மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 1:
 
 
'''மணியம்மையார்''' என அறியப்பட்ட ''அரசியல்மணி'', திராவிடர் கழகத்தின் தலைவர் [[ஈ. வெ. இராமசாமி|பெரியார் ஈ. வெ. இரா.]]தம் இரண்டாவது மனைவி ஆவார். பெரியாரின் மறைவிற்குப் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] தலைவராக இருந்தவர். சொற்பொழிவாளர்; எழுத்தாளர்.
{{Infobox revolution biography
வரி 23 ⟶ 21:
 
== இளமைக் காலம்==
மணியம்மை, [[வேலூர்|வேலூரில்]] வாழ்ந்த [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்]] தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் [[1920]]ஆம் ஆண்டு [[மார்ச்]] திங்கள் 10ஆம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் '''காந்திமதி''' என்பதாகும்.<ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்5</ref> அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான '''அண்ணல்தங்கோ''', இவருக்கு '''அரசியல்மணி''' எனப் பெயர்சூட்டினார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்152</ref> அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்து புலவர் பட்டம் பெற்றார்.
 
==பெரியார் தொண்டர் ==
[[படிமம்:Thanthai Periyar.jpg|left|200pxl|பெரியார்]]
பெரியார், “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு [[1943]]ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்6</ref> அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை '''மணியம்மை''' என அழைக்கத் தொடங்கினார்.
 
== பெரியாரோடு திருமணம் ==
பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்து]] திகழ்வார் எனக் கருதப்பட்டது. ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாக [[சுலோசனா சம்பத்|சுலோசனாவை]] மணந்ததார்; ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறி சென்னையில் குடியேறினார்; பெரியாரோடு கருத்துவேறுபாடு கொண்டு விலகியிருந்த [[கா. ந. அண்ணாதுரை|கா. ந. அண்ணாதுரையோடு]] நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே [[1949]]ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது. <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்7</ref> இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று [[1949]] – [[செப்டம்பர் 17]]ஆம் நாள் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]] தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.
 
== சொற்பொழிவாளர் ==
[[File:Maniammai book2.jpg |வலது|thumb|200px|மணியம்மையார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு]]
[[1944]]ஆம் ஆண்டில் [[சேலம்|சேலத்தில்]] நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தன்னுடைய முதற் சொற்பொழிவை நிகழ்த்தினார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்8</ref> அதன் பின்னர் தன்னுடைய இறுதிக்காலம் வரை சுயமரியாதை மாநாடு, திராவிடர் கழக மாநாடு, திராவிட மகளிர் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சொற்பொழிவுகளில் சில, ''அம்மா பேசுகிறார்'' என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.
 
== எழுத்தாளர் ==
[[File:Maniammai book1.jpg |இடது|thumb|100px|மணியம்மையார் எழுதிய நூல்]]
தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் [[கந்தபுராணம்|கந்தபுராணத்தையும்]][[இராமாயணம்|இராமாயணத்தையும்]] ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார். <ref name="”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்8<"/ref> இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை [[குடியரசு (இதழ்)|குடியரசு]], [[விடுதலை (இதழ்)|விடுதலை]], [[உண்மை (இதழ்)|உண்மை]] ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
 
மேலும் பெரியாரின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார். <ref name="”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்7<"/ref>
 
== களப்பணியும் சிறைவாழ்வும் ==
பெரியார்தம் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார்.
 
[[1948]]ஆம் ஆண்டில் [[கும்பகோணம்|குடந்தையில்]] அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார். <ref name="”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்8<"/ref>
 
[[1949]]ஆம் ஆண்டில் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார். <ref name="”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்8<"/ref>
 
“இளந்தமிழா புறப்படு போருக்கு” என்னும் கட்டுரை [[1958]]- [[சனவரி 19]]ஆம் நாள் விடுதலை இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக, அவ்விதழின் பதிப்பாளரான மணியம்மையார் கைது செய்யப்பட்டு ஒரு திங்கள் காலம் சிறையில் அடைக்கப்பட்டார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்9-10</ref>
 
[[1974]] – [[ஏப்ரல் 4]]ஆம் நாள் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. [[சென்னை|சென்னையில்]] நடந்த கிளர்ச்சிக்கு மணியம்மையார் தலைமை தாங்கினார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்11</ref>
 
[[தில்லி]]யில் [[இராம லீலா|இராமலீலை]] நடத்தி [[இராவணன்]] உருவத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் [[பக்ருதின் அலி அகமது|பக்ருதின் அலி அகமதுவும்]] இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அன்றைய தலைமை அமைச்சர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியும்]] கலந்துகொள்ளக் கூடாது என [[1974]] – [[அக்டோபர் 26]]ஆம் நாள் மணியம்மையார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைக் கண்டிக்கும் வகையில் 1974 – [[டிசம்பர்|திசம்பர்]] – 25ஆம் நாள் சென்னையில் இராவணன் லீலை திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மணியம்மையார் அக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார். [[இராமன்]], [[சீதை]], [[இலக்குவன்]] உருவங்களை அவர் தீயிட்டுக் கொளுத்தினார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்11-12</ref>
 
[[1976]] – [[ஜனவரி|சனவரி]] – 31ஆம் நாள் அறிவிக்கப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையின்]] பொழுது மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்12</ref>
 
[[1977]] – [[அக்டோபர் 30]]ஆம் நாள் சென்னைக்கு வருகைதந்த அன்றைய இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்13</ref>
[[File:Maniammai and periyar.jpg |வலது|thumb|200px|பெரியாரும் மணியம்மையாரும் காப்பகக் குழந்தைகளுடன்]]
 
== நிர்வாகி ==
 
பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் [[திருச்சி]] நகரில் உருவாக்கிய கல்வி நிறுவனங்களையும் குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மையார் திறம்பட நிர்வகித்தார். <ref name=”1”"1">இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்10</ref>
 
பெரியாரின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கட்டுக்கோப்பு சிதைந்துவிடாமல் அதனைக் காத்தார். மேலும் அவ்வியக்கத்தின் துணை அமைப்புகளையும் திறம்பட நிர்வகித்தார்.
 
== மறைவு ==
1974ஆம் ஆண்டிலிருந்த உடல்நலம் குன்றியிருந்த மணியம்மையார், [[1978]] – [[மார்ச் 3]]ஆம் நாள் மரணமடைந்தார். <ref name="”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக்கம்13<"/ref>
 
==சான்றடைவு ==
வரி 73 ⟶ 71:
 
==வெளி இணைப்புகள்==
[http://www.penniyam.com/2010/02/blog-post_22.html| மணிம்மையார் : ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - முழுமதி]
 
{{வார்ப்புரு:திராவிட அரசியல்}}
 
[[பகுப்பு:பகுத்தறிவாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது