[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பீஜாப்பூரில்பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். [[1961]] ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு [[1977]]ல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.