களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." <ref>புலியூர்க் கேசிகன், 2002. பக். 189 (அகநானூறு 199)</ref>என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார். இந்த [[நன்னன்]] கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட அரசன். சிறந்த வள்ளல். [[கடம்பின் பெருவாயில்]] இவனது தலைநகர். போர் [[வாகைப்பெருந்துறை]] என்னுமிடத்தில் நடைபெற்றது.
==பதிற்றுப்பத்து பாடல் தரும் செய்திகள்==
*நன்னனை வென்று அவனது காவல்மரமான வாகைமரத்தை வெட்டி வீழ்த்தினான். இந்த வெற்றிக்குப் பின்னர் [[நேரி மலை]]யைத் தொழுதான். <ref>பதிற்றுப்பத்து 40</ref>
*[[நெடுமிடல்]], [[கொடுமிடல்]] ஆகியோரை வென்றான். <ref>பதிற்றுப்பத்து 32</ref>
*[[தோட்டி மலை]]யை வென்றான். <ref>பதிற்றுப்பத்து 38</ref>
*தன் மக்கள் குடிபெயர்வதைத் தடுத்தான். <ref>துளங்குகுடி விழுத்திணை திருத்தி – பதிற்றுப்பத்து 31</ref> <ref>துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி – பதிற்றுப்பத்து 32</ref>
*[[வண்டன்]] காவல் புரிந்த [[தூங்கெயில்]] போல் செல்வ வளம் மிக்கவன். <ref>பதிற்றுப்பத்து 31</ref>
*நகைவர்க்கு (மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கலைஞர்களுக்கு) அரண். <ref>பதிற்றுப்பத்து 31, 37</ref>
*இவன் மனைவி செம்மீன் (அருந்ததி விண்மீன்) போலக் கற்புடையவள். <ref>பதிற்றுப்பத்து 31</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/களங்காய்க்கண்ணி_நார்முடிச்சேரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது