செப்பேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
பல உலோகங்களும் எழுதப் பயன்பட்டாலும் செம்பே மிகுதியும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. செப்பேடுகளுக்கு பெரும்பாலும் ஏடுகளின் தொடக்கத்தில் எண் இடுவது வழக்கம். தனித்தனி ஏடுகட்குத் தொடர் எண் குறிப்பது வழக்கமே தவிரப் பக்கங்களுக்கு எண்ணிடுதல் பெரும்பாலும் வழக்கம் இல்லை.
செப்பேட்டில் எழுத்துக்களை வெட்டுமுன் பளிச்சென்று தெரியும் ஒரு பொருளால் எழுத்துக்களை எழுதிய பின்னர் அதன் மீது வெட்டுவர். செப்பேட்டில் எழுத்துக்களை எழுதும் முறைக்கு வெட்டுதல், கொத்துதல், பொறித்தல் என்று கூறப்பெறும். செப்பேடுகளில் படிப்பறிவின்றிக் கொத்துதல் தொழில் வல்ல தொழிலாளர்களோ பிறரோ வரைந்த எழுத்துக்கள் மீது கொத்துவர். மெய் எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி பெறாமலும் எழுத்துக்கள் தனித்தனியாகவும் காணப்பெறும். செப்பேடுகளைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒரே படிதான் இருப்பது வழக்கம்.
 
 
== செப்பேடுகளும் படி ஓலைகளும் ==
பழங்காலத்தில் ‘ஓலை’ என்றாலே உத்தரவு, ஆணை என்று பொருள்பட்டது. முதலில் ஆணைகள் ஓலையில்தான் எழுதப்பட்டன. பின் கல்வெட்டில் தேவையானவை பொறிக்கப்பட்டன. ஓலையை (ஆணையை) ‘சிலையிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளுக’ என்ற தொடரைக் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே ஒலை முதல்படியாகவும், கல்வெட்டு இரண்டாவது படியாகவும் செப்பேடு மூன்றாவது படியாகவும் ஆகிறது. ஆவுடையார் கோவில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பெற்ற சில செப்பேடுகளை இந்தியக் கல்வெட்டுத்துறை ஆய்வு செய்துள்ளது.
அதுபோல் செப்பேடுகள் சில ஓலை நகல்களைப் பெற்றுள்ளன. ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் குறிப்பு நாட்டுப் பட்டயம், கத்தாங்கண்ணிப் பட்டயம், திருமுருகன்பூண்டிச் சாசனம் என்ற மூன்று ஓலைபட்டயங்கள் உள்ளன. அவற்றின் செப்பேடுகள் முறையே கள்ளிப்பட்டி திரு க. கு. கோதண்டராமக் கவுண்டர், கத்தாங்கண்ணி இராசாக்கவுண்டர், திருப்பூர் விஜயபுரம் வெங்கடாசலக்கவுண்டர் ஆகியோரிடம் உள்ளன.
பண்டைய செப்பேடுகள் ஓலைச்சுவடிகளை மனதில் கொண்டு சுவடி அமைப்பிலேயே செய்யப்பட்டன. பிற்காலச் செப்பேடுகள் வடிவத்தில் மாறுபட்டன. தில்லையில் காலிங்கராயன் என்னும் தலைவனால் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூவர் தேவாரம் செப்பேட்டில் பொறித்து வைக்கப்பெற்றது.
 
{{cqupte|''மூத்திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைத்த செப்பேட்டினுள் எழுதி-இத்தலத்தில்
எல்லைக் கிரிவாய் இசைஎழுதி னான்
கூத்தன்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று''}}
 
என்பது அக்கல்வெட்டுப் பாடலாம். திருப்பதியில் தெலுங்கு, வடமொழி நூல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் உள்ளன. திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள் சிலவற்றில் குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லிமாலை எழுதப்பட்டுள்ளது.
 
==இந்தியா==
"https://ta.wikipedia.org/wiki/செப்பேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது