நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
 
நவூருவில் இயற்கை நன்னீர் வளம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் [[உப்பகற்றல்]] முறை மூலமே நன்னீரைப் பெற்று வருகின்றனர். நவூருவின் காலநிலை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை [[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவப் பெயர்ச்சி]] மழை காணப்படுகிறது. ஆனாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன. ஆண்டு மழைவீழ்ச்சி அளவு இங்கு பெரிதும் மாறுபடுகின்றது, ஆனாலும் [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு|எல் நீனோ-தெற்கத்திய அலைவினால்]] வரண்ட காலநிலை இங்கு பெருமளவு பதியப்படுகின்றது.<ref name = "UNCCD"/><ref>{{cite book|title=Affaire de certaines terres à phosphates à Nauru|year=2003|publisher=International Court of Justice|isbn=9789210709361|pages=107–109}}</ref> வெப்பநிலை பொதுவாக பகல் நேரத்தில் {{convert|26|°C|°F}} முதல் {{convert|35|°C|°F}} வரை ஆகவும், இரவு நேரத்தில் {{convert|22|°C|°F}} முதல் {{convert|34|°C|°F}} வரை ஆகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.cawcr.gov.au/projects/PCCSP/pdf/6. Nauru GH poster.pdf |title=Pacific Climate Change Science Program |accessdate=10 June 2012|publisher=Government of Australia}}</ref>
 
==பொருளாதாரம்==
பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் வழியாக 1980களில் நவூருவின் பொருளாதாரம் உச்சநிலையில் இருந்தது. மேலும் சில வளங்கள் அங்கு காணப்பட்டாலும், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்பட்டன.<ref name=state/><ref>{{cite web|publisher=BBC|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/332164.stm|title=Big tasks for a small island|accessdate=10 மே 2006}}</ref> பொசுப்பேட்டு வளம் குன்றி வருவதால் தற்போது சிறிய அளவிலேயே பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் நடைபெறுகின்றது.<ref name=state/> சிஐஏ தரவுநூலின் படி, நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2005 ஆம் ஆண்டில் $5,000 ஆக இருந்தது.<ref name="CIA"/>
 
தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரச ஊழியர்கள் ஆவர்.<ref name=CIA/><ref name="Economist">{{cite news|url=http://www.economist.com/displaystory.cfm?story id=884045|title=Paradise well and truly lost|newspaper=[[தி எக்கொனொமிஸ்ட்]]|date=20 திசம்பர் 2001|accessdate=2 மே 2006}}</ref> [[சுற்றுலா]]த் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை.<ref name=pitic>{{cite web|url=http://www.pitic.org.au/index.php?option=com content&task=view&id=62&Itemid=118|accessdate=19 June 2012|publisher=Pacific Islands Trade and Investment Commission|title=Nauru}}</ref> 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது.<ref>{{cite news|url=http://www.theage.com.au/news/national/nauru-fears-gap-when-camps-close/2007/12/10/1197135374481.html|title=Nauru fears gap when camps close|author=Topsfield, Hewel|newspaper=தி ஏஜ்|date=11 திசம்பர் 2007|accessdate=19 சூன் 2012}}</ref> இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது