வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 45:
 
==வரலாறு==
[[File:William Henry Jackson-Tuticorin.jpg|thumb|left|200px|வில்லியம் என்றி சாக்சன் வரைந்த பழங்காலத் துறைமுகக் காட்சி]].]][[தூத்துக்குடி]] பல நூற்றாண்டுகளாகவே முத்து வளர்ப்பிற்கும் கடல்சார் வணிகத்திற்கும் பெயர்பெற்றிருந்தது. மிகுந்த வளமிக்க பின்னிலத்தையும் இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டிருந்த இங்கு துவக்கத்தில் மர தூண் துறைகளும் பின்னர் திருகாணி தூண் துறைகளும் கட்டப்பட்டன. தொடருந்து இணைப்பு ஏற்பட்டபின்னர் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் முனைப்பாகத் தொடங்கின. 1868ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஓர் நங்கூரம் பாய்ச்சி கப்பல்கள் நடுக்கடலில் இருக்க படகுகள் மூலம் நிலத்துடன் தொடர்பு கொண்ட நங்கூரத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே பல மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
 
இங்கு பெருகி வரும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடியத் துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டது. புதியதாகக் கட்டப்பட்ட தூத்துக்குடித் துறைமுகம் 1974ஆம் ஆண்டு சூலை 11 அன்று இந்தியாவின் பத்தாவது முதன்மைத் துறைமுகமாக திறக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டில் அதுவரை இயங்கிய தூத்துக்குடி சிறு துறைமுகமும் புதியதாகக் கட்டப்பட்ட பெரிய துறைமுகமும் இணைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிர்வாகத்தில் வந்தன.
"https://ta.wikipedia.org/wiki/வ.உ._சிதம்பரனார்_துறைமுக_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது