பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
நெப்போலியன், புரட்சியின் தொடக்கக் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டான். அப்போது அரசவாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தான். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் பரடைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினான். அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் "கப்டன்" தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது.<ref>McLynn 1998, p.55</ref>
 
நெப்போலியன் கோர்சிக்காவுக்குத் திரும்பியபோது பவோலியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பவோலி பிரான்சிலிருந்து பிரிய முடிவு எடுத்ததுடன், சார்டினியத் தீவான லா மத்தலேனேவில் பிரான்சு நடத்தவிருந்த தாக்குதலின்போது நாசவேலைகளைச் செய்யவும் அவர் திட்டமிட்டார். ஆனால், பிரான்சின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் நெப்போலியனும் ஒரு படைத்தலைவனாகப் பங்கேற்க இருந்தான். பவோலியுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டினால் நெப்போலியன் தனது குடும்பத்துடன் பிரான்சுத் தலைநிலத்துக்குத் தப்பி ஓடினான்.
 
== மரணத்தின் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது