வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 26:
சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம் என்பதால் [[1907]] இல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்கள். ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற அக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும், வைணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது. அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டனர். வைத்த மாநிதி என்பது அக்குடும்பத்தினரின் குலதெய்வமான [[திருக்கோளூர்]] பெருமானின் பெயராகும். முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊராகும். கோதைநாயகிக்கும் திருமணத்துக்குப் பின்னர் ‘வை.மு.’ என்ற குடும்பப்பெயரை இணைத்து வை.மு. கோதைநாயகி என அழைத்தனர். கோதை நாயகியின் வெற்றிக்கு அவரது செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதி தான். திருமணத்தின்போது கோதைநாயகி பள்ளி சென்று படித்தவரில்லை. பார்த்தசாரதி, அவரைக் கல்வி கற்கச் செய்தார். கோதைநாயகி, தனது மாமியாரிடம் [[தெலுங்கு]] மொழியைக் கற்றார்.
 
==எழுத்துப் பணி==
கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. ஆனால், வீட்டில் எப்போதும், [[திருவாய்மொழி]], [[பாசுரங்கள்]] பாடிக்கொண்டிருப்பார். இதனால் அவருக்கு தமிழ்நடை சரளமாக வரத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழங்கதைகளைச் சொல்லி வந்தார். சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கற்பனைக் கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. இதனைக்கண்ட அவரது கணவர் அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு அவரைப் பல [[நாடகம்|நாடகங்களுக்கு]] அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து ரசித்த கோதைநாயகிக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
 
சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, ''இந்திர மோகனா'' என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை [[இந்து]], [[சுதேசமித்திரன்]], நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தை பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.
 
கோதைநாயகி, நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் ''அருணோதயம், வத்சகுமார், தயாநிதி'' என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவை. இவ்வாறு, கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதர படைப்புகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது