செப்பேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செப்பேடுகள்''' என்பது பழங்காலத்தில் மன்னர்கள்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத்(செப்பு) தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன.
 
இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை. எனவே பண்டைய மக்கள் செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் பல செப்பேடுகள் உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக மாறின. செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள் அழிக்கப்பெற்றன. இவற்றை மீறி சில செப்பேடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டன.
செப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. செப்பேடுகளை அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது. ஏனெனில் செப்பேடுகளை எடுத்துச் செல்வது எளிமையாக இருப்பதன் காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைதூரமான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.
 
==பெயர்க் காரணம் ==
செப்பேடு (செம்பு + ஏடு). 'ஏடு' என்ற பெயர் பொதுவாக எழுதப் பயன்படும் பொருளையும் சுவடியையும் குறிக்கும். எனவே செப்பேடு என்பது செம்பினால்([[தாமிரம்]]) செய்யப்பட்ட ஏட்டுச்சுவடிகளாகும். செப்பேடுகள் என்பவை தனித்தனி ஏடுகள் கொண்ட தொகுதிகளாகும்.
 
== செப்பேடுகளின் அளவுகள் ==
கூறப்பெறுகின்ற செய்திகட்கு ஏற்றவாறு செப்பேடுகள் அளவில் சிறியதாகவோ அல்லது பெரிதாகவோ அமைக்கப்படும். ஒரு செய்தியைக் கூறப் பல செப்பேடுகள் தேவைப்பட்டால் அவை ஒரே மாதிரியில்தான் அமைக்கப்படும். முதல் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டுப்பாடல் ஒன்று இவ்விதம் அமைந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘ஒத்து அமைந்த செப்பேடு’ என்று கூறும். அவ்விதமின்றி வெவ்வேறு அளவுகளிலும் அமைக்கப்படுவதுண்டு.
எல்லா செப்பேடுகளும் ஒரே அளவாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒரு அளவில் இருப்பதால் கட்டுக்கள் குலைந்து ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டால் அவைகளைப் பிரித்துத் தனித்தனி ஏடுகள் ஆக்குவது எளிமையாகும்.
 
== அமைப்பு ==
செப்பேடுகளை உருக்கி நீட்டித் தட்டியும், வெட்டியும் தேவையான அளவுள்ள செப்பேட்டை உருவாக்குவர். சதுரமாகவோ நீண்ட சதுரமாகவோ அவை அமைக்கப்படும். மேடுபள்ளம் இல்லாமல் அவை சமமாக்கப்படும். சேப்பேடுகளில் அளவுக்குத் தக்கவாறு ஒன்றோ இரண்டோ வட்ட வடிவமான துளைகள் இடுவது உண்டு. எழுதும் போது துளைகள் உள்ள இடத்தில் இடம்விட்டு எழுதுவது வழக்கம்.
== எழுத்துமுறை ==
பல உலோகங்களும் எழுதப் பயன்பட்டாலும் செம்பே மிகுதியும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. செப்பேடுகளுக்கு பெரும்பாலும் ஏடுகளின் தொடக்கத்தில் எண் இடுவது வழக்கம். தனித்தனி ஏடுகட்குத் தொடர் எண் குறிப்பது வழக்கமே தவிரப் பக்கங்களுக்கு எண்ணிடுதல் பெரும்பாலும் வழக்கம் இல்லை.
செப்பேட்டில் எழுத்துக்களை வெட்டுமுன் பளிச்சென்று தெரியும் ஒரு பொருளால் எழுத்துக்களை எழுதிய பின்னர் அதன் மீது வெட்டுவர். செப்பேட்டில் எழுத்துக்களை எழுதும் முறைக்கு வெட்டுதல், கொத்துதல், பொறித்தல் என்று கூறப்பெறும். செப்பேடுகளில் படிப்பறிவின்றிக் கொத்துதல் தொழில் வல்ல தொழிலாளர்களோ பிறரோ வரைந்த எழுத்துக்கள் மீது கொத்துவர். மெய் எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி பெறாமலும் எழுத்துக்கள் தனித்தனியாகவும் காணப்பெறும். செப்பேடுகளைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒரே படிதான் இருப்பது வழக்கம்.
 
 
==இந்தியா==
"https://ta.wikipedia.org/wiki/செப்பேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது