ஓரவை முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Unibicameral Map.svg|400px|thumb|{{legend|#38b4d8|[[ஈரவை]] முறையுள்ள நாடுகள்.}}{{legend|#f09c30|'''ஓரவை''' முறை உள்ள நாடுகள்.}}{{legend|#333333|எந்த அவைகளும் இல்லாத நாடுகள்.}}]]
[[அரசாங்கம்]] ஒன்றில், '''ஓரவை முறைமை''' (''unicameralism'') என்பது ஒரு [[சட்டவாக்க அவை]]யை மட்டும் கொண்ட [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்ற]] முறைமையைக் குறிக்கிறது. இந்த ஓரவை முறைமை பொதுவாக சிறிய அல்லது ஒரு சீரான ஒற்றையாட்சி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. [[ஈரவை|இரண்டாவது]] சட்டவாக்க அவை இவ்வாறான நாடுகளுக்குத் தேவையற்றது எனக் கருதப்படுகிறது.
 
==கோட்பாடு==
சமூகம் ஒன்றின் பல்வேறு சமூகங்களினதும் எதிர்பார்ப்புகளைக் கவனத்தில் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட சட்டவாக்க அவைகள் சில நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் வேறுபட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் (ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம், [[பிரான்சு]] போன்றவை), இனங்கள் மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகள், அல்லது [[கூட்டாட்சி]] ஒன்றின் துணைக்கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவ்வாறான பிரதிநிதித்துவம் முக்கியமல்லாமல் போகும் நாடுகளில் ஓரவை ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. [[இலங்கை]], [[நியூசிலாந்து]], [[டென்மார்க்]] போன்ற நாடுகளில் இரண்டாவது சட்டவாக்க அவையான [[மேலவை]] அகற்றப்பட்டது. [[சுவீடன்]] போன்ற நாடுகளில் [[ஈரவை|இரண்டு அவைகள்]] இணைக்கப்படு ஓரவை ஆனது. வேறும் சில நாடுகளில் ஓரவை முறையே எப்போதும் இருந்து வந்துள்ளது.
 
பொதுவாக [[பொதுவுடைமை]] நாடுகளில், [[சீன மக்கள் குடியரசு]], [[கியூபா]] போன்ற [[பொதுவுடைமை]] நாடுகளில் ஓரவை முறையே நடைமுறையில் உள்ளது. இதே போல் முன்னாள் பொதுவுடைமை நாடுகளான [[உக்ரைன்]], [[மல்தோவா]], [[செர்பியா]] போன்றவை ஓரவை முறையிலேயே தொடர்ந்து இயங்குகின்றன. அதே வேளையில், [[உருசியா]], [[போலந்து]] போன்றவை கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் [[ஈரவை]] முறையைத் தேர்ந்தெடுத்தன. சோசலிசக் கண்ணோட்டத்தின் படி [[மேலவை]] முறை [[பழைமைவாதம்|பழமைவாத]] அடிப்படையிலானது எனக் கருதப்படுகிறது. இவறில் சமூகத்தின் மேல் வகுப்பினரின் விருப்புகளையே இவை நிறைவேற்றுவதாக சோசலிசவாதிகள் கருதுகின்றனர்.
 
==இவற்றையும் பார்க்க==
*[[ஈரவை|ஈரவை முறைமை]]
 
[[பகுப்பு:அரசாட்சி முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரவை_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது