]]களுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.<ref name="Schom 1998">{{cite book|last=Schom|first=Alan|title=Napoleon Bonaparte|year=1998|publisher=HarperPerennial|location=New York|isbn=0-06-092958-8|edition=1. HarperPerennial}}</ref> தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய [[நண்பர்]]களையும், [[உறவினர்]]களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.
 
[[1812]] இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் [[1813]] இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. [[1814]] ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி [[எல்பா]]த் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் [[1815]] [[ஜூன் 18]] இல் [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ]] என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த [[சென் ஹெலெனா]]த் தீவில் கழிந்தது.
 
==பிறப்பும் கல்வியும்==
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, [[கோர்சிக்கா]]வில் உள்ள [[அசாக்சியோ]] என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு [[செனோவாக் குடியரசு|செனோவாக் குடியரசால்]] பிரான்சுக்கு வழங்கப்பட்டது.<ref>McLynn 1998, p.6</ref> இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான்.<ref name=dwyerxv>Dwyer 2008, p.xv</ref> கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், [[தசுக்கன்]] மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர்.<ref>''The court and camp of Bonaparte'', J & J Harper, 1832, p. 17,[http://books.google.it/books?id=bDsVAAAAYAAJ&pg=PA17&lpg=PA17&dq=bonaparte+family+origin+tuscany&source=bl&ots=Qba7JWjrbP&sig=XhV4oDkeIHXkQjbB0u7nlRwVOQ4&hl=it&sa=X&ei=hexaUOGGEo_AtAaOwICABA&ved=0CDYQ6AEwAjgK#v=onepage&q&f=false Google Book]]</ref><ref>Ida M. Tarbell, ''A Short Life of Napoleon Bonaparte'', Kessinger Publishing, 2005, p. 1,[http://books.google.it/books?id=J1E9AdNENHkC&pg=PA1&lpg=PA1&dq=bonaparte+family+origin+tuscany&source=bl&ots=BtBWqx34FN&sig=8mSOiKQ02n7RBYnuDi0zY5pMBD4&hl=it&sa=X&ei=hexaUOGGEo_AtAaOwICABA&ved=0CFwQ6AEwCTgK#v=onepage&q=bonaparte%20family%20origin%20tuscany&f=false Google Book]</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=zNNBAAAAIAAJ&q=napoleon+%22lombard+stock%22&dq=napoleon+%22lombard+stock%22&hl=no&ei=x20xTtiYHMiF-wbFoZ2RDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4&sqi=2&ved=0CDYQ6AEwAw |title=The other conquest |publisher=Google Books |accessdate=3 August 2011}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=aeVAPShsbTMC&pg=PA17&dq=napoleon+%22lombard+origin%22&hl=no&ei=9XMxTq2qLIzt-gbJrKXqDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=lombard&f=false |title=French Fortifications, 1715–1815|publisher=Google Books |date=30 November 2009 |accessdate=3 August 2011}}</ref> இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் [[லிகூரியா]]வில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர்.<ref>McLynn 1998, p.2</ref> 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது..<ref>{{cite web|author=lefigaro.fr |url=http://www.lefigaro.fr/mon-figaro/2012/01/15/10001-20120115ARTFIG00193-selon-son-adnles-ancetres-de-napoleon-seraient-du-caucase.php |title=Le Figaro&nbsp;– Mon Figaro : Selon son ADN,les ancêtres de Napoléon seraient du Caucase! |work=Le Figaro |date=15 January 2012 |accessdate=20 February 2012}}</ref> இந்த ஆய்வுகளின்படி, [[ஆப்லோகுரூப் வகை E1b1c1]] கிமு 1200 ஆம் ஆண்டளவில் [[வட ஆப்பிரிக்கா]]வில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.<ref>{{cite web|url=http://www.ccsenet.org/journal/index.php/jmbr/article/view/10609/ |title=Haplogroup of the Y Chromosome of Napoléon the First; Gerard Lucotte, Thierry Thomasset, Peter Hrechdakian; ''Journal of Molecular Biology Research'' |date=December 2011 |accessdate=18 February 2012}}</ref>
இவனது தந்தை [[கார்லோ பொனப்பார்ட்டே]] ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் [[பிரான்சின் பதினாறாம் லூயி|16 ஆம் லூயியின்]] அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் [[லெட்டிசினா ராமோலினோ]] ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.<ref>Cronin 1994, pp. 20–21</ref> நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, போலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.<ref>Harvey, R. ''The War of Wars'', Robinson, 2006. p. 58-61.</ref> நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, [[அசாக்சியோ பேராலயம்|அசாக்சியோ பேராலயத்தில்]] திருமுழுக்குப் பெற்றான்.<ref>{{cite web|url=http://www.napoleon.org/en/magazine/museums/files/Cathedral-Ajaccio.asp|title=Cathedral—Ajaccio|publisher=La Fondation Napoléon|accessdate=31 May 2008}}</ref>
 
பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்விகற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன.<ref>Cronin 1994, p.27</ref> 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தான். மே மாதத்தில், [[பிரையேன்-லே-சத்து]] என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தான்.<ref name="rxvi"/> இவன் அதிக கோர்சிக்கத் தொனியுடனே [[பிரெஞ்சு மொழி]]யைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் அவன் கற்றுக்கொள்ளவேயில்லை.<ref>McLynn 1998, p.18</ref> இதனால் இவன் அவனது உடன் [[மாணவர்]]களது கேலிக்கு உள்ளானான். [[கணிதம்|கணிதத்தில்]] திறமை பெற்றிருந்ததோடு, [[வரலாறு]], [[புவியியல்]] ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது.
 
== மரணத்தின் காரணம் ==
நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் [[ஆர்செனிக்]] நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பிரெஞ்சுப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது