செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
==அரசியல் வாழ்க்கை==
சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். [[இலங்கை அரசாங்க சபை]]க்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|நாடாளுமன்றத் தேர்தலில்]] [[வவுனியா தேர்தல் தொகுதி|வவுனியா]]வில் [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றத்துக்குத்]] தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> அன்றைய [[ஐக்கிய தேசியக் கட்சி]] அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறிந்த்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டம்|இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு]] ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய [[இலங்கை பிரதமர்]] [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க|டி. எசு. சேனநாயக்கா]] இவரது நடத்தை குறித்துக் கெள்விகேள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
 
1951 ஆம் ஆண்டில் [[இலங்கையின் தேசியக்கொடி]]யாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து சுந்தரலிங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name="BE">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|title=SUMMARY OF BY -ELECTIONS 1947 TO 1988|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> இலங்கையில் [[தனிச் சிங்களச் சட்டம்]] கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1955 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்காமையால் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.<ref name="BE"/> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>
 
1959 ஆம் ஆண்டில் "ஈழத் தமிழ்ர் ஒற்றுமை முன்னணி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்சு]] தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு [[தா. சிவசிதம்பரம்]] என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1960 03 19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>
 
1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் ''Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents'' என்ற நூலை வெளியிட்டு தனித் [[தமிழீழம்]] கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>{{cite web|title=The Prophesy of Mr. C. Suntheralingham|url=http://www.sangam.org/ANALYSIS/CSuntha12 20 63.htm|publisher=Ilankai Tamil Sangam}}</ref>
 
சுந்தரலிங்கம் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965 தேர்தலில்]] சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாவதாவே வந்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 தேர்தலில்]] [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] தொகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர் [[சா. ஜே. வே. செல்வநாயகம்|சா. ஜே. வே. செல்வநாயகத்துடன்]] போட்டியிட்டுத் தேற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செ._சுந்தரலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது